Dinaithal - தினஇதழ்

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள்

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள்

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள்

சென்னை :பழைய மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருப்பு பணம், மற்றும் கள்ள நோட்டுகளை தடுக்கும் நோக்கிலும் வெளிக்கொண்டு வரும் நோக்கிலும் 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில்  வரும் ஜனவரி வரை பழைய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் எனவும் அதனை வங்கிகளும் வணிக நிறுவனங்களும் பொது மக்களிடம் வாங்க மறுக்கக் கூடாது எனவும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் வாங்க மறுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அவர்களிடம் கேட்டால் மாற்றுவதற்கு எங்களுக்கு வந்த உத்தரவுபடி தான் நாங்கள் செய்ய முடியும் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர் கடை ஊழியர்கள்.

மேலும் இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். எழுத்து மூலமாக புகார் அளித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

English Summary

shopping centers does not accept old currency notes













 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?