Dinaithal - தினஇதழ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைகிறது ; தா. பாண்டியன் வெளியேறுகிறார் ?

pandianஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லி எம்.பி.யாக இருப்பவர் டி.ராஜா. அவரது பதவிக்காலம் வரும் ஜுலை மாதத்தோடு முடிவடைகிறது. அந்த இடத்தில் புதியதாக யாரை நியமிப்பது என்ற போட்டி ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை டி.ராஜாவுக்கே மீண்டும் பதவி என்றது. அதற்கு தமிழக பிரிவின் செயலாளராக இருக்கும் தா. பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் ஒருவருக்கே பதவி கொடுக்கும் போக்கு சரியல்ல என்பது அவர் தரப்பு வாதம்.

இந்திய கம்யூனிஸ் கட்சியில் தற்போது எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிமுக ஆதரவில் ஒரு எம்.பி. சீட்டு கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து. இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என கூறுப்பட்டது. அதன் பேரில் ஓ.பன்னீர் செல்வமும், விசுவநாதனும் தா. பாண்டியனை சந்தித்து கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு  ஒரு எம்.பி. பதவியை கொடுக்க ஆதரவு தருவதாக கட்சி மேலிடம் முடிவெடுத்திருப்பதை தெரிவித்திருக்கிறார்கள்.

சிக்கலே இங்கிருந்துதான் தொடங்கியது. “அ.தி.மு.க. தரப்பில் எனனிடம்தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். என்னைதான் அந்த பதவிக்கு போட்டியிடச் சொல்கிறார்கள். எனக்குதான் ஆதரவு தருவதாக கூறினார்கள். எனவே எனக்குதான் அந்த எம்.பி. பதவி தரவேண்டும்” என்று தா. பாண்டியன் எதிர்ப்பு குரலை எழுப்பியிருக்கிறார். ஆனால கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமையோ டி.ராஜாவுக்குதான் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. கட்சியின் மூத்த உறுப்பினரான தோழர் நல்லகண்ணுவும் “டெல்லி தலைமை சொல்வதே சரி. கட்சியில் தனி நபரின் முடிவை ஏற்க முடியாது. மத்திய குழு கூடி யாரை முடிவெடுக்கிறதோ அவருக்குதான் பதவி. தனி நபர்களின் முடிவை ஏற்க முடியாது” என கூறியிருக்கின்றார்.

 இதனால் அதிர்ப்தியடைந்த தா. பாண்டியன் கடந்த வாரம் கட்சியில் உள்ள தன் ஆதரவாளர்களுடன் தனியாக ஒரு ரகசிய கூட்டம் நடத்தி ஆலோசித்துள்ளார். அதில் அவருக்கு பெரும்பான்மை ஆதரவு என முடிவானது. மொத்தம் உள்ள எட்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தா. பாண்டியனின் முடிவுக்கு ஆதரவாக நிற்கின்றார்கள். அதனால் அந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுடனும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனும் கட்சியை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்திருக்கிறார். அதனையொட்டி அ.தி.மு.க.வுடன் இறுதி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க மேலிடமும் தா. பாண்டியனுக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளது.

இதனையடுத்து தா.பாண்டியன் விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பிரிவு இரண்டாக உடைகிறது. இதில் பாதிக்கும் மேலான சடடமன்ற உறுப்பினர்கள் தா.பா.வோடு வெளியேறுவதால் கட்சித் தாவல் தடை சட்டமும் பாயாது. ஆக தா.பாண்டியன் தரப்பு அ.திமு.க.வோடு நிற்கப்போகிறது. மீதம் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேறு வழியின்றி தி.மு.க.விற்கு துணை நிற்கும் சூழல் உறுவாகியுள்ளது. அ.தி.மு.க. ஆதரவோடு தா. பாணடியன் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பதே இறுதி தகவல்.

பாட்டாளி மக்களின் கொள்கைகளை மட்டுமே உள்வாங்கிக்கொண்ட ஒரு தேசிய பொதுவுடமை இயக்கம், சாதாரண ஒரு எம்.பி. பதவிக்காக இப்படி இரண்டாக உடைய இருப்பது வேதனையான ஒன்று என்கிறது அரசியல் வட்டாரம்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?