பிரிவு: போராட்டங்கள்
மது விலக்கு - காந்தியவாதியின் உயிரை காப்பாற்றுங்கள் .
சேலத்தை சேர்ந்தவர் டாக்டர் சசி பெருமாள். காந்தியவாதி அவர் மதுவிலக்கை அமல்படுத்த கோரி மெரினா காந்தி சிலைக்கு அடியில் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நேற்று போலீசாரால் கைது செய்யபட்டார்.ராயபேட்டை மருத்துவமனையில் சேர்க்க பட்டார்.
இந்நிலையில், அவர் மருத்துவமனையிலும் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்து உள்ளார்.
மது விலக்கை அமல்படுத்தக்கோரி 23 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காந்தியவாதி டாக்டர் சசி பெருமாளின் உயிரைக் காத்திட வேண்டும் என்று பெண்ணுரிமை இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே பல்வேறு பெண்கள் அமைப்பைச் செர்ந்தவர்களின் பிரசாரக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், மது விலக்கை அமல்படுத்தக்கோரி கடந்த மாதம் ஜனவரி 30-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காந்தியவாதி சசி பெருமாளின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும், மேலும் சுதந்திர போராட்ட தியாகி சசி பெருமாள் மீது தொடுக்கப்பட்டுள்ள தற்கொலை முயற்சி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற வழக்குகளை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 23 பிப்ரவரி 2013 00:28
படிப்புகள்: 67
பிரிவு: போராட்டங்கள்
வைகோவின் ஓயாத முயற்சி ?
விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க , மதிமுக பொது செயலாளர் கடந்த இரு வருடங்களாக கிட்டத்தட்ட பதினான்கு தடவை நீதிமன்றத்திலும் , தீர்ப்பு ஆணையத்திலும் என தமது வாதங்களை பதிந்து வந்துள்ளார் .
இடையில் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் விடுதலை புலிகளின் மீதான தடையை நீட்டித்து மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன .
அதை எதிர்த்து வைகோ மீண்டும் நீதிமன்றத்தை நாடி உள்ளார் .
இன்று அது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வைகோவின் ரிட்மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது
இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரங்கள் வருமாறு :
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (28.01.2013) விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ சொன்னது ,
“விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு 2012 மே 14 இல் பிறப்பித்த ஆணையை, மத்திய அரசு நியமித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைத்தது. அந்தத் தீர்ப்பாயத்தில் நான் நேரில் சென்று, புலிகள் மீதான தடையை இரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகளிலும் பங்கேற்றேன். ஆனால், அந்தத் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள் எனக்கு வழங்கப்படவில்லை.
புலிகள் மீதான தடையை, உறுதி செய்து தீர்ப்பாயம் 2012 நவம்பர் 27 ஆம் தேதி பிறப்பித்த ஆணை நீதிக்கு எதிரானதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும் உண்மைக்கு மாறான வாதங்களின் அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராகவோ ஆபத்து ஏற்படும் விதமாகவோ செயல்பட்டால்தான் சட்டப்படி குற்றமாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் மத்திய அரசு, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எள்ளவும் உண்மை இல்லாத, முழுக்க முழுக்க அபாண்டமான பொய்க்
குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் மீது சுமத்தி இந்தத் தடையை நீடித்துள்ளது.
தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கு பகுதிகளைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரமாக 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில் தமிழர் அமைப்புகள் தந்தை செல்வா தலைமையில் கூடி நிறைவேற்றிய பிரகடனத்தை நான் தீர்ப்பாயத்தில் ஆவணமாக தாக்கல் செய்திருந்தேன். ஆனால், தீர்ப்பாய நீதிபதி அந்தப் பிரகடனத்தின் வாசகத்தையே புரிந்து கொள்ளாமல், இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள தமிழர்கள், தமிழ் ஈழத்தின் குடிமக்கள் ஆகலாம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழத்தின் பூர்வீகக் குடிமக்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள், குடி உரிமை பெறலாம் என்றுதான் அப்பிரகடனம் கூறுகிறது. அடிப்படையையே நீதிபதி மாற்றிச் சொல்கிறார். வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு விடுதலைப்புலிகள் அங்கீகரித்ததற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஆனால், நான் பதிவு செய்த ஆவணங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் நாள் உரையின்போது, தேசியத் தலைவர் பிரபாகரன் உரையாற்றும் மேடையில், தமிழ் ஈழ வரைபடம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அது இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளை மாத்திரமே காட்டுகிறது. இது தான் வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கு புலிகள் தந்துள்ள அங்கீகாரமாகும்.”
நீதியரசர் எலிப்பி தர்மாராவ்:
(வைகோவைப் பார்த்து) விடுதலைப்புலிகள் என்று மூன்று பேர் இலங்கைக்கு ஆயுதம் கடந்த முயன்றதாக போடபட்ட வழக்கு குறித்து என்ன கூறுகிறீர்கள்?
வைகோ பதிலளிக்கையில், கடந்த முறை தடையை எதிர்த்து நான் வழக்கு தொடுத்தபோது, விடுதலைப்புலிகள் எவரும் இங்கு கைது செய்யப்படவில்லை. வழக்கு ஏதும் இல்லை என்று நான் கூறினேன். அதனால், புலிகள் தடையை நியாயப்படுத்துவதற்காக, தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர். காவல்துறை பெற்றுள்ள ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடி ஆகாது. இலங்கையில் இருந்து ஈழத் தமிழர் யார் வந்தாலும் இந்தத் தடையைக் காரணம் காட்டி அவர்களை அச்சுறுத்துவதும், பொய்வழக்கு போடுவதும், சிறப்பு முகாமில் அடைப்பதும் வழக்கமாகிவிட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுகிறேன்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மீதான தடையை எதிர்த்து, நான் தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தங்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்று அதன் மீதான தீர்ப்பையும் எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார்.
உடனே நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்கள், வைகோவின் ரிட் மனுவை அனுமதித்ததோடு, நான்கு வார காலத்திற்குள் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கழகப் பொதுச்செயலாளர்வைகோ அவர்களுடன் சட்டத்துறை செயலாளர் ஜி.தேவதாஸ் , செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், வழக்கறிஞர்கள் பிரியகுமார், செந்தில்செல்வன், சைதை சுப்பிரமணி, ஜெயகுமாரி விசு ஆகியோர் உடன் இருந்தனர்.
வைகோ வின் ஓயாத முயற்சி வெற்றி பெறுமா ?
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013 08:51
படிப்புகள்: 151