Dinaithal - தினஇதழ்

கவிஞர் வாலிக்கு இரங்கல் தெரிவித்து நின்ற ஒட்டுமொத்த Facebook இணைய பதிவாளர்கள் !

கவிஞர் வாலிக்கு இரங்கல் தெரிவித்து நின்ற ஒட்டுமொத்த Facebook இணைய பதிவாளர்கள் !

1.Boopathy Murugesh

நல்ல கவிஞர்கள் எல்லாம் இறைவனை சேர்ந்துவிடுகிறார்கள்,
மொக்க கவிஞர்கள் எல்லாம் பேஸ்புக்கில் சேர்ந்து விடுகிறார்கள்.:(

2.Kubendran Sindu
நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!
- கவிஞர் வாலி

3.Umar Sithappu
வாலி..!!! — feeling sad.

4.Parisalkaaran Krishna Kumar
நான், உமா, என் தம்பி ராமகிருஷ்ணன், கஸின் சுப்ரமணி (கிரி), செந்தில், கனலி, சௌந்தர் - நாங்கள்

ஒன்று சேர்ந்தால் பாடுவது வாலி புராணம்தான். செந்தில் சென்ற முறை லண்டனிலிருந்து வந்தபோது,

‘அடுத்த வாட்டி வர்றப்ப அவரை நேரில் சந்திக்கணும்’ என்று திட்டம் போட்டோம்.

நண்பர் ஒருவர் மூலமாக அவரது தொலைபேசி எண்ணைப் பெற்றேன். ‘அவரோட மச்சினன்தான்

எடுப்பாரு. பேசணும்னா குடுப்பாரு” என்று சொல்லிக் குடுத்தார்.

கவிஞர் வாலி என்று காண்டாக்ஸில் அது சேர்ந்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்த எண் கிடைத்ததற்கே 10 - 15 பேருக்கு அழைத்து பெருமைப்பட்டுக் கொண்டேன்.

அதென்னவோ, வாலி என்றால் அவ்வ்வ்வ்வளவு பிடிக்கும்.

‘ராஜலக்‌ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்..
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்” என்று கமலைத் தூக்கி சிம்மாசனத்தில் வைத்து அடுத்த

அடியிலேயே

‘நாட்டிலுண்டு ஆயிரம் ராஜராஜன்தான்.
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்’ - என்று அவர் சிகரத்தில் போய் அமர்ந்து கொண்டதை

பாடலைக் கேட்ட அடுத்த நொடி பலரிடம் பகிர்ந்து கொண்டவன் நான்.

அவரைச் சந்திக்கும்போது அவர் பாணியிலேயே கவிதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று..

‘எப்போதும் அணிந்திருப்பாய் ஜிப்பா - எங்கள்
தப்பாத தமிழுக்கு நீதானே அப்பா..

மற்றவர்கள் வார்த்தைகள் பாடல்களில்
வருந்தி உட்காரும்போது
உங்கள் வார்த்தைகள்தான்
பொருந்தி உட்கார்ந்தன...

தாம்பூலம் மென்றாய்..
தமிழை வென்றாய்’ - என்றெல்லாம் போகும் அந்தக் கவிதை.

ஆனால் அவரைச் சந்திப்பது மட்டும் தள்ளிப் போய்கொண்டே இருந்தது.

எனக்கு பாஸ்போர்ட் இல்லை என்று சொல்லும்போது நண்பர்கள் நிஜமாகவா என்று கேட்பதுண்டு.

அப்போதெல்லாம் ‘வாலிக்கே பாஸ்போர்ட் இல்லை’ என்பேன். வாலியே ஒரு பேட்டியில் கிண்டலாக,

‘நான் வெளிநாடு சென்றதில்லை. எனக்குள் வெளிநாடு சென்றிருக்கிறது’ என்று சொன்னார்.

என்னென்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. நான் சந்திக்க வேண்டும் என்று

நினைத்த இரண்டு ரங்கராஜன்களும் இப்போது இல்லை.

வாலி கடைசியாக பாடலெழுதிய படம் மரியான். அவர் மரியான்தான்.

5.கவிஞர் இரவிச் சந்திரன்
என்னிடம்
சத்தமிடும் தமிழ்
வாலியிடம்
முத்தமிடும்

6.கவிஞர் இரவிச் சந்திரன்
வாலி
பட்டத்துக்கு அலையாத
பட்டத்து யானை

7.இயக்குநர் தாமிரா
ஒரு பெரியவரை இழந்தது போல் இல்லை...
ஒரு பிள்ளையை இழந்தது போல இருக்கிறது...

# கவிஞர் வாலிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

8.கவிஞர் இரவிச் சந்திரன்
வாலி
வெற்றிலை போட்டால்
வெற்றிலையில்
விதவிதமாய்
பரிமாறுவான்

9.Sivakumar Selvaraj
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

10.Sivakumar Selvaraj
வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார்.

தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது.

11.Edgar Solomonraja
நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்கள் பறந்தன

அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்த அலை அங்கே யேங்கி நின்றது...

- கவிஞர். வாலி எழுதிய மரியான் பட பாடல் வரிகள்...

அய்யாவுக்கு அஞ்சலிகள் ஆயிரம்.

12.Periyar Kumar
நினைவுகூர்வோம்!

கொடுத்தது எல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்

மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர வெறுத்திடுமா

மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்தது இல்லை

13.Pattukkottai Prabakar
நான் அவன் இல்லை - 2 படத்தில் கவிஞர் வாலியின் பாடல்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக

கதாநாயகன் அவரின் தத்துவப் பாடல்களின் வரிகளை பயன்படுத்தி தன்னை வாலி என்று சொல்லி ஒரு

பெண்ணை ஏமாற்றுவது போல வரும். எந்தெந்த பாடல்களைப் பயன்படுத்தலாம் என்று அவரின்

திரைப்பாடல்களின் தொகுப்பைப் படித்தபோது..நான் அதுவரை கண்ணதாசன் எழுதியது என்று நம்பிக்

கொண்டிருந்த பல அற்புதமான தத்துவப் பாடல்களை எழுதியிருப்பது வாலி என்பதை அறிந்து வியந்து

போனேன். அவரின் பாடல்கள் நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டு இருக்கும் வரையில் வாலி வாழ்ந்து

கொண்டிருப்பார்.

14.அரப்பா தமிழன்
தற்பொழுது கவிஞர் வாலி இறந்துவிட்டதாக செய்தி!

2013ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகிற்கு பேரிழப்பு!

பின்னணிப்பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் இராமமூர்த்தி

லால்குடி ஜெயராமன்

பின்னணிப்பாடகர் டி எம் சவுந்தரராஜன்

தமிழின இயக்குநர் மணிவண்ணன்

இப்போது கவிஞர் வாலி

வருத்தமாக இருக்கு....

15.Subramanian Ar
கவிஞர் வாலி காலமானார்...ஆழ்ந்த இரங்கல் :-(

16.John Dominic
எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப்

புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’

–கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!

....... கவிஞருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.!

17.Periyar Kumar
ஊக்குவித்தால்
ஊக்கு விற்ப்பவன் கூட
தேக்கு விற்ப்பாண்

-- வாலி

18.Parthiban Radhakrishnan
"உனக்கு ஒப்பாய்
நீயே நிப்பாய்"
மறையாது வாலி அவர்களின் புகழ்!
கடைசியாக அவர் என் அழைப்பேசியில் கூறியது "இந்த பாரதிராஜா இன்னைக்கி விகடன்ல

எழுதுறத,நான் எத்தனையோ மேடையில உன் திறமைய பத்தி சொல்லி இருக்கேன். இப்பவும் இந்த

பழுத்த பிராமணன் சொல்றேன், என் வாக்கு நிச்சயம் பலிக்கும். உலகம் வியக்குற அளவு நீ சாதிக்கப்

போறே"
பதிலுக்கு நான் "எல்லாம் உங்க ஆசிவாதம்" என்றேன் கண்களில் ஈரத்துடன்.இன்று அந்த ஈரப்பதம்

அவரோடே மேலே சென்று மேகம் உடைத்து மழையாகி விட்டது அதே கண்களில்...
எனக்கு அதிர்ஷ்டம் குறைவுதான் ஆனால் பெரியவர்களின் ஆசிர்வாதம் என்றும் குறைவில்லாமல்.

19.சகாதேவன் நித்தியானந்தன்
காலமானார் கவிஞர் வாலி

திரையுலகின் சகாப்தமான கவிஞர் வாலி தனது உடல்நல குறைவால் தனது 82 ஆவது வயதில்

காலமானார். நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத்

திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் ஆரம்பித்த கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு

மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை

மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

20.Fathima Babu
Poet Vali passed away at the age of 82...but his poems will live for ever. May his soul rest in peace. This

year the music industry seems to be losing many of its precious gems

21.Periyar Kumar
ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(கல்லை மட்டும் கண்டால்..)

--- வாலி, தசாவதாரம்

22.கோவிந்த் பழனிச்சாமி
' யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு..
நீ தானே கண்ணே! நான் வாங்கும் மூச்சு..

--ராசாத்தி உன்ன ....

-----------------------------------------------------------
'கொத்தும் கிளி இங்கிருக்க..
கோவைப் பழம் அங்கிருக்க..
தத்திவரும் கடலலையே..நீ போய்
தூது சொல்லி வாறாயோ!

தத்தி வரும் கடலலையே..
நீ போய்..தூது சொல்லி வாராயோ!

--பாட்டுக்கு பாட்டெடுத்து.....
---------------------------------------------------

அன்னாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி..
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி..
பொன்னான உலகென்று பெயருமிட்டால்..

இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..
-----------------------------------------------------------

எப்படி? எப்படி? சமன்சது எப்படி?

சக்கரை வள்ளி கிழங்கு..மாமா சமன்சது இப்படி?

---------------------------------------------------------

வாலி....உன் புகழ்..வாழி!

23.அ.சுரேஷ் குமார்
பத்மஸ்ரீ விருது, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட

பல்வேறு விருதுகளை பெற்றவர் வாலி. 82 வயதானாலும் இன்றுவரை வாலிபக் கவிஞராகவே வலம்

வந்தவர். :(

வாலிப கவிஞர் வாலி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்... :( :'(

24.John Dominic
இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண் -
நிரந்தரமாய் தேடிக்கொண்டது பழி!

25.வாலியின் பாடல்கள் பல அற்புதமானவை.. எனக்கு மிகவும் பிடித்தது 3 i can say those are my numbers

ever..
மறுபடியும் படத்தில் வரும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தளபதி படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி
புதுப்புது அர்த்தங்களில் வரும் கேளடி கண்மணிபாடகன் சங்கதி
இது மூன்றுன் மீதும் ஒரு வித craze..

26.Periyar Kumar
நினைவுகூர்வோம்!

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
.
.
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியா வந்தோர் துணிவை தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்

27.PG Saravanan
"யாரார்க்கு என்ன வேஷமோ - இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் பெறும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய்யென்று மேனியை யார் சொன்னது?".

- கவிஞர் வாலி.

28.Alex Kps
கவிஞர் வாலி அவர்கள் சற்று முன்னர் இயற்கை எய்தினார் ...
டி. எஸ். ரங்கராஜன் என்ற இயற் பெயர் கொண்டவர் கவிஞர் வாலி... தமிழ்க் கவிஞரும் தமிழ்த்

திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத்

தொகுப்புகள் புகழ் பெற்றவை. வாலிதிரைப்படங்களுக்கு 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம்

வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து

கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம்

கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த

சித்திரக்காரனாகவரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்...

29.ரங்க ராசு
உள்ள சோகத்திலேயே உச்ச சோகம் யாதெனில்,
உள்ள சோகத்திலேயே உச்ச சோகம் யாதெனில்
தன் இனம் தகர்க்கப்பட்டு இருப்பதை
ஓர் இனம் ஒராதிருப்பதுதான் ...
வெள்ளைக்கொடி விரித்தபடி
சமர்க்களம் வந்த சமாதானபுறாக்களை
சமைத்து சாப்பிட்டன சிங்களர் காளையர் படை ....
அங்கு புத்தனே நடத்துகிறான் பிரியாணிக்கடை ..
அங்கு முள் வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்
இங்கு கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்..
இது இமாலயப்பிழை இல்லை அதற்கு இணையாக இன்னொரு பிழை அது அச்சுப்பிழையாக இருந்தால்

திருத்தலாம் அதுவோ அச்சப்பிழை யாரைத்திருத்துவது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் -என் தமிழ் ஈழமே......

கவியுரங்கத்தில் கவிஞர் வாலி .
‪#‎ஆழ்ந்த‬ இரங்கல் கவிஞர் வாலிக்கு

30.Pooves Raja
காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய கவிஞர் வாலி காலமானார்....

31.திருவட்டாறு சிந்துகுமார்
வாலி,
நின் புகழ்
விண்ணிலும் மண்ணிலும்
என்றும் வாழி!

32.Gokul Raja
நன்றி Kannan Sathurapan

வைகோ சென்னையில் கல்லூரியில் பயின்றபோது அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று

வருவார் அந்த உறவினருக்கு சொந்த ஊர் சங்கரன்கோவிலுக்கு அருகிலுள்ள மீன்துள்ளியாகும் அந்த

உறவினருக்கு குடும்ப நண்பரான திரைப்படப்பாடலாசிரியர் அங்கு அடிக்கடி வருவதுண்டு அவர்தான்

வாலி அப்போதுதான் வைகோவிற்கும் வாலிக்கும்இடையே பழக்கமேற்பட்டது அப்போது எம்ஜி ஆர்

படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள் பற்றி வைகோ மிகவும் சிலாகித்துப்பேசுவாரம் , பின் வைகோவும்

வாலியும் இரு வேறு திசைகளில் பயணித்தாலும் இவர்களின் மனதில் அந்த நினைவுகள்

பசுமரத்தாணியாய்நிலைத்திருந்தன என்பதை ஒரு நடை பயண முடிவில் தீவுத்திடலில் நடந்த மதிமுக

மாநாட்டில் வைகோவின் அழைப்பை ஏற்று பங்கேற்ற கவிஞர் வாலி அவர்கள் இந்த நிகழ்வை பதிவு

செய்தார் , அந்தக்காவியக்கவிஞர் ஈழத்துப்போராட்டத்தையும் தம் கவிதையில் வடிக்கத்தவறியதில்லை

அந்த மாமனிதரின் மறைவு தமிழுக்கு ஈடற்ற இழப்பு . — feeling worried.

33.Indrajaa Absar
Irreparable lose ....
Poet vaali sir passsed away..
We miss u sir..

34.Periyar Kumar
நினைவுகூர்வோம்!

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...

கவிஞர் வாலி.

35.Joshua Isaac
என் நேசமிகு நண்பனே..
நேரிய பண்பனே..
திருமாவளவனே..
விடுதலைசிறுத்தைகளின் தலைவனே!

நீ ஐம்பது வயது அம்பேத்கர்!
நான் எண்பது வயது அய்யங்கார்!

எனக்கும் உனக்கும் உள்ள
நட்பின் நடுவே எவரும் புகார்!
எனவே எழாது புகார்!

எல்லா உயிர்க்கும்
பிறப்பொக்கும்
என தாடி வைத்த
தமிழ் பாடிவைத்தது!

அந்த தமிழ் போட்ட
தடத்திலே நடந்தவன் நான்..
வகுத்துவைத்த
வர்ணங்களை கடந்தவன் நான்!

- அண்ணன் திருமாவளவன் பொன் விழா ஆண்டு பிறந்தநாளில் (17.08.12) பெரியார் திடலில் நடந்த

கவியரங்கத்தில் காவியக் கவிஞர் வாலி அவர்கள் வழங்கிய வாழ்த்தில் ஒரு பகுதி .

நான்கு வர்ணங்களை கடந்து எங்கள் பஞ்சமர் தலைவனை அணைத்த கவிஞனுக்கு எங்கள்

மரியாதைகள்.

-இணையதள சிறுத்தைகள்

36.Alex Kps
ஆனந்த விகடன் நினைவு நாடாக்களில் வாலி எழுதியது:
’’45 ஆண்டுகளுக்கு முன்னம், என்னிடம் உதவியாளராகச் சேர மூன்று பேர் விரும்பினர்.
ஒருவர், திருவல்லிக்கேணியில் ஃபார்மஸி வைத்திருந்தவர்;இன்னொருவர் டான்ஸ் மாஸ்டர்
தங்கப்பனோடு பணிபுரிந்தவர்; மூன்றாம் நபர் - தன் கிராமத்தில் இருந்து விடாமல்
எனக்குக் கடிதம் போட்டவர்.
ஏதோ காரணங்களால் இந்த மூவரையும் என் உதவியாளர்களாக ஏற்க என்னால் ஏலவில்லை!
ஆயினும் அந்த மூவரும், தொய்யவில்லை; துவளவில்லை; நையவில்லை; நலியவில்லை! சகல
வலிகளையும் தாங்கிக்கொண்டு - வாழ்க்கை தனக்கு வாய்த்தே தீரும் என்று... புயல்களால்
வீழ்த்தவொண்ணாப்புற்களாய் நின்றனர்; வென்றனர்!
முதல் நபர் - நூறு படங்களை இயக்கியவர்; இரண்டாம் நபர் - ரஜினி, கமல் படங்களை இயக்கி
இசைகொண்டார்; மூன்றாம் நபர் - தான் இயக்கிய முதல் படத்தையே பெரிய வெற்றிப்
படமாக ஆக்கியவர்!
என்னிடம் வேலை தேடி வந்த இந்த மூவரிடமும், நான் பாடலாசிரியனாக வேலை பார்த்தேன்!
கண்ணில் சினிமாக் கனவோடு சென்னை வரும் என் சகோதரா!
இந்த மூவரைப்போல்
இடையறாது - நீ
முயல்! முயல்! முயல்! ஒருநாள் -
மூஞ்சூறும் ஆகும் முயல்!
அது சரி;
அந்த மூவர் யார் என்று சொல்லவில்லையே!
திரு.இராமநாராயணன்;
திரு.ஆர்.சி.சக்தி;
திரு.கங்கை அமரன்!

37.Dhivakar Venkataraman
ஏதோ கொஞ்சம் தமிழ் சினிமாவில் ஒட்டிக்கொண்டிருந்தது. வாலியோடு அதுவும் போச்சு!! கவிஞர்

வாலியின் ஆத்மா சாந்தியடையட்டும்!!

38.Sridhar Ramasami
கவிஞர் வாலி... ஆனந்த அமுதமும் தந்தார்... அர்ஜென்ட் பீட்ஸாவும் தந்தார்!

பிரபல கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்

39.ஸ்வரா வைத்தீ
வாலியின் மறைவு! வருத்தங்கள் நிறைந்தது!! — feeling sad.

40.Tamizh Vanan
எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில்
எமனும் ஒருவன்
ஒரு அழகிய
கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்

--உன் வரிகளில் இருந்தே உனக்கு அஞ்சலி.

உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

41.Sivakumar Selvaraj added a photo from July 18, 2013 to his timeline.
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும்

தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா

யாரோடு யார் வந்தது நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்


யாரார்க்கு என்ன வேஷமோ
இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டால தான்
ஊர்போவது நாளால தான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்


நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா

42.ஏகலைவன். பா
எழுத்துலகின்
தாயுமாகி
காவியமானவன்.....

கண்ணீர் அஞ்சலி....

43.Hosimin Filmdirector
கடவுளின் இசைக்கு பாட்டெழுத சென்றீரோ வாலி? அவதார புருஷனுக்கு அஞ்சலி

44.Austin Gnana Prakash Maria
vaali non other lyricist never born in this decade ! Be safe with peace in the arms of God !!!

45.Ram Karthi
வாலிபக் கவிஞர் வாலி இன்று காலமானார். அன்னாருக்கு எம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

46.Mohan Gopinathan
VAALI DEAD The lyric writer aged 82 was suffering from lung infection for a couple of months. Even

during this critical problem, he spent hours penning lyrics for some of his upcoming projects that include

AR Rahman`s Theru Koothu that is directed by Vasantha Balan. He was reportedly signed by Kamal

Hassan to write a song for Vishwaroopam-2. Before few minutes, he breathed his last unable to survive the

severe lung problem. Doctors at Appolo Hospital tried with all their might to save him, but their earnest

works went it vain.

47.Diron Fernando
தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றிராத காலத்திலும் தம் நுட்பமான கலப்படமற்ற திறமைகள் மூலம்

நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி வைத்த ஒரு தலைமுறை அவசரமாய் காணாமல் போய்கொண்டிருக்கிறது

இந்த வருடம்.. P.B.ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி, லால்குடி ஜெயராமன், டி.எம்.எஸ், கவிஞர் வாலி...

48.PG Saravanan
"ஓரு நாடகம் நடக்குது நாட்டிலே - அதை
நான் சொல்ல வந்தேன் பாட்டிலே
சிலர் ஆடுற மேடையும் போடுற வேஷமும்
ஊரார் கண்ணுக்குத் தெரியலே
அந்த உண்மை எவனுக்கும் புரியலே

பாய்ந்து வருகுது அதிகாரம் - அதன்
பக்கத்தில் ஆயிரம் பரிவாரம்
இது போகுற போக்கு சரியில்லை - என்று
ஊருக்குக் காட்டுவேன் அடையாளம்

உத்தமர் போலொரு உபதேசம் - அந்த
புத்தரைப் போலொரு வெளி வேசம் - இந்தப்
போலிகள் போடும் போர்வையை எடுத்தால்
உருட்டல் மிரட்டல் சிறைவாசம்

ஏழைகள் மிதப்பது கண்ணீரில் - இந்த
எத்தர்கள் மிதப்பது பன்னீரில்
இந்தக் கோழைகள் வீரம் எத்தனைக் காலம்
கொடிகட்டிப் பறக்கும் தர்பாரில்."

- கவிஞர் வாலி.

49.ஜயந்தன் பரா
சகாதேவன் நித்தியானந்தன் பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும்

கவிதை..!

மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

* * * * *

தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!

* * * * *

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!

* * * * *

இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

* * * * *

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

* * * * *

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!

50.Ram Prashan
என்றும் நம்மோடு வாழ்கிறார் வாலி.அவரின் வரிகளோடு...

51.Diron Fernando
தலைமுறை இடைவெளியை எப்படி தகர்த்தெறிவது என்று வாழ்ந்து சாதித்துக் காட்டிய கவிஞர் வாலி

காலமானார்...

52.KJ Ashokkumar
ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்.

வாலிக்காக இன்று தேடிக் கேட்ட பாடல்....

53.Deepan Saravana
" மின்வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தாயே..." என்று இந்த காலத்துக்கும், எந்த காலத்துக்கும்

ஏற்றார் போல எழுதக்கூடிய கவிஞர் வாலி....

54.PG Saravanan
"பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப் பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதிப் பூ
சிற்றிடை மீது வாழைப் பூ
ஜொலிக்கும் செண்பகப் பூ."

-கவிஞர் வாலி.

55.Sathish Raj
RIP Vaali sir. Huge loss to film industry.

56.Arunmozhi Devan
ஆயிரம் பேர் வருவர் இனி பாட்டெழுத‌
ஆர் வருவார் உன் போல் பட்டென்றெழுத?

‪#‎வாலி‬

57.Arunmozhi Devan
ஆயிரம் பேர் வருவர் இனி பாட்டெழுத‌
ஆர் வருவார் உன் போல் பட்டென்றெழுத?

‪#‎வாலி‬

58.Thiru Thirukkumaran
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் - வாலி

59.PG Saravanan
"இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு."

- கவிஞர் வாலி.

60.Umakanth Thamizkumaran
18.7.2013

நடிகர் திலகத்திற்காக வாலி

மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்ததை

(மலரே)

யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பள்ளவோ

கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

(தலைவன்)

நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவதுதனே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

(தலைவன்)

பாடிடும் காற்றே பறவையின் இனமே
பணி மாலை தொடரே பாய்ந்திடும் நதியே
ஓடோடி வருங்களேன்

பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்து கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன்

(தலைவன்)

படம் : Dr.சிவா
பாடியவர் : K.J.யேசுதாஸ், S.ஜானகி
வரிகள் : வாலி
இசை : M.S.விஸ்வநாதன்

61.RRavi Ravi
படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !

ஓவியம் வரையும் ரங்கராஜன் என்ற பெயரை !
ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு !

ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிடடாலும் !
கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி !

திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி!
திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி !

மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி!
மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி !

சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி !
சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி !

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி !
பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி !

வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி !
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் .ஜி .ஆர் !

உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி !
உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும் !

உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி !
உடன் சிரித்து ரசித்த உயர்ந்த மனிதர் எம் .ஜி .ஆர் .!

எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று எழுதி!
எம் .ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி!

மல்லிகை என் மன்னன மயங்கும் என்று எழுதி !
மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி !

தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி !
தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி !

பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த கவிஞர் வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை !

ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி !
ஒப்பற்ற கவிதைளை வடித்துத் தந்தவர் வாலி !

கவியரங்கங்களில் தலைமை வகித்தவர் வாலி !
கை தட்டல்களைப் பரிசாகப் பெற்றவர் வாலி !

கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி !
கற்பனைக் கவியால் தாடி உள்ள தாகூர் ஆனார் வாலி !

கண்ணதாசனை மீசை இல்லா பாரதி என்றார் வாலி !
கற்க்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார்வாலி!

படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! மரணம் இல்லை ! மரணம் இல்லை !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

62.PG Saravanan
"நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல."

- கவிஞர் வாலி.

63.Muthusamy Subramani
தன்னுயிர் ..பிரிவதை ..பார்த்தவரில்லை ...நான்
என்னுயிர் ...பிரிவதை... பார்த்து... நின்றேன்!".....

வர்ண பேதத்தில்..புதையாமல்..மரணம் தழுவிய மானுடர்!
அவரின் ...படைப்புகளால் ...என்றும் ..வாழ்வார்!

64.Krishnan Balaa shared a photo.

//நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. // குறள்:336

இந்த முக நூல்,இப்போது வாலியின் மரணாஞ்சலிப் பதிவு நூல் எனும் பெருமை உடைத்து.

65.டீக்கா ராமன் ஆற்காடு சிரிப்பிற்கு பஞ்சமில்ல நட்புக்குள் வஞ்சமில்லை

வருந்துகிறோம்

பிரபல வாலிப கவிஞர்
வாலி அவர்கள் காலமானார்

தமிழ் கவி உலகிற்கும் அன்னாரது குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

சிரிப்பு சங்கம்.

66.Muthusamy Subramani shared a photo.
மறைந்தார் காவியக் கவிஞர் வாலி
தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப்

பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு

வயது 82. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில

இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக

1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர்

எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார். திரையுலகில் அதிக பாடல்களை

எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே

இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின்

காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம்

அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர்

பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம்

படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். சில

படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார

புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம்,

பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார். வாலியின் மனைவி

சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.
வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும்

பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

67.Murugan Vel
நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவு கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் ‪#‎வாலி‬

68.Vikkranth Uyir Nanban
யாருடைய கவிதையை சலிப்பில்லாமல் ரசிக்கலாம் ...

வாலி.....

நான் காதலித்த வாலிப கவிஞன்.....

இவருடைய கவிதைகளில் மட்டுமே நான் கடவுளை நம்பியிருக்கிறேன்.....

ஆழ்ந்த இரங்கல் :(

69.Raghavendra Aara
கவிஞர் வாலியோடு மானசீகமாக வாழ்ந்தவன் நான்... எம்.ஜி.ஆருக்கும் முன்பிருந்து இப்போதைய

சிவகார்த்திகேயன் வரை தன் பேனாவால் பல நாயகர்களின் ஆசை நாயகராக ஆட்சி செய்தவர்.

வலியைக்கொடுத்துவிட்டு போய்வீட்டீர்களே ஐயா...

70.த. முத்துகிருஷ்ணன்
“விமானத்தின் இறக்கைகளும் அழுதன..” பிரபாகரனின் தாயாருக்காக கசிந்துருகிய வாலி! -வைகோ

இரங்கல்!

கவிஞர் வாலி மறைவையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல்

செய்தியில்,

சாகாத வரம் பெற்ற இதிகாசக் கவிதைகளை, திரைப்படப் பாடல்களை அமுத மழையாக வழங்கிய

கவிதா மேகம் கலைந்து விட்டது. வாலி மறைந்தார் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் இதயம்

வலியால் துடித்தது.

1964 ஆம் ஆண்டு, நான் சென்னை மாநகருக்கு வந்த முதல் நாளிலேயே, கவிஞர் வாலியைச் சந்திக்கும்

பேறு பெற்றேன். ‘படகோட்டி’ திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களை என்னிடம் அவர் காட்டியபோது,

மெய்சிலிர்த்து நான் பாராட்டியதையும், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு, நதிநீர்

இணைப்பு, மது ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, திருநெல்வேலியில் இருந்து சென்னை வரையிலும்

நான் மேற்கொண்ட மறுமலர்ச்சி நடைபயண நிறைவு விழாவில், தீவுத்திடலுக்கு வந்து, நெடிய வாழ்த்துக்

கவிதை வழங்கியதையும் எப்படி மறப்பேன்?

‘தரைமேல் பிறக்க வைத்தான்..., நான் ஆணையிட்டால்...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ என எண்ணற்ற

பாடல்களில், மக்கள் திலகத்தைக் கோடானுகோடி மக்கள் நெஞ்சில் நிறுத்தினார்.

‘அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்’ என இதிகாசக் காவியங்களைக் கவிதைகள்

ஆக்கித் தந்தார்; பகுத்தறிவாளரும், நாத்திகரும்கூட, அந்தப் பாடலின் சொற்களில் தன்னை மறப்பர்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளை, தமிழ் மண்ணில் அடி எடுத்து

வைக்க விடாமல் திருப்பி அனுப்பியபோது, அந்த விமானத்தின் இறக்கைகளும் அழுதன என்று பாடியவர்

அன்றோ வாலி!

தியாகச் சுடர் செங்கொடிக்குக் கவிதைப் பாமாலை படைத்தார்.

கடைசியாக மரியான் படத்துக்கு எழுதிய பாடல் வரை, இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படப்

பாடல்களைத் தந்த வாலியை, தமிழ்க் கவியுலகம் இழந்து விட்டது. கவிமன்னன் வாலியைக் காலன்

கொண்டு சென்றாலும், தனது பாடல்களால் அவர் காலத்தை வென்று வாழ்கிறார்.

அவரது மறைவைக் கேட்டுக் கலங்கும் நெஞ்சுடன் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்!

என்று தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் வைகோ!

71.Sivakumar Selvaraj
கவிஞர் வாலி காலமானார்

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார்

மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.

நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாச

கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை

அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த வாலிக்கு திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வாலி - வரலாறு

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ். ரங்கராஜன்.

இவர், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ந்தேதி திருவரங்கத்தில் பிறந்தார். சிறுகதை, கவிதை,

உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ள வாலி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட

திரைப்படங்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்.

இவர் ஓவியம் வரைவதிலும், அதிகம் ஆர்வம் கொண்டவர்.
இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

72.Suresh Kumar
கவிஞர் வாலிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

73.Sivakumar Selvaraj
வாலிபனே !!
82 வயதின் ஓர் தமிழ்
வாலிபனே

கவிதைகள் கண்ணீர்
வடிக்கின்றன தங்கள்
கடவுளை இழந்தற்காக !

தமிழ் கவிகளைச் செரிந்த
பூந்தோட்டம் இன்று
கருகிப்போனதே !!

வருத்தமடைகின்றன
வார்த்தைகள் வரலாறாய்
உனைப் பதிவு செய்ய !!

தமிழ்க் காவிரி கடல் சேர்ந்தது
கவிதைக் கரைகள்
காய நேர்ந்தது !

காற்றே கண்டனம் உனக்கு.
என் கவித்தலைவனை ஏன்
தவிக்கவைத்தாய் !!

இறைவா தோல்வியே உனக்கு
கவிதையாய் இனியிவன்
வாழத்தான் போகிறான் !!

கண்ணீர்பூக்களால் காணிக்கை உனக்கு !!
மீண்டு வா வா வாலியே !!
அதுவரை தமிழனுக்கு இதயவலியே !!

பாப்பாரப்பட்டிநாகராஜன்
18 7 13

74.Sivakumar Selvaraj
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே… அன்பே…

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா…
என் வாசல்தான்…
வந்தால்…
வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே… அன்பே…

நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா…
என் வாசல்தான்…
வந்தால்…
வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

75.Sivakumar Selvaraj
Muthazhagan Ma
கவிஞர் வாலி மரணம் . . . . . . . .

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... என்பதில் தொடங்கிய வாலியின் திரைப்பயணம் 5

தேசிய விருதுகள், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை கெளரவித்து தொடர்ந்தது . . . . . . . .

வாலிப கவிஞர் என்பதற்கேற்ப பல பாடல்களை எழுதியவர் . . . . . . . .

கவிதைகளுக்கான வார்த்தைகளை இவர் தேடி அலைந்ததில்லை,
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் இவரை தேடி சரளமாக கவிதைகளாக வந்து விழும்

”தாழ்ச்சி உயர்ச்சியேனும்
சூழ்ச்சி வீழ்ச்சி பெற
இளைஞனே
காதல் தவம் புரி
எமதருமபுரி ஆகாமல்
சமதருமபுரி ஆகட்டும் உலகு” . . . . . . .

என்பன அதற்கான உதாரணங்களின் ஒன்று . . . . . . . . . .

`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப்

புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!

வாலிக்கு என்ன எழுத????????

76.Sivakumar Selvaraj
பிறந்தாலும் பாலை ஊற்றுவார்

இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டால தான்

ஊர்போவது நாளால தான்

கருவோடு வந்தது தெருவோடு போவது

மெய் என்று மேனியை யார் சொன்னது

77.Sivakumar Selvaraj
Kavi Arasu
சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே -
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது -
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் - இந்த
நிட்காமிய ஞானம் - என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!
- கவிஞர் வாலி..

78.ivakumar Selvaraj
Kubendran Sindu
சிலர் கேட்கிறார்கள், பாட்டு எழுதுவதற்கு முன் என்ன செய்வீர்கள் என்று.
ஒரு பத்து நிமிடம் யோசிப்பேன். பிறகு எழுதுவேன்.
அந்த பத்து நிமிடம் என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டால், புரொடியூஸர் கொடுத்த செக் பாஸாகுமா

என்று யோசிப்பேன். பிறகு தீவிரமாக பாட்டு எழுதி விடுவேன்.,

- கவிஞர் வாலி

79.டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி
இரங்கல் கவிதை எழுதாமல் இருப்பதே பேஸ்புக் கவிகள் வாலிக்கு செய்யும் மிகப்பெரும் அஞ்சலியாக

இருக்கும்.

80.G Durai Mohanaraju
"கிருஷ்ண விஜயம் " செய்திருக்கலாம் வாலியைக் காப்பாற்ற :(

81.Sivakumar Selvaraj
Kannan Sathurapan
வைகோ சென்னையில் கல்லூரியில் பயின்றபோது அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று

வருவார் அந்த உறவினருக்கு சொந்த ஊர் சங்கரன்கோவிலுக்கு அருகிலுள்ள மீன்துள்ளியாகும் அந்த

உறவினருக்கு குடும்ப நண்பரான திரைப்படப்பாடலாசிரியர் அங்கு அடிக்கடி வருவதுண்டு அவர்தான்

வாலி அப்போதுதான் வைகோவிற்கும் வாலிக்கும் இடையே பழக்கமேற்பட்டது அப்போது எம்ஜி ஆர்

படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள் பற்றி வைகோ மிகவும் சிலாகித்துப்பேசுவாரம் , பின் வைகோவும்

வாலியும் இரு வேறு திசைகளில் பயணித்தாலும் இவர்களின் மனதில் அந்த நினைவுகள்

பசுமரத்தாணியாய் நிலைத்திருந்தன என்பதை ஒரு நடை பயண முடிவில் தீவுத்திடலில் நடந்த மதிமுக

மாநாட்டில் வைகோவின் அழைப்பை ஏற்று பங்கேற்ற கவிஞர் வாலி அவர்கள் இந்த நிகழ்வை பதிவு

செய்தார் , அந்தக்காவியக்கவிஞர் ஈழத்துப்போராட்டத்தையும் தம் கவிதையில் வடிக்கத்தவறியதில்லை

அந்த மாமனிதரின் மறைவு தமிழுக்கு ஈடற்ற இழப்பு

82.Sivakumar Selvaraj
Soorianarayana Soori
ஒரு மாதமாக......எமன்
வாலியின் வீட்டை சுற்றி சுற்றி
வருகிறான்.....!

தமிழகத்தில் உள்ள
அத்தனை ஆத்மாக்களும்
அவரைச் சுற்றி
அரண்போல் காத்து நிற்கிறது..!

எமனே.. வந்த வழியே......
இப்பொழுது திரும்பிச் சென்றுவிடு...!
அவர் எழுத்துக்கு வயதானதும்......
நாங்களே உனக்கு சொல்லி அனுப்புகிறோம்...!!

எமனே.....
உனக்கு முதல் தோல்வி மார்க்கண்டேயனிடம்
இரண்டாவது தோல்வி....
இந்த ”வாலி”ப மார்க்கண்டேயனிடம்தான்
எழுதி வைத்துக் கொள்...!!!

### வாலி.....நீர் பல்லாண்டு வாழி.....!!!!

83.Sivakumar Selvaraj
நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா

வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா

தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை

நோய் கொண்டு போகும் நேரமம்மா

84.Sivakumar Selvaraj
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகா’ என்று தான் உச்சரிக்கும்.

முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!

85.Sivakumar Selvaraj
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்

கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ..
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ .ஆ..
துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்

ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது ..
உறங்குமோ உன்னழகு..

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்

86.கவிஞர் இரவிச் சந்திரன்
வாளி
வாளியாய்
தமிழை
வாரி
வாரித்தந்த
வாலியே
கண்ணயர்ந்தாயா?
தமிழ்
தடுக்கி விழுமா?

87.Sivakumar Selvaraj
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன்.

ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும்

வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை

அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

88.Vairam Sivakasi
ஒருத்தர் செத்தா.. கொஞ்ச நாள் கழித்து பார்க்கும்பொழுது அவர் இந்த பூமியில் இருந்ததற்கான

அடையாளமே சுத்தமாக இருக்காது.. அதுதான் சாவு..!

ஒரு நல்ல கவிஞனுக்கு ஏதடா சாவு..!!?

89.Sivakumar Selvaraj
Nantha Kumar
"மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ"

"நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்.."

"பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா!"

கவிஞர் வாலியின் வரிகள்

90.Sivakumar Selvaraj
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார்

ஏ.ஆர்.ரஹ்மான், இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக்

கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!

91.Sivakumar Selvaraj
ஆடும் வரைக் கூட்டம் வரும்

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

தாயாலே வந்தது தீயாலே வெந்தது

மெய் என்று மேனியை யார் சொன்னது

92.Sivakumar Selvaraj
`பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து

இருக்கிறார் வாலி!.

93.Sivakumar Selvaraj
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத்

தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும்

ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.

சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!

94.Sivakumar Selvaraj
1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44

வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது.

`அவதார புருஷ்ன்’ விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு

கலைஞருடையது!

95.Sasi Dharan
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது?

மூன்று தலைமுறை கவிஞர்........வாலி சார்........

96.Sivakumar Selvaraj
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு

நிறுத்திவிட்டார்.

97.Sivakumar Selvaraj
Kubendran Sindu
நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர். நாவினிக்க உன்னைப் பாடியே என்

உடம்பில் ஏறிப்போனது ஷுகர்
-கருணாநிதியைப்பாராட்டி கவிஞர் வாலி

98.Sivakumar Selvaraj
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி,

பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!

99.Sivakumar Selvaraj
ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்! இவரை

எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!

100.Sivakumar Selvaraj
வீடு சுரேஸ் குமார்
“இத்தனை நாள் கேட்டது போதுமடா...மானுடா!” என்று காலன் எங்கள் பாட்டுப்பெட்டியை

களவாடிச்சென்று விட்டான்......!
கண்ணீருடன் நாம்...... ‪#‎வாலி‬

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?