Dinaithal - தினஇதழ்

திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாளில் தெப்போற்சவம்

திருச்செந்தூர் மாசித்திருவிழாவில்  11-ம் நாளில் தெப்போற்சவம்

திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாளில் தெப்போற்சவம்

திருச்செந்தூரில் மாசித்திருவிழா 11-ம் நாளில் தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித்திருவிழா இம்மாதம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  

மேலும் அன்று இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். ஞாயிற்றுக்கிழமை  மாலையில் யாதவர் மண்டகப்படியில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி சப்பரத்தில் எழுந்தருளி இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தெப்பத்தில் எழுந்தருளி  11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பல திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

English summary

tiruchendur masi magam festival celebrated








 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?