Dinaithal - தினஇதழ்

"மிருகம்" விண்கல் நாளை பூமியை கடக்கிறது!

"மிருகம்" விண்கல் நாளை பூமியை கடக்கிறது!

"மிருகம்" விண்கல் நாளை பூமியை கடக்கிறது!


மணிக்கு 50,400 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய 1000 அடி அகலம் கொண்ட "மிருகம்" என்ற புனைப்பெயர் கொண்ட விண்கல், நாளை பூமியை கடக்க உள்ளது.

நமது பூமியிலிருந்து 1.25 மில்லியன் கி.மீ. தொலைவில் கடக்க உள்ளதால், பூமிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஒருவேளை பூமி மீது இந்த விண்கல் இடிக்குமேயானால், மெகாடன்கள் அளவிற்கு வெடிப்புகள் நிகழ்ந்து, சில வினாடிகளில், ஒரு நகரமே மறைந்து போகும் அளவிற்கு சேதம் ஏற்படுமளவிற்கு பிரமாண்ட உருவத்துடன் இருப்பதால், இதற்கு "மிருகம்' என்று நாசா விஞ்ஞானிகள் புனைப்பெயர் இட்டுள்ளனர்.

இந்த விண்கல்லை 2014ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி , நாசா கண்டுபிடித்துள்ளதால், இதற்கு 2014 ஹெச்க்யூ 124 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற பிரமாண்ட அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும் விண்கற்கள் இதுவரை 1,484 கண்டறியப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?