Dinaithal - தினஇதழ்

அதிமுக . அரசு சொன்னது என்ன ? செய்தது என்ன ?

அதிமுக . அரசு சொன்னது என்ன ?  செய்தது என்ன ?

அதிமுக . அரசு சொன்னது என்ன? செய்தது என்ன?

கடந்த 2011 ஆட்சிக்கு வரும் முன் அதிமுக  அரசு பல தேர்தல் வாக்கு உறுதிகளை அளித்தது அதில் பல அறிவிப்புகள் ஏட்டளவில்தான் உள்ளது.  

அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நாம் இப்போது பார்ப்போம் :

இலவச கேபிள் டிவி இணைப்பு.

அவசர தேவைக்கு 24மணி நேர இலவசமாக வீட்டுக்கே வரும் மொபைல் மருத்துவமனை.   

தமிழ் நாட்டில் சிறப்பு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் நலன்கள் மேன்பட சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினமும் இலவசமாக வழங்கப்படும்.

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு இலவசமாக தங்கும் இடம், 3 வேலை உணவு, நூலகம்,மருத்துவ உதவி செய்யப்படும்.

58 வயது மேல் உள்ளவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும் .

பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு 12000/-பணம் மற்றும் 6 மாதம் விடுமுறை அளிக்கப்படும்.

கரும்புக்கு ஒரு டன்னுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை 2500/- உயர்த்தி  வழங்கப்படும் .

மின்சார திருட்டை தடுக்க முன்னால் இராணுவத்தினர் நியமனம் செய்ய படுவார்கள்.

பள்ளி படிப்பை மாணவர்கள் முழுமையாக படிக்க வேண்டும் என்ற நோக்கில்  உயற் நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 1000/- முதல் 5000/- வரை வழங்கப்படும்.

2013 ஆண்டுக்குள் கூடுதலாக 5000 மேக. வாட். மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மற்றும் நகரம் மற்றும் கிராமங்களில் 3 முனை மின்சாரம் வழங்கப்படும் .

கிட்டத்தட்ட 2.5 ஆண்டு காலம் அதிமுக. ஆட்சி முடிந்த நிலையில் மேலே அவர்கள் அளித்த வாக்கு உறுதிகளை செயல்பாட்டிற்கு வந்தால் நல்லதுதான்.

மீதம் உள்ள 2.5 ஆண்டு காலத்தில் ஆதிமுக அரசு என்ன செய்ய போகிறது என்று பொருத்து இருந்து பார்போம்.

செய்தி :கீர்த்தி
   

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?