Dinaithal - தினஇதழ்

எனக்கு பெண்களின் மூளையை விட உடல் தான் பிடிக்கும்: ராம்கோபால் வர்மா

எனக்கு பெண்களின் மூளையை விட உடல் தான் பிடிக்கும்:  ராம்கோபால் வர்மா

எனக்கு பெண்களின் மூளையை விட உடல் தான் பிடிக்கும்: ராம்கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா:

பெண்களின் உடல் தான் பிடிக்கும். அவர்களின் மூளை பிடிக்காது என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்துள்ளார்.

பாடகி மற்றும்  நடிகையும்  ஆன சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ரான் மற்றும் மை ஒயிப்ஸ் மர்டர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சுசித்ரா தான் எழுதிய புத்தகம் ஒன்றில் இயக்குனர் ராம் கோபால் வர்மா பற்றி சில கருத்துகளை எழுதியுள்ளார்.

அதில் ராம் கோபால் வர்மாவை திருமணம் செய்ய நான்  விரும்பியதாகவும், இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பிய சுசித்ராவை ராம் கோபால் வர்மா சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய ராம்  நீ என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். நாம் வெவ்வேறு குணம் கொண்டவர்கள். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. நான் பெண்களை உறவுக்கு மட்டும் தான் பயன்படுத்துவேன்.

எனக்கு பெண்களின் உடல் மட்டும் தான்  பிடிக்கும். அவர்களின் மூளை பிடிக்காது என்று  ராம் கோபால் வர்மா தெரிவித்ததாக தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மாவிடம் அனுமதி பெற்றே இதனை எழுதியதாகவும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?