Dinaithal - தினஇதழ்

கூட்டணிக்கான சரியான நேரத்தை கெடுத்து கொண்ட திமுக . எங்கே சென்றது திமுக தலைவரின் ராஜ தந்திரம் ?

kanimoli-karunanidhiதமிழகத்தில் இருந்து  நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு  ஆறு உறுப்பினர்களை  தேர்ந்து  எடுத்து அனுப்ப வேண்டிய அரசியல் பணிகள் ஆரம்பித்த வேளையிலேயே , திமுக,  கனிமொழியை  அந்த பதவிக்கு என்று மனதில் வைத்து கொண்டு  தேமுதிக , பா ம க , காங்கிரஸ் என்று அனைத்து கட்சி வாக்குகளை திரட்ட ஆரம்பித்து விட்டது , கூட்டணியில் இருக்கும்  விடுதலை சிறுத்தைகளையும் கண்டு கொள்ளாமல்  பா ம க வோடு நெருக்கம் என காண்பித்து கொண்டது இதற்காகவே .

பா ம க தலைவர் ராமதாசை மருத்துவமனையில் சென்று  திமுகவின்   அடுத்த தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கனிமொழி நேரில்  பார்த்தனர் .

ஆனால் எந்த கட்சியும்  திமுகவை கண்டு கொண்டதாக தெரியவில்லை . பா ம கவும் தேர்தலை புறக்கணிக்கும் என்று சொல்லி விட்டது.

இடையில் அதிமுக  ஐந்து உறுப்பினர்களை   அறிவித்தது .  அறிவித்ததோடு மட்டும் இல்லாமல்  நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டு இல்லை தனித்து தான் போட்டி என்றும் அறிவித்தது .

இது , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜாவை எப்படியாவது  மாநிலங்கவைக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்த அந்த கட்சியையும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்போம் என்று சொல்லிவிட்ட மார்சிஸ்ட் கட்சியையும்  , திமுக பக்கம் இழுக்க மிக  சரியான நேரம் ; ஆனால் கருணாநிதிக்கு கனிமொழியை விட்டு விட்டு  வேறு சிந்தனை செய்ய முடியவில்லை .  அவர் கனிமொழியை ஆதரிக்கும்படிக்கு அரசியல் செய்தாரே ஒழிய , ராஜாவை ஆதரித்து  திமுக  வாக்களிக்கும் என்று சொல்லி இருந்தால் , அதற்க்கு  ஒப்பந்தமாக  வரும் நாடாளுமன்ற தேர்தலில்  இரு கம்யூனிஸ்டுகளும் திமுக அணியில் இருக்க வேண்டும் என்று  புரி நிலைக்கு வந்து அரசியல் களத்தில் வலுவான ஒரு அணியை உண்டாக்க மிகபெரிய வாய்ப்பு இருந்தது.

இது  பா ஜ கவை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரிக்கும் அதிமுகவை அக்கணத்தில் இருந்து குறை சொல்லி , மதசார்பின்மையை பேச ஒரு கூட்டணி என்று  ஒரு வலுமிக்க அரசியல் நகர்வை செய்து இருக்க முடியும் .

ஆனால் ராஜாவை ஆதரிக்க மனம் இல்லாமல் , கனிமொழியை வேட்பாளராக அறிவித்து , எப்படியும் தேமுதிக  நமக்கு வாக்களிக்கும் என்று நப்பாசை கொண்டு , அல்லது  உதறிவிட்ட காங்கிரஸ் கட்சியை மீண்டும் நம்பி இறங்கி என்று  ஒரு தெளிவற்ற அரசியல் போக்கை  நோக்கி திமுக செல்ல ஆரம்பித்து விட்டது .

கனிமொழியை  வேட்பாளராக அறிவிக்கையில் மிகபெரிய ராஜ தந்திரி ,  அவர் செய்யும் தந்திரம்  சரியாக இருக்கும் என்று நிலைப்பாடு இருந்தது உண்மை .

ஆனால் அது  திருவோணம் தங்கமுத்து  போட்டியில் இருந்து வாபஸ் ஆகி , ராஜாவை அதிமுக ஆதரிக்கும் என்ற நிலையில் , திமுக மீது பரிதாபமே ஏற்படுகிறது.

நேற்றைக்கு தேமுதிகவும் அதன் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரசின் ஆதரவை பெற தீவிரம் காட்டி உள்ளது .

காங்கிரஸ் இன் முடிவு வரும் நாடாளுமன்ற மக்களவை  தேர்தல் கணக்கை ஒட்டி மட்டுமே இருக்கும் .

காங்கிரசின் எண்ணம் எல்லாம் இப்போது யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது  தேமுதிகவா அல்லது  திமுகவா ? என்பதிலேயே உள்ளது .

இரண்டாவது  அவர்கள் முடிவு இப்படியும் எண்ணி கொண்டு முடிவு எடுக்கலாம்  , "திமுக எப்படி வேண்டும் என்றாலும் வளையும் எனவே இப்போதைக்கு 'திமுரும்' தேமுதிகவிற்கு ஆதரவு கொடுத்து விட்டு , நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கூட்டணிக்கு ஆட்கள் இல்லாமல் இருக்கும் நிலையில் திமுகவை வளைத்து போட்டு கொள்ளலாம்"

எப்படி  இருந்தாலும் 6-ஆவது இடத்துக்கு திமுக வேட்பாளர் கனிமொழி, தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது நிதர்சனம் .

 23 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள திமுகவால், அதற்கு மேல் ஒருவரைக் கூட  இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை அதுதான் கல நிலவரம் . 22 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள  தேமுதிகவிற்கு  மேலும் சில காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு  கிடைக்க வாய்ப்பு உண்டு .

ஆனால்  அரசியலில் , விலை போகும் கலாசாரத்தில் எல்லோருக்கும் விலை  உண்டு என்ற கணக்கில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் .

கனிமொழி வெற்றி பெறலாம் . பொறுத்து  இருந்து பார்ப்போம் இந்த அரசியல்  நகர்வுகளையும் இவர்கள் அனைவரின் விளையாட்டுகளையும் .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?