Dinaithal - தினஇதழ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்கள்: விரைவில் விற்பனை

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்கள்: விரைவில் விற்பனை

மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து விற்பனை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் குறைந்த விலை செல்ஃபோன்கள் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இதில் கணிசமான பங்கு வகிக்கும் வகையில் குறைந்த விலை செல்ஃபோன்களை விற்பனை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தயாராகி வருவதாக அந்நிறுவனத்தின் அதிகரிகள்  தெரிவித்துள்ளனர்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்தின் செல்ஃபோன் வணிகத்தை மைக்ரோசாஃப்ட் வாங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட்டுள்ள அதன் மூலம் செல்ஃபோன் தயாரிப்பை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விண்டோஸ் இயங்குதள அடிப்படையில் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்களை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை: மைக்ரோசாப்ட்

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தன்னிடம் உள்ள மக்களின் தகவல்களை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடேன்.

இதிலிருந்து பிற நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்தது அம்பலமானது.

இந்நிலையில் மக்களை உளவு பார்ப்பதற்கு அமெரிக்காவுக்கு மைக்ரோசாப்ட் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து, மக்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி ஏதேனும் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே குறிப்பிட்ட தகவல்களை நடைமுறையின்படி அளித்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Published inஉலகம்

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?