Dinaithal - தினஇதழ்

உனக்கு 65 எனக்கு 70 இதல்லவா காதல்

  • Published inஈரோடு
  • Print

உனக்கு 65 எனக்கு 70 இதல்லவா காதல்

ராஜா (70) ராணி (65) இதல்லவா தமிழ்நாட்டு காதல்

போலியோவால் பாதிக்கப்பட்ட கணவரை, 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்துக் காப்பாற்றிய மூதாட்டி, முதியோர் ஓய்வூதியம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.
ஈரோடு எல்லபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவரது மனைவி பழனியம்மாள் (65). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 40 ஆண்டுகளுக்கு முன் போலியோவால் ஆறுமுகம் பாதிக்கப்பட்டதில் கை-கால் மற்றும் இடுப்பு பகுதி செயலிழந்து போய்விட்டது.

கணவரின் நிலை கண்டு கலங்கிய பழனியம்மாள், யாருடைய ஆதரவும் இல்லாத நிலையிலும் கணவரை வீல் சேரில் அமர வைத்து அதில் கயிற்றைக் கட்டி இழுத்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சையெடுத்துக் காப்பாற்றி வந்தார். பல ஆண்டுகளாக கணவரை வீல் சேரில் இழுத்துச் சென்றதால் இவரது கைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், அவர் ஈரோட்டில் அநாதையாக விடப்பட்ட 2 பெண், ஒரு ஆண் குழந்தைகளையும் வளர்த்து வந்தார். இவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
தன்னால் வளர்க்கப்பட்டு அவர்களுக்கு வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்த பழனியம்மாள், அவர்களின் உதவியையும் நாடாமல் தொடர்ந்து தன்னந்தனியாகவே கணவரைக் காப்பாற்றி வந்தார்.
இந்நிலையில், பழனியம்மாளின் கணவர் அக்.25-ஆம் தேதி இறந்துவிட்டார். தனக்கு ஒரே ஆதரவாக இருந்த கணவரும் இறந்துவிட்டதால் அவர் இடிந்து போனார்.

இதனால், பழனியம்மாள் தனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இம் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 40 ஆண்டுகளாக கணவர், எடுத்து வளர்த்த குழந்தைகளுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்த இந்த மூதாட்டிக்கு உடனடியாக முதியோர் ஓய்வூதியம் வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?