Dinaithal - தினஇதழ்

திருமலை காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக  வனப்பாதுகாப்பு செயலாளர் தகவல்

திருமலை காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக வனப்பாதுகாப்பு செயலாளர் தகவல்

திருமலை - திருப்பதி வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக, ஆந்திர மாநில முதன்மை வனப்பாதுகாப்பு செயலாளர் சோமசேகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டி.என்.பாளையம் என்ற பகுதியில் காட்டுத் தீ இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் மட்டும்‌ தீ பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதன்மை வனப்பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை திருப்பதி கோயிலுக்கு அருகிலுள்ள காக்குல கொண்டா வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.

டெல்லியிலிருந்து 3 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

தீயினால் திருமலையில் 300 ஹெக்டர் பரப்பளவு சேதமடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary

tirumalai forest fire under control

திருப்பதி உண்டியலில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் பாதி விலைக்கு ஏற்பு

திருப்பதி உண்டியலில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் பாதி விலைக்கு ஏற்பு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் சேரும் காணிக்கையில்,கிழிந்த மற்றும் சேதமான ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி பாதி மதிப்பிற்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

திருமலை திருப்பதி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் சேரும் சேதமடைந்த, கிழிந்த ரூபாய் நோட்டுகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.

மேலும் இதுப்படி 21 மூட்டைகள் நிறைய செல்லாத நோட்டுகள் குவிந்ததை அடுத்து, கோயில் நிர்வாகம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இது குறித்து ஆலோசித்தது.

வங்கி அதிகாரிகள், ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு, அவை பெருமளவில் சேதடைந்த நிலையில் இருந்ததால், அவற்றை பாதி மதிப்பிற்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். அதை திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஏற்றுக்கொண்டது

இதைதொடந்து  சேதமான பணத்தைப் பெற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி, பாதி மதிப்பிலான தொகையை திருமலை தேவஸ்தான வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டது.

English Summary

old spoiled notes have been replaced

திருப்தி -திருமலையில் இலங்கை அமைச்சர் :

திருப்தி -திருமலையில் இலங்கை அமைச்சர் :


திருப்தி -திருமலையில் இலங்கை அமைச்சர் :

திருமலை ஏழுமலையானை தரிசிக்க இலங்கை அமைச்சர் திருமலைக்கு இன்று மாலை வந்தார்.

ஏழுமலையானை தரிசிக்க, இலங்கை, மக்கள் தொடர்பு மற்றும் பொது விவகாரத்துறை அமைச்சர், மெர்வின் சில்வா திருமலைக்கு வந்தார்.

 சென்ற முறை, திருமலைக்கு வந்த, இலங்கை அதிபருக்கு, கருப்பு கொடி காட்ட தமிழகத்திலிருந்து பலர் திருப்பதிக்கு வந்தனர் அதனால் அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சென்னை சர்வேதேச விமான நிலையத்திலிருந்து, 2 எஸ்கார்ட் வண்டிகளும், திருப்பதியிலிருந்து ஒரு வண்டி என 3 வண்டிகள் அமைச்சரின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும்,ஏதும் சொல்ல விரும்பவில்லை என்ற பதிலையே அவர் கூறினார்.

மேலும் இன்று இரவு, திருமலையில் தங்கும் அவர், நாளை, சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

English Summary

srilankan minister visits tirupathi tirumalai

திருப்தி - திருமலை கோவிலில் நம்பி உற்சவம்!


திருப்தி - திருமலை கோவிலில் நம்பி உற்சவம்!

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை மாலை திருமலை நம்பி உற்சவம் நடைபெற்றது.

திருமலையில் மார்கழி மாதம் தொடங்கி இராபத்து, பகல் பத்து உற்சவம் சனிக்கிழமையுடன், நிறைவுப் பெற்றது.

மேலும் அதற்காக திருமலை தெற்கு மாட வீதியில் உள்ள திருமலை நம்பிகள் கோயிலுக்கு உற்சவ மூர்த்தியான மலையப்பஸ்வாமி தன் நாச்சியார்களுடன் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மாலை உற்சவ மூர்த்திகளுக்கு ஸஹஸ்ர தீபாலங்கார சேவை நடைபெற்றது.

ஆயிரகணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

English Summary

tirupathi tirumalai namami urchavam festival

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?