Dinaithal - தினஇதழ்

டால்மியாபுரம் போராட்டமும் - மணிமேகலை விளிப்பும் !

டால்மியாபுரம் போராட்டமும் - மணிமேகலை  விளிப்பும் !

14-August -1953
இந்த நாளை கருணாநிதி அறிவார்;  நன்றாக அறிவார் , அவர்  மற்றும் அவரது கட்சியினர் இன்றளவும் பெருமையாக சொல்லும் போராட்டம் நடந்த நாள் .


 கருணாநிதி, கண்ணதாசன்  மற்றும் முப்பது பேர்  செய்த  பெரும் போராட்டமாக  இன்றளவும் அவர்கள்  சொல்லும்,   ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராடினார் என்று பெருமை பொங்க சொல்லும் , திருச்சி - டால்மியாபுரம் பெயர் மாற்ற போராட்டம் நடந்த நாள் .


இந்தி  மொழி திணிப்பை எதிர்த்து  போராட்டம்  தமிழகத்தில் மொத்தம் நான்கு கட்டமாக நடந்தது அதில் இரண்டாம் கட்ட  கட்ட போராட்டம்  திமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்தது. இந்த போராட்டத்தை திகவும் திமுகவும்  இன்னும் பல அமைப்புகளும் இணைந்து  நடத்தியது.


அப்போது பல இடங்களில்  பல தலைவர்கள் போராட்டங்கள் நடத்த பணிக்கபட்டார்கள்.


அந்த நேரத்தில் , வட இந்திய தொழில் அதிபர் , டால்மியா என்பவர் திருச்சி மாவட்டம் கல்லக்குடி என்ற கிராமத்தில் சிமெண்ட் தொழிற்சாலை  நிறுவி அதற்க்கு  அந்த ஊருக்கு டால்மியாபுரம் என்று பெயர் இடவில்லை , புது நகரை உருவாக்கி அந்த தொழிற்சாலை அமைந்த  பகுதியை டால்மியாபுரம் என்று  பதிந்து கொண்டார் . பெயர் வழக்கத்திற்கு கொண்டு வந்தார்.
ஆனால், அங்குள்ள புகை வண்டி நிலையத்திற்கு  டால்மியாபுரம் என்று பெயர்  வைக்கப்பட்டது.


இந்த பெயரை மாற்றி அந்த ஊருக்கு இயற்கையாக உள்ள கல்லக்குடி என்ற பெயரை வைக்கவேண்டும் என்று திமுக , செயல்குழுவில் தீர்மானமே நிறைவேற்றியது.  அந்த தீர்மானம் போராட்டத்தையும் வலியுறுத்தியது.


போராட்ட நாள்,14-August -1953  என்று குறிக்கப்பட்டு அந்த போராட்டத்திற்கு , கருணாநிதி தலைமை ஏற்றார் அவரோடு கண்ணதாசன் மற்றும் முப்பது பேர் கலந்து கொண்டு கைதானார்கள்.
போராட்டம்  என்னவென்றால் , டால்மியாபுரம் என்ற பெயரை அழித்து விட்டு கல்லக்குடி என்று பெயர் எழுதிய அட்டையை ஒட்டவேண்டும்.


இவர்களும்  அட்டையை ஒட்டினார்கள் . போலீசார் கண்டு கொள்ளவில்லை கைதும் செய்யவில்லை . ஓட்டினால் ஒட்டி விட்டு செல்லுங்கள் என்று விட்டார்கள்.


என்னடா இது  நம்மை சீந்தவில்லையே என்று யோசித்த  கருணாநிதி அடுத்து செய்தது ஒரு  பெரிய காரியம் அதாவது , ரயில் வரும் நேரம் இன்னும் முக்கால் மணி நேரம் என்பதை தெரிந்து கொண்டு , அங்கு போய் திடீரெண்டு தண்டவாளத்தில் படுத்து கொண்டார் அவரோடு இருந்தது முப்பது பேர் மட்டுமே கண்ணதாசன் உட்பட .


இதையும் முதலில் கண்டு கொள்ளவில்லை காவல்துறை .
பின்னர் அங்கிருந்து கண்ணதாசனை அனுப்பி ,  பொது மக்கள் இடத்தில அவர்களை தூண்டும்படிக்கு பிரச்சாரம் செய்யவிட்டு , அவர்களையும் போராட்டம் செய்ய அனைத்து கலவர தூண்டல் பணிகளை செய்தார்கள் .
இப்போது பொதுமக்கள் கூட்டம் கூடி விட்டது.
அடுத்து பொதுமக்கள் கூடியாகிவிட்டது நிலைமையை மோசமாக்க வேண்டுமே , கலவரத்தை தூண்டும் படிக்கு பொதுமக்களை தூண்டினர் அல்லது யார் செய்தது என்று தெரியவில்லை . கலவரம் வது விட்டது.


இப்போதுதான் போலீசார் களத்தில் இறங்கினர் . நிலைமை கை மீறி போகிறது என்பதை உணர்ந்து  துப்பாக்கி சூடு நடத்தினர் , இரண்டு பேர் பலியாகினர் .


அவர்கள் பெயர் நடராசன்,  கேசவன்  ; இந்த இருவரும் கருணாநிதியோடு முதலில் திட்டமிட்டு வந்த திமுகவை சேர்ந்தவர்கள் அல்ல . மாறாக இவர்களால் தூண்டப்பட்டு செத்து போன அப்பாவிகள் அவர்கள்.  கதைகளை பின்னர்  எப்படி வேண்டும் என்றாலும் திரித்து சொல்வார்கள்.


இப்படியாக தமது போராட்டத்தை  மாநிலம் அறியும்படிக்கு மாற்ற கருணாநிதி இரண்டு பேரை பலி கொடுக்க செய்தார் ஆனால் அவர் தண்டவாளத்தில்  படுத்ததை மட்டும் வெளியில் பெரிய செய்தி ஆக்கியவர் .


கல்லக்குடி  போராட்டத்தின் மூல காரணமான கேசவனையும் நடராசனையும் மருந்துக்கும் எங்கும் இவர் பேசமாட்டார் .
இப்படியாக  அந்த போராட்டம் கருணாநிதிக்கு பெரும் பெயரை தந்தது.


தனது சொந்த ஆலைக்கு டால்மியாபுரம் என்ற பேரை வைத்து கொண்டதை கூட ஒப்புகொள்ளாத கருணாநிதி . தமிழ்நாட்டிற்கு ஏதோ அதனால் பெரும் பாதகம் வந்து விட்டது என்று பெரும் கூச்சல் போட்ட கருணாநிதி ,
இதோ இப்போது பாருங்கள் , மக்கள் பணத்தில் திட்டம் போடும் ஒரு அரசை மறைமுகமாக இயக்கும் ஒரு  இத்தாலி அம்மையாரை தமிழ் இலக்கியம் போற்றும் ஒரு மாபெரும் கற்புடை பெண்டிரை , மணி மேகலையை அவரோடு ஒப்பிட்டு பேசுகிறார் .
சோனியாவை மணி மேகலை என்கிறார்;


இதுதான் ஊழலில் பரிமாணமோ ?


கருணாநிதியை பொறுத்தளவில் அவர் அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி , கடைந்தெடுத்த சுயநலவாதி ; அவரை பொறுத்தளவில் அவருக்கு அவரது குடும்பத்திற்கு என்பதை விட்டு விட்டு வேறு எந்த சிந்தனையையும் சிந்திக்க முடியாது .
அதற்காக யாரையும்  பலி கொடுப்பார்.  தமிழையும் விற்று விடுவார்.


மணி மேகலை என்று சோனியாவை கூற இவருக்கு யார் தமிழ் இலக்கிய வியாபாரம் செய்ய அதிகாரம் கொடுத்தது ?
அன்று தாம் அரசியலில் பேர் எடுக்க , கேசவனையும் நடராசனையும் பலி கொடுத்த கருணாநிதிதான் ;
இன்று சோனியா விற்காகவும் தாம் செய்த ஊழல் பணத்திற்காகவும் தமிழர்கள் இரண்டு லக்ஷம் பேரை காவு கொடுக்க முழு காரணம் ஆகிவிட்டார்.
இவர் திருந்த வில்லை
மனம் வருந்த வில்லை .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?