Dinaithal - தினஇதழ்

மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் துக்கத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை

மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் துக்கத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). இவரது மனைவி கவுதமி (30). இவர்களுக்கு 3½ வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் நாகராஜ் குடும்பத்துடன் திருப்பூர் சூசையாபுரம், விநாயகர் கோவில் வீதியில் உள்ள ஒரு காம்பவுண்டில் குடியேறினார். இங்கு சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைசெய்து வந்தார். நாகராஜூக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கிடைக்கும் வருமானத்தை குடித்தே செலவு செய்ததாகவும், வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மகனை குமாரபாளையத்தில் உள்ள அக்காள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் கவுதமிக்கும் வேறு ஒருநபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 1 மாதத்துக்கு முன் கவுதமி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். இதனால் மனம் விரக்தியடைந்த நாகராஜ் மேலும் குடிக்கத் தொடங்கினார்.

நேற்று இரவு நாகராஜ் அதிக போதையில் வீட்டுக்கு வந்தார். கதவை சாத்தினார். டி.வி.யை ஆன் செய்து, சத்தத்தை அதிகப்படுத்தினார். டி.வி. சத்தம் விடியவிடிய கேட்டது. விடிந்ததும் அக்கம் பக்கத்தினர் நாகராஜை அழைத்தனர். வீட்டில் இருந்து பதில் எதுவும் வரவில் டி.லை. சரிவி. பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த பகுதி கவுன்சிலர் கீதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கதவை தட்டியபோது உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. பின்னர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

அங்கு நாகராஜ் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ண வேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கதவை திறக்க முடியாததால் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர். பின்னர் தாழ்ப்பாளை திறந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது. அதில் ‘என் சாவுக்கு எனது மனைவி கவுதமியே காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?