Dinaithal - தினஇதழ்

லஞ்சம் வாங்கிய 2 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக நிரந்தர பணி நீக்கம்

  • Published inசேலம்
  • Print

லஞ்சம் வாங்கிய 2 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக நிரந்தர பணி நீக்கம்


லஞ்சம் வாங்கிய 2 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக நிரந்தர பணி நீக்கம்

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக காவல்துறை ஆய்வாளர்கள் 2 பேரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி.,யாக இருந்த அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சேந்தமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் கருணாநிதி,மற்றும் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சித்ரா இவர்கள் இருவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி.,யாக இருந்த அமல்ராஜ் உத்தரவுகளை அளித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு கருணாநிதி, சித்ரா ஆகியோர் நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்கும் பிரிவில் ஒன்றாக பணியாற்றிய போது, நில அபகரிப்புத் தொடர்பாக புகார் தாரரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் புகார் பதிவு செய்யப்பட்டுது.

மேலும் இந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதில், இருவரும் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இருவரும் நிரந்தரமாக காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

English summary

2 two police inspectors have been dismissed for getting bribe

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?