Dinaithal - தினஇதழ்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.400 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தார்:

  • Published inவேலூர்
  • Print

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.400  கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி  இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தார்:

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.400  கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி  இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தார்:

தமிழ்மொழி வளர்ச்சிக்கு 2 ஆண்டுகளில் ரூ.400 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் திரு.கோ.விசயராகவன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம், திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய முப்பெரும் விழாவுக்கு, கல்லூரி முதல்வர் வ.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

கவிஞர் முகில்வண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட தமிழ்ச் சங்கச் செயலாளர் கவிஞர் நல்ல.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

விழாவில் அண்மையில் மாலத்தீவு நாட்டில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் திரு .பா.இந்திரராஜன் தலைமையிலான அறிஞர்களைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த வடமாதிமங்கலம் புலவர் சிகாமணி எழுதிய ஆதி உண்மை சிலப்பதிகாரம் என்ற நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் வெளியிட்டார்.  மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயரங்கன் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.400 கோடிக்கு மேல் தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது.

இந்த நிதியைக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

விழாவில், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை நிர்வாகி குணா, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் பா.குப்பன், மாவட்ட தமிழ்ச் சங்கப் பொருளாளர் மா.சின்ராஜ், பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English Summary:

Rs 400 crore allocated for the development of Tamil Nadu Government and Director of the World tamilaraycci . Vicayarakavan said :

Rs 400 crore for the development of Tamil Nadu Government allocated in 2 years as Director of the company Mr. tamilaraycci  Vicayarakavan said .

Tiruvannamalai district of Tamil Sangam , Tiruvannamalai Government Arts and Science College mupperum by the ceremony , Principal of the college . Mani headed .

I topped mukilvannan . District Secretary of Tamil Sangam poet good . Big welcomed .

Festival recently held in the Maldives in Tiruvannamalai district of Tamil  Sangam attend the conference Chairman . Boyle . Intirarajan led scholars praised the award.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?