Dinaithal - தினஇதழ்

திருப்பதியை ஆந்திராவின் தலைநகராக மாற்ற வேண்டுகோள்!

திருப்பதியை ஆந்திராவின்  தலைநகராக மாற்ற வேண்டுகோள்!

திருப்பதியை ஆந்திராவின் தலைநகராக மாற்ற வேண்டுகோள்!

ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க உள்ளதாக திருப்பதி எம்.பி. சிந்தாமோகன் தெரிவித்தார்.

1953-இல், நேரு மற்றும் எம்.ஜி.ரங்கா திருப்பதியை ஆந்திர தலைநகராக ஏற்படுத்த முடிவு செய்தனர்.

ஆனால், அந்த நேரம் நீலம் சஞ்சீவிரெட்டி கர்ணூலை, ஆந்திரத்தின் தலைநகராக அறிவித்தார்.

அதன் பின் ஹைதராபாத் தலைநகராக மாற்றப்பட்டது.

60 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி திருப்பதியை மீண்டும் புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டும்.

மேலும் அதற்காக, அடுத்த 15 நாள்களில், திருப்பதி மக்கள் மற்றும் திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களிடம் கையொப்பம் பெற்று, திருப்பதியை தலைநகராக அமைக்க வேண்டும் என, விண்ணப்ப மனு ஒன்றை தயார் செய்து, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

English Summary

announce tirupathi as the capital of andra pradesh

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?