Dinaithal - தினஇதழ்

5 வயது சிறுமி பலாத்கார வழக்கில் 60 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை

  • Published inவேலூர்
  • Print

5 வயது சிறுமி பலாத்கார வழக்கில் 60 வயது  முதியவருக்கு 7 ஆண்டு சிறை

5 வயது சிறுமி பலாத்கார வழக்கில் 60 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, வேலூர் மகளிர் கோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தார்.

வேலூர் வாணியம்பாடி அடுத்த பட்டுவாம் பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை வயது (60) விவசாயி. இவர், கடந்த ஜூலை, 12ம் தேதி, தன் வீட்டுக்கு எதிரில் வசிக்கும், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் இதுதொடர்பாக ஆம்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்தனர்.

வேலூர் மகளிர் கோர்ட்டில், இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீர் அகமது, அண்ணாமலைக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

English summary

7yrs prison announced for 60 yrs man who raped 5yrs girl

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?