Dinaithal - தினஇதழ்

உள்துறை செயலாளர் மாற்றத்துக்கு பின்னணி என்ன?

c21dnirnதமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழக உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால், திடீரென்று நேற்று மாற்றப்பட்டு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழக தலைவராக மாற் றப்பட்டுள்ளார். மாநில அரசில் தலைமை செய லாளருக்கு அடுத்து முக்கியமான பதவி உள்துறை செயலாளர் பதவிதான்.

தமிழக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து துறை, மதுவிலக்கு ஆகிய பிரிவுகள் உள்துறை செயலாளருக்கு கீழ் இயங்கும். அவரை விட சீனியராக உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி.பி.யாக இருந்தாலும் கூட, அவரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்துறை செயலாளருக்கு உண்டு. இப்படிப்பட்ட உயர் அதிகாரம் படைத்த பதவியில் இருந்து ராஜகோபால் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் ஏன் மாற்றப்பட்டார் என்பது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: ராஜகோபால் மிக கண்டிப்பானவர் என பெயர் எடுத்தவர். அதே சமயம், தான் சொன்னதை மட்டுமே மற்ற அதிகாரிகள் கேட்க வேண்டும் என்று கருதுபவர். அவருக்கும், உள்துறையில் பணியாற்றிய மற்ற அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவியது.  இதனால், உள்துறையில் ஏராளமான பைல்கள் தேங்கத் தொடங்கின. குறிப்பாக, போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் கடந்த 4 மாதத்துக்கு மேலாக உள்துறையில் தேங்கியிருக்கிறது.

உள்துறை செயலாளருக்கும் டிஜிபி அலுவலக அதிகாரிகளுக்கும் இதனால் மறைமுகமாக ஏற்பட்ட பனிப்போர், நேரடியாக மோதிக் கொள்ளும் அளவுக்கு மாறியது.
டிஜிபி பரிந்துரைத்த பதவி மாற்ற பட்டியலை அவர் திருத்தி உத்தரவு போட்டுள்ளார். மேலும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து பைல்கள் அனைத்துமே ஏதாவது விளக்கங்கள் கேட்டு அடிக்கடி திருப்பி அனுப்பப்படும். இது பற்றி, உளவுத்துறையில் இருந்து முதல்வருக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

கடைசியாக, காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் யாசின்மாலிக், கடலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிச் சென்றுள்ளார். யாசின் மாலிக் வந்த தகவல், உள்துறைச் செயலாளர் மூலமாக முதல்வருக்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டது. ஆனால், உள்துறைச் செயலாளர் அந்த விஷயத்தில் வேகமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தடைசெய்யப்பட்ட கூட்டத்தில் யாசின் கலந்து கொண்டு பேசியதோடு, போலீசுக்கு தெரியாமல், டெல்லி வழியாக காஷ்மீர் சென்று விட்டார். இப்போது யாசின் மாலிக் பேச்சு குறித்து தமிழக தலைமை செயலாளருக்கு, மத்திய உள்துறையில் இருந்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான், உள்துறைச் செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இந்த மாற்றத்தை தொடர்ந்து தமிழக போலீசிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?