Dinaithal - தினஇதழ்

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள், CMBT (CHENNAI MOFUSSIL BUS TERMINUS) என்ற பெயரை தயவு செய்து மாற்றுங்கள்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள், CMBT (CHENNAI MOFUSSIL BUS TERMINUS) என்ற பெயரை தயவு செய்து மாற்றுங்கள்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள், CMBT (CHENNAI MOFUSSIL BUS TERMINUS) என்ற பெயரை தயவு செய்து மாற்றுங்கள்.
 
CMBT (CHENNAI MOFUSSIL BUS TERMINUS) என்ற பெயரை தயவு செய்து மாற்றி., CMBT (CHENNAI MAIN BATHROOM &TOILET) என்று பெயரை மாற்றி விடுங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையம் 6 ஜூன் -1999 அன்றைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினர். பிறகு 18 நவம்பர் 2002 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதை திறந்து வைத்தார்.  

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி பின்னர் அது சிற்றெறும்பு ஆகும் என்பது பழமொழி .

இந்த பழமொழி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பொருந்தும். பேருந்து நிலையம் துவங்கி சில ஆண்டு காலம் சுத்தமாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக இன்று எங்கும் துர்நாற்றம் வீசும் கூவம் நதியின் கிளை போல காட்சி அளிக்கிறது.

மாநகர பேருந்துகளை தினமும் 49.5 லட்சம் பேர் பயன் படுத்துகின்றனர் இதில் 30% மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

தினமும் சென்னைக்கு வேலை, மருத்துவம், அலுவல் மற்றும் படிப்பு காரணமாக வெளி மாநிலங்கள் ,மற்றும் மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் புதியதாக சென்னைக்கு வருகின்றனர். அப்படி புதியதாக வருகின்றவர்களை இந்த  துர்நாற்றம்  தான் வரவேற்கிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 180 bus bays.  உள்ளன இதில் ஒரு பஸ் பே இல் இருந்து மற்றும் ஒரு பஸ் பே க்கு  செல்லும் வழியில்  உணவு கழிவுகள், வாட்டர் பாட்டில், கழிவுநீரும் மழைநீரும் சேர்ந்து அருவருப்பாக காட்சி அளிக்கிறது. பயணிகளும் வேறு வழி இல்லாமல் அதன் மீதே நடந்து செல்கின்றனர்.

குறிப்பாக மாநகர பேருந்துகள் உள்ளே வந்து செல்லும் இடத்தில் இருந்த பொது கழிப்பறையை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.

இதன் காரணமாக ஆண் பயணிகள் அந்த பொது கழிபறை அருகில் சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இதில் பென் பயணிகளின் நிலைதான் மிகவும் மோசமாக  உள்ளது. பேருந்துகள் உள்ளே வரும் போதும் வெளிய செல்லும் போதும் துர்நாற்றம் மிகவும் அதிகமாக வீசுகிறது.

கழிப்பறையை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது என்றாலும் இதற்கு ஏதானும் தற்காலிக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அரசின் கடமை.

ஆசியா கண்டதில் மிக பெரிய பேருந்து நிலையம் என்று பெருமையாக சொல்லும் நமது அரசு அதை சீரும் சிறப்பும்மாக வைத்து கொள்ள வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமையும்.  

செய்தி : கீர்த்தி 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?