Dinaithal - தினஇதழ்

டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்:

  • Published inவேலூர்
  • Print

டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்:

டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்:

குடியாத்தம் டிஎஸ்பி மற்றும் கிராம காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மீது கல்மடுகு கிராமத்தைச் சேர்ந்த திரளானோர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

 கிராமத்தினர் அளித்த மனு:
 எங்கள் ஊரில் காலனியைச் சேர்ந்த சிலர் குடித்துவிட்டு, கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போது கேலி செய்கின்றனர்.

 அதேபோல் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த காலனி தரப்பை சேர்ந்தவர் பெண்ணை இடித்து விட்டுச் சென்றார்.
 இதை தட்டிக் கேட்டதால், காலனியைச் சேர்ந்த சுமார் 30 பேர் எங்களை தாக்கினர்.

 இதுதொடர்பாக புகார் தெரிவிக்க குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்துக்கு சென்றபோது காவல் ஆய்வாளர் கண்டுகொள்ளவில்லை.

 காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்தபோதும் அவரும் எங்களை மிரட்டுகிறார்.
 பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

English Summary:

Rural people on DSP and inspector complained to the Collector :

Kutiyattam DSP and inspector of rural police station in the village of kalmatuku tiralanor Collector and Superintendent of Police has filed a complaint in the office on Wednesday .
kudiyatham
villagers to the petition :
 
Some of our Colony in the town drunk , young women in the village school , go to college when you are joking .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?