Dinaithal - தினஇதழ்

இளவரசன் - திவ்யா : பா ம க - வி சி க .. இத்யாதி..., சாதி அரசியல் வியாபாரிகள் .,

இளவரசன் - திவ்யா : பா ம க - வி சி க .. இத்யாதி..., சாதி அரசியல் வியாபாரிகள் .,

இளவரசன் - திவ்யா காதல் திருமணம் செய்து கொண்டார்கள் , எங்கெங்கோ ஓடி ஒளிந்து மறைந்து வாழ்ந்தார்கள் .,

அரசியலில் தாமும் முக்கிய பங்கு என்று காட்டிக்கொள்ள அலைந்து கொண்டு இருந்த சாதிய கட்சிகளிற்கும் சாதி மூலமே சமூகத்தை எப்போதும் அமைதி கொள்ள செய்யாது, அப்படியும் இப்படியும் உருட்டி, மக்களை ஏமாற்றி 'சாதி-அரசியல் ' தொழில் செய்யும் கட்சிகளிற்கும் அனைத்து இன்ன பிற இயக்கங்களிற்கும் சரியான அரசியல் சந்தை பொருளாக இளவரசன்-திவ்யா கிடைத்தனர் .

இந்த காதல் திருமணத்தை காரணம் காட்டி நத்தம் காலனி முழுவதும் எரித்து நொறுக்கப்பட்டது. அதற்க்கு காரணம் பா ம க தலைமையில் அணிவகுத்த அனைத்து சாதியினர் என்ற குற்றசாட்டை வி.சி.க வைத்தது . அது உண்மை என்பதை போலவே அரசும் அனைத்து சாதியினரை கைது செய்து அது இரண்டு சாதிக்கும் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல, அல்லது என்று காட்ட முயன்றது . அப்போதே இந்த பிரச்சினை இரண்டு குடும்ப பிரச்சினை என்ற நிலையில் இருந்து மீறி எங்கோ கட்டுகடங்காமல் போய்விட்டது.

தாம்தான் அந்த நத்தம் காலனிக்கு அதாரிட்டி என்று அந்த காலனிக்குள் பிற கட்சியினரை, பிற எந்த அமைப்பினரையும் உள்ளே புக நத்தம் காலனி மக்கள் அனுமதிக்கவில்லை, அவர்கள் வி.சி.கவை மட்டுமே நம்புகிறார்கள் என்று ஒரு அரசியல் வார்த்தையை மாநிலத்தில் பரப்பியது அல்லது காட்ட முயன்றது .

மக்களோடு மக்களாக அவ்வளவு உரிமையில் இருக்கிறார்கள் என்பது மிக நல்லதுதான் , அவர்களை நம்பிய அந்த நத்தம் காலனி மக்களை காப்பது கூட இரண்டாம் பட்சமாக இருக்கட்டும் , திருமண பிரச்சினை முழுவதும் முற்றி, நீதிமன்றத்தில் திவ்யா பிரிந்து , இளவரசன் தனிமை படுத்த பட்ட பொழுது அவரை காக்கவோ அல்லது அவருக்கு மன பயிற்சியை அளித்து அவரது மனதை தேற்றி அவரை எப்போதும் கண்காணித்து அவருடன் இரண்டு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுவை ஏன் ஏற்படுத்தவில்லை என்ற கேள்வி எல்லோருக்கும் எழாமல் இல்லை ?

இளவரசன் இறந்த பின்னர் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பிரச்சினைக்கு செல்லவிடாமல் அவரை முதலிலேயே காப்பாற்றி இருக்கலாமே ? தனிமைபடுத்தபட்டு இருந்த இளவரசன் இந்த பிரச்சினையில் மிக முக்கிய நபராயிற்றே ?

எனக்கு தெரிந்து , "திவ்யா எங்கள் வீட்டு மருமகள் " என்று வெற்று பெருமை பேசினார்களே ஒழிய , திவ்யா மருமகள் ஆக வர காரணமான இளவரசனை பற்றியோ அல்லது அவரது தனி மனநிலையை பற்றியோ 'மருமகள்' வசனம் பேசிய யாரும் கவலைப்படவில்லை என்பதை நன்கு உணரலாம் , திவ்யா, இளவரசன் வீட்டிற்கு மட்டுமே மருமகள்; அதுதான் உண்மை ஆனால் , அவர் 'எங்கள் வீட்டு மருமகள்', 'எங்கள் வீட்டு மருமகள்' என்ற சமூக பேச்சும் பிரசாரமும் , சாதிய வெறியின் உச்சமே என்பதை மறுக்க முடியாது .

அப்படி 'மருமகள்' என்று உரிமை கொண்டாடியவர்கள் , மருமகள் வர காரணமான மகனை பற்றியோ மகனின் பாதுகாப்பான வாழ்வை பற்றியோ இப்போதுள்ள சமூக சூழலை ஆராய்ந்து பேசவில்லை எனபது கண் முன் தெரியும் உண்மை.

இப்போதுள்ள சமூக சூழலை பார்க்கையில் எப்படி இளவரசன் சமூகத்தை எதிர்கொள்ளாமல் , எதிர்கொள்ள முடியாமல் இறந்தாரோ, அல்லது இறக்க வைக்கபட்டாரோ , அந்த நிலைமை, அந்த சூழல் , குழப்பம், திவ்யாவை சுற்றியும் படர்ந்தும் உள்ளதாகவே தெரிகிறது .

இரு மனங்கள் சம்பத்தப்பட்ட , இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில் இரு சாதிகளோ அல்லது அந்த சாதிகளிற்கு நாங்கள்தான் அதாரிட்டி என்று கிளம்பும் சாதி கட்சிகளோ அரசியல் தொடை தட்டி கிளம்பினால் அந்த இரு மனங்களிற்கு நிம்மதி எப்போதும் கிடைக்காது; அந்த இரு குடும்பங்களையும் பிற சூழல் நிம்மதியாக வாழ விடாது , என்பதை கண்கூடாக பார்க்கிறோம் !

அரசியல் கட்சிகளே , சாதிய அமைப்புகளே , நீங்கள் கட்டபஞ்சாயத்தை கையில் எடுத்ததை போல காதல் , திருமண பிரச்சினைகளை அணுகாதீர்கள் ..

கடப்பாறைக்கும் , கடும் பாறைக்கும், பூவுக்கும் வித்தியாசம் உள்ளது ?!

-தின இதழ் ஆசிரியர்

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?