Dinaithal - தினஇதழ்

அனைத்து 'வசூல்' அரசியல் கட்சிகளிற்கு கடிவாளம் .

rightநேற்றைய ஒரு தீர்ப்பு  இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தீர்ப்பாக இருக்கிறது .
அனைத்து அரசியல் கட்சிகளின் வசூல் நடவடிக்கைகளும் , அவர்களின் செலவு கணக்குகளையும் , தேர்தல் தொடர்பாக  கட்சிகளின்  அனைத்து கணக்குகளையும் , பொது மக்களின் யார் ஒருவர் கேட்டாலும்   அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டும் என்பதே  மத்திய தகவல் ஆணையத்தின்(Central Information Commission (CIC)) தீர்ப்பு .

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தைச்(Association of Democratic Reforms) சேர்ந்த சமூக ஆர்வலர்களான சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பெய்ர்வால் ஆகியோர், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்( INC/AICC, BJP, CPI(M), CPI, NCP and BSP ) ஆகிய 6 அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  அவர்களது செலவினனங்களை, கட்சிக்கு வருமான வழிகளை  பற்றி அறிந்து கொள்ள கடிதம் எழுதி இருந்தனர்.

ஆனால், அரசியல் கட்சிகள் ஆர்டிஐ-RTI (Right to information Act) சட்ட வரம்புக்குள் வராது எனக் கூறி, 6 கட்சிகளும் தகவல் தர மறுத்தன.

சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பெய்ர்வால் ஆகியோர் இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தனர். இந்த மனுவை தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிஸ்ரா, தகவல் ஆணையர் எம்.எல். சர்மா மற்றும் அன்னபூர்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

 

இந்த மனு மீதான விசாரணையின்போது, தங்களது மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில் 3 முக்கிய வாதங்களை பெய்ர்வால் முன் வைத்தார்.குறிப்பாக, மத்திய அரசிடம் மறைமுகமாக நிதியுதவி பெறுவதால் அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உள்பட்டவையே என கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட அமர்வு, தகவல் உரிமை சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டவையே என உத்தரவிட்டுள்ளது.

 

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட( INC/AICC, BJP, CPI(M), CPI, NCP and BSP )  6 தேசிய கட்சிகள் மத்திய அரசின் நிதியுதவியை மறைமுகமாகப் பெற்று வருவதாகவும், ஆர்டிஐ சட்டத்துக்கு உள்பட்டு செயல்படும் அரசு அமைப்புகளுக்கு உள்ள சிறப்பம்சங்கள் அரசியல் கட்சிகளுக்கு உள்ளதாகவும் CIC கூறியுள்ளது.

மேலும், தங்களது தலைமை அலுவலகங்களில் மத்திய பொதுத் தகவல் அதிகாரியையும் (சிபிஐஓ), மேல் முறையீட்டு அதிகாரிகளையும் 6 வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்றும், ஆர்டிஐ சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளCentral Public Information Officer(CPIO)-க்களுக்கு CIC அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஆர்டிஐ சட்டத்தின்படி, மனுதாரர்கள் கேட்டுள்ள விவரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

 பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது அரசியல் கட்சிகளின் பணியாக உள்ளதால், ஆர்டிஐ சட்டத்தின் 2(ஹெச்)ஆவது பிரிவின் கீழ் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பு எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் வருவதால் அரசியல் கட்சிகளின் வெளிப்படையான செயல்பாடு உறுதி செய்யப்படுவது மட்டுமல்லாமல், ஜனநாயகமும், ஜனநாயக அமைப்புகளும் வலுவடையும் என ஆணையம் கூறியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பதையும், தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்வதற்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதையும் இந்த அமர்வு சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறு மறைமுகமாக அரசின் நிதியுதவியைப் பெறும் அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்டத்துக்கு உள்பட்டு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளன என்று சிஐசி அமர்வு கூறியுள்ளது.

 

இந்த புதிய தீர்ப்பு மூலம் என்னென தகவல்களை பெறலாம் ?

அரசியல் கட்சிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம் .

அவர்களின் மாநாட்டு செலவு ,

பொது கூட்ட செலவு .

பொது கூட்டத்திற்கு ஆன  மின்சார செலவு ,

மின்சாரம் எப்படி பெறப்பட்டது என்ற செலவினங்கள் .

மின்சாரம் திருடி இருந்தால் அவர்கள் மீது புகாரும் அளிக்க இது உதவும் .

அவர்களின் செலவினங்களோடு  இல்லாமல் , அவர்களிற்கு எப்படி நன்கொடை கிடைக்கிறது என்றும் கேள்விகள் கேட்கலாம் .

எவ்வளவு பணம் நன்கொடையாக பெறப்பட்டது ;

அந்த நன்கொடையை யார் அளித்தார்கள் எனபது முதற்கொண்டு தகவல்களை பெறலாம் .

 

இது, மேலும், கருப்பு பண நடவடிக்கைக்கு வழி  வகுக்குமா அல்லது அரசியல் கட்சிகள் திருந்தி  நேர் வழியில் பயணப் படுமா   என்பதை வெகு விரைவில் அறியலாம் .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?