Dinaithal - தினஇதழ்

திருநெல்வேலி திரையரங்கு வளாகத்தில் இன்று பயங்கர தீ

திருநெல்வேலி திரையரங்கு வளாகத்தில் இன்று பயங்கர தீ

திருநெல்வேலி திரையரங்கு வளாகத்தில் இன்று பயங்கர தீ

நெல்லை:  திருநெல்வேலியில் அமைந்துள்ள பூர்ணகலா திரையரங்கம் அருகில் உள்ள வணிக வளாகங்களில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பூர்ணகலா திரையரங்கம் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

அதில், புகைப்படங்களுக்க பிரேம், சட்டங்களை விற்பனை செய்யும் மொத்தக் கடையும், ஜெராக்ஸ், பிரிண்டிங் தொர்பான கடைகளும் உள்ளன.

பிரேம் கடையின் கிடங்கில் இன்று காலை 11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பக்கத்து கடைகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்து குறித்து அறிந்ததும் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். கடைகளுக்குப் பரவிய தீ மிக பயங்கரமாக எரிந்தது.

படத்தை நிறுத்திவிட்டு, திரையரங்கம் மீது தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்தது. இதற்கிடையே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாளையங்கோட்டை, பேட்டை பகுதிகளில் இருந்து 3 வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன.

மேலும் சம்பவம் நடந்த பகுதிக்கு மிக அருகே ஈரடக்கு பாலம் உள்ளது. தீ விபத்துக் காரணமாக, இந்த ஈரடக்கு பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல், நின்றது.

அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரப்பாக காணப்பட்டது.

English Summary

fire accident in nellai

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?