Dinaithal - தினஇதழ்

மதுரையில் மீண்டும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு:

  • Published inமதுரை
  • Print

மதுரையில் மீண்டும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு:

மதுரையில் மீண்டும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு:

மதுரை மேலூர் அருகே உத்தங்குடியில் சென்ற மாதம் 11ஆம் தேதி பல்பொருள் அங்காடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பல்பொருள் அங்காடியில் குண்டு வைத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

க்யூ பிரிவு போலீசாரால், கைது செய்யப்பட்டவர்கள் தமிழர் விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று பகல் 12 மணிக்கு விமான நிலையம் அருகே உள்ள வில்லாபுரம் வாசுகி தெருவில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததும், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அதனை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். குண்டு வெடித்திருந்தால் அப்பகுதியில் பெரும்சேதத்தை விளைவித்திருக்கும் என்று பெரும் பீதியில் உள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English summary

new bomb found in madurai














 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?