Dinaithal - தினஇதழ்

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம்: தமிழக பாஜக. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம்:  தமிழக பாஜக. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம்:  தமிழக பாஜக. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்த் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடம் ஆதரவு கேட்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்  இன்று தெரிவித்தார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில்‘வீடு தோறும் மோடி’,

‘உள்ளம் தோறும் தாமரை’

என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வருகிற 12ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.

நரேந்திர மோடி தலைமையில் சர்தார் வல்லபாய் படேல் இரும்பு சிலை 597 அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இரும்பு சேகரிக்கும் பணி வருகிற 28ஆம்தேதிக்குள் முடிவடைகிறது. 28ஆம் தேதி சென்னையில் இருந்து குஜராத்திற்கு லாரிகள் மூலம் இரும்புகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

வரும் 31ஆம் தேதி தமிழகத்தில் மீனவர்களின் துயர் தீர்க்கும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ராமேஸ்வரம் பாம்பனில் கடல் தாமரை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.

மேலும் இந்திய அளவில் மோடி அலை நன்றாக உள்ளது. தமிழகத்திலும் அந்த அலை முழுமையாக உள்ளது. வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைத்துள்ளோம். அவர் வருகை தேதி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.

வரும் நாடாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே பிரதமர் மன்மோகன்சிங், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை எனக்கூறி உள்ளார்.

அவரின் விலகல் நாட்டிற்கு நல்லது தான். ஏனென்றால் அவர் காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக தான் இருந்துள்ளார். அவர் நல்ல மனிதர், திறமை படைத்தவர் தான். ஆனால் செயல்பட முடியாமல் இருந்து விட்டார்.

பாஜக. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பா.ம.க.வுடன் ஏற்கனவே பேசி உள்ளோம். ம.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தேமுதிக.வுடன் கூட்டணி குறித்து பேசிவருகிறோம்.
தேமுதிக. எங்கள் கூட்டணிக்கு வரும் என நம்பிக்கை உள்ளது.

ரஜினிகாந்த் உட்பட தமிழகத்தில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடம் ஆதரவு கேட்க உள்ளோம். இதனால் பலமான அணியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொள்ளும் என்றார்.

English Summar

we will ask rajinikanth for his support in coming elections says pon radhakrishnan bjp tamilnadu leader

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?