Dinaithal - தினஇதழ்

ஊழல் பெருச்சாளிக்கு மாற்று ஊழல் எலி !

ஊழல் பெருச்சாளிக்கு மாற்று ஊழல்  எலி !

உணவு பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றி விட்டதனால் மட்டுமே அல்லது அதன்  மூலம் நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு கொடுத்து விடலாம்  என்ற  பார்வையை பரப்புவது  முட்டாள் அரசின்  பணி.


இதே போல , கல்வி உரிமை அல்லது பாதுகாப்பு சட்டம்  இரண்டு வருடங்களிற்கு முன்னர் இயற்றப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.  அந்த சட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு கல்வி உரிமை உறுதி படுத்தப்பட்டுள்ளது ?


எதையாவது சொல்லி , இப்போதைய கால சூழலை ஏமாற்றும் பணியைத்தான்  காங்கிரஸ் அரசு எப்போதும் செய்யும்.


எந்த மக்கள்  உரிமையையும்  ஊழலில் ஊறிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளி கட்சிகள் திமுக போன்றவர்களால்  மக்களிற்கு அமல்படுத்த முடியாது. ஏனென்றால் அந்த காட்சிகளில் இயங்கும் அரசியல்வாதிகள் கடைந்தெடுத்த ஊழல்வாதிகள் அயோக்கியர்கள்.


சரி , இவர்களிற்கு மாற்று என்ன ? இப்போதைக்கான மாற்று என்ற அளவிலேயே  சிந்திக்க வேண்டிய நிலையில்தாம் நாம் உள்ளோம் அன்றி முழு தூய்மையான அரசியல்வாதிகளை கொண்ட கட்சி என்று அரசியல்வாதிகள் என்று  எதையும் அடையாளம் காட்ட முடியாது என்பதுவும் உண்மை.


ஊழல் பெருச்சாளிக்கு மாற்று ஊழல்  எலி, ஊழல்  எலிக்கு மாற்று ஊழல் சுண்டெலி என்ற அளவில்தான் நாமும் இப்போதைக்கு  வாய்க்க பெற்று  இருக்கிறாம்.
முழு மாற்று வரும் , ஆனால் இப்போதைக்கு அல்ல !

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?