Dinaithal - தினஇதழ்

ஊடகங்கள் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் ?

ஊடகங்கள் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் ?

ஊடகங்கள் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் ?

அதிமுக ஆட்சிக்கு வந்து சுமார் 2.5 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் முதல்வர் முதல் செய்தியாளர் சந்திப்பில் கூறிய வார்த்தை "நானே வாரம்  தோறும் செய்தியாளர் சந்திப்புக்கு வருகிறேன், வரும் போதும் போகும் போதும் என்னை பின் தொடந்து வராதீர்கள்"

ஆனால் 2.5 ஆண்டு கால ஆட்சியில் சில முறை மட்டுமே செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். இதனால் செய்தியாளர்களால்  எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை. முதல்வரின் எந்த கருத்தையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

எந்த அமைச்சரும் செய்தியாளர்களை சந்திப்பதும் கிடையாது. இதன் காரணமாக மக்களுக்கு அரசு என்ன நினைக்கிறது, என்ன செய்கிறது தலைமை செயலகத்தில் என்ன தான் நடக்கிறது என்று ஒன்றும் புரிவதில்லை.

ஒரு அறிக்கை மட்டும் போதுமா.

மக்கள் மனதில் உள்ள கேள்விகளை செய்தியாளர்களால் மட்டுமே கேட்க முடியும். இதை இந்த அரசு எப்போது புரிந்து கொள்ள போகிறது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை அதிக பட்சம் தவிர்த்து விட்டு கேள்வி பதில் பாணியில் அவரே கேள்விகளை உண்டாக்கி பதிலையும் தயாரித்து பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து விடுகிறார்.

அதே நேரத்தில், பத்திரிகையாளர்களை அவர் தவிர்த்தது இல்லை என்பதுவும் உண்மை.

பொது வாழ்வு என்று வந்து விட்ட பின்னர் பொறுப்பும் பொறுமையும் சகிப்பு தன்மையும் மிகவும் அவசியம் என்னை யாரும் எதிர் கேள்வி கேட்க கூடாது என்னை விமர்சிக்க கூடாது என்று சொல்லுவது தவறு.
 
நாங்கள் நடுநிலை என்று குறி கொள்ளும் நாளேடுகள், வார இதழ்கள், செய்தி தொலைகாட்சிகள் அதிமுக அரசு செய்யும் எந்த தவறையும் சுட்டி காட்டுவது இல்லை.

அச்சு மற்றும் காணொளி ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல் பட வேண்டும். நடு நிலை என்று பெயர் அளவில்  சொல்லிக்கொண்டு கட்சி சார்ந்து செயல் படுவது தவறு.

சில ஊடங்கள் பணத்திற்காக தவறான செய்திகளை பரப்புவது, தனிநபர் விமர்சனம் இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

ஜனநாயகத்தின் முன்றாவது கண் ஊடகம்!

தமிழ் நாட்டில் எப்போது கண் திறக்க போகிறதோ?

செய்தி :கீர்த்தி

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?