Dinaithal - தினஇதழ்

தனியார் ஆக்கிரமிப்பில் குடிநீர் தொட்டி: நெல்லை மேயரிடம் பொதுமக்கள் புகார்

தனியார் ஆக்கிரமிப்பில் குடிநீர் தொட்டி: நெல்லை மேயரிடம் பொதுமக்கள்  புகார்

தனியார் ஆக்கிரமிப்பில் குடிநீர் தொட்டி: நெல்லை மேயரிடம் பொதுமக்கள் புகார்

நெல்லை மாநகராட்சி 45 வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டியை தனியார் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சி சார்பில் 45 வது வார்டு, ஆண்டாள்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிறுமின்விசை குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு, 3 குடிநீர் இணைப்புகளும் வைக்கப்பட்டது.

மேலும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது தெரு ஓரமாக உள்ள இந்த குடிநீர் தொட்டியை அருகில் வசிப்பவர் ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய வீட்டுக்கு அதில் இருந்து குடிநீரை பயன்படுத்தி வருகிறார்.

நெல்லை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள்,  மேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

English Summary

water tank under control of private people gave complaints to nellai mayor













 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?