Dinaithal - தினஇதழ்

அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி!

அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி!

அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிஷா:4,000 கிலோ மீட்டர் தொலைவு அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் பெற்ற அக்னி-4 ஏவுகணை,  இன்று காலை ஒடிஷா கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

இது அக்னி 4 ஏவுகணையின் மூன்றாவது கட்ட சோதனையாகும். நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தொலைதூர தாக்குதல் திறன் பெற்ற ஆயுதம் தாங்கி ஏவுகணை இது என்பது குறிப்பிடத் தக்கது.

அக்னி-4 ஏவுகணை சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யக்கூடியது.

மேலும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் இந்த ஏவுகணை திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இலக்கை துல்லியமாகத் தாக்க வல்ல தொலையுணர் தன்மை கொண்டது.

இந்த அக்னி- 4 ஏவுகணை சோதனைக்கு முன்னதாக, அக்னி -5 என்ற 5,500 கி.மீ. தொலைவுக்கு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை மத்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் வடிவமைத்து இரு முறை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.

English Summary

agni 4 missile trial was success

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?