Dinaithal - தினஇதழ்

இன்று சூரியனை கடக்கிறது ஐசான் வால் நட்சத்திரம்!

இன்று சூரியனை கடக்கிறது ஐசான் வால் நட்சத்திரம்!

இன்று சூரியனை கடக்கிறது ஐசான் வால் நட்சத்திரம்!

ஐசான் நட்சத்திரம் இன்று சூரியனுக்கு மிக அருகில் வருகிறது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் வி. கோபால்சாமி கடந்த வாரம் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தார்

சூரிய குடும்பத்தில் முதல் முதலாக நுழைந்து காட்சியளிக்கும ஐசான் வால் நட்சத்திரம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்ட் மேகப் பகுதியிலிருந்து பாதை மாறி பயணிக்கத் தொடங்கியது.

இதுவரை வந்த வால் நட்சத்திரங்களிலேயே மிக நீண்ட வால் பகுதியைக் கொண்டு பிரகாசிக்கும் நட்சத்திரம் இது.

2013 நவ. 1-ம் தேதியிலிருந்து வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரம் நவ. 28-ம் தேதி சூரியனுக்கு மிக அருகில் 1.2 மில்லியன் கி.மீ. தொலைவில் செல்கிறது.

இந்த ஐசான் வால் நட்சத்திரம் நவ. 28, 29 ஆம் தேதிகளில் எளிதாகப் பார்க்கக்கூடிய விதத்தில் காலை, மாலை இரு வேளைகளிலும் வானத்தை அலங்கரிக்கும்.

வால் நட்சத்திரம்  சூரியனின் சக்தி வாய்ந்த கதிர் வீச்சால் சுருங்கி விடாமலிருந்தால் டிசம்பர் மாதம் முழுவதும் தனது பயணத்தைத் தொடரும்.

இதை நேரடியாகவோ, தொலைநோக்கி மூலமாகவோ பார்க்கக்கூடாது.

கைகளாலோ, அட்டையிலோ சூரியனை மறைத்துவிட்டோ அல்லது ஒரு கட்டடத்தின் பின்புறம் சூரியன் இருக்கும்படி நின்று கொண்டு பார்க்கலாம்.

இதனால், யாருக்கும் ஆபத்து இல்லை. மாறாக சூரிய குடும்பம் மற்றும் புவியில் உயிர்களின் தோற்றம் பற்றிய உண்மைகளை ஆய்வின் மூலம் கண்டறியலாம் என்றார் கோபால்சாமி.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?