Dinaithal

Switch to desktop

தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

Rain 4 12548fதமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் 1–ந்தேதி தொடங்கும். இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. தஞ்சை மாவட்டம் கிராண்ட் அணைக்கட்டில் 4 செ.மீ. மழை பெய்து உள்ளது.

 

சிவகங்கை, புள்ளம்பாடிதலா ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழையும், அரியலூர், திருப்பத்தூர், மானாமதுரை, சமயபுரம், துவாக்குடி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.இப்படி சில இடங்களில் மழை பெய்தபோதிலும் சென்னை, திருச்சி, வேலூர், கடலூர் முதலிய இடங்களில் அதிக வெப்பக்காற்று வீசுகிறது.இது குறித்து வானிலை அதிகாரி கூறியதாவது:–தற்போது மேற்கில் இருந்து வெப்பக்காற்று வீசுகிறது. பூமியில் இருந்து 1 கிலோமீட்டர் உயரத்தில் வெப்பக்காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. இதன்காரணமாக வெப்பம் அதிகரித்துவருகிறது. கடற்காற்று வீசினால்தான் வெப்பம் குறையும். இந்த காற்று மாலையில் தான் வீசுகிறது.இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழைபெய்யும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 25 மே 2013 11:38

படிப்புகள்: 1

கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர்: டி.எம்.எஸ். மறைவுக்கு வைகோ இரங்கல்

vaiko-new-1மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- அறுபது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்ததும் நாதவெள்ளமாக தமிழக மக்கள் சிந்தையைக் கவர்ந்ததுமான பாடல்களை தன் கானக் குரலால் பாடிய இசைவேந்தர் டி.எம். சவுந்தரராஜன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

‘உள்ளம் உருகுதய்யா...’ என்பது உள்ளிட்ட அவரது பக்திப் பாடல்கள் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களது குரலுக்கு ஏற்றவாறு அவரது பின்னணிக் குரல் ஒலிக்கும். தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள் அனைத்துமே காலத்தை வென்றவையாகும்.

டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள், அவரது தேனினும் இனிய இசைக்குரல் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். அவரது மறைவால், துயரத்தில் துடிக்கும் இசை உலகத்திற்கும், திரை உலகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 25 மே 2013 10:18

படிப்புகள்: 4

கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு: சுமார்10 வீடுகள் சேதம்

kanniya kumariதமிழகத்தை வாட்டி வதைத்த கத்திரி வெயில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இப்போது வெப்பம் ஓரளவு தணிந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் இதமான காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கூத்தரையில் கடல் கொந்தளிப்பினால் சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வீடுகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி தேவாலயங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 25 மே 2013 07:40

படிப்புகள்: 3

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும்;

24-cauvery61-300காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி 19ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணையத்தையும் உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக காவிரி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்‘ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. குழுவில் தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், அடுத்த மாதம் 1ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு நியமித்துள்ள தற்காலிக கண்காணிப்பு குழுவுக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய சூழலில் தற்போது இடைக்கால கமிட்டி ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு கமிட்டி அமைக்க கால தாமதத்தை ஏற்படுத்தும். இதனை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார். விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சேரன் கூறுகையில், ‘மத்திய அரசு செய்துள்ள தந்திரமான நடவடிக்கை இது.

தற்காலிக குழுவால் எந்த பலனும் இருக்காது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும்‘ என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி. நடராஜன், ‘காவிரி பிரச்னையில் இதற்கு முன் அமைக்கப்பட்ட பல்வேறு தற்காலிக குழுக்களால் தமிழகத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. இது கண்துடைப்பு நடவடிக்கையாகும். உடனடியாக நிரந்தர குழுவை அமைக்க வேண்டும்‘ என்றார்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 25 மே 2013 10:07

படிப்புகள்: 3

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: தண்ணீர் வழங்கும் பணியை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

jaya-1தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் ஆகும். இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரை குடிக்க பயன்படுத்த முடியாது என்றாலும் வேறு வழியின்றி மக்கள் பயன் படுத்தி வருகிறார்கள். இந்த நிலத்தடி நீரில் புளோரைடு உப்பின் அளவு 1.5 மில்லி கிராம் முதல் 12.4 மில்லி கிராம் வரை உள்ளது. இது வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாகும். இந்த நீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும். பற்களில் காவி நிறம் ஏற்படுகிறது. மூட்டு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு,கை கால் வளைதல், முடக்குவாதம் ஏற்படுதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த நோயை கட்டுப்படுத்தவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும், ரூ1,928 கோடி செலவில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ஜப்பான் பன்னாட்டு கூட்டு றவு முகமைநிதி ரூ1,585.60 கோடி ஆகும். தமிழக அர சின் நிதி 307.48 கோடி ஆகும். இந்த நிதிகள் தவிர நகராட்சி, பேரூராட்சிகளின் பங்களிப்பாக ரூ35.72கோடி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்கான ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ63.67 கோடிக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 5 தொகுப்புகளாக பணிகள் நடந்தன. இதில் ரூ1200 கோடி வரை செலவு செய்து 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. ஓகேனக்கல்லில் இந்த திட்டத்துக்காக தனி யாக மின்சார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போல ஓகேனக் கல்லில் நீரேற்று நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூருக்கு ஓகேனக்கல்லில் இருந்து குடிநீர் செல்லும் குழாய் களும் அமைக்கப்பட்டு விட்டன.

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து இயல்பு நீரை நீரேற்றம் செய்வதற்கான தலைமையிடப்பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆகியவை முடிந்து உள்ளன. நாள் ஒன்றுக்கு 160 மில்லி லிட்டர் சுத்திகரிப்புத்திறன் கொண்ட நீர்சுத்திகரிப்பு நிலையப்பணிகளும் முடிந்து உள்ளன. மின்னியந்திர உபகரணங்கள், இயல்பு நீர், நீர் சுத்திகரிப்பட்ட நீர் கொண்டு செல்லும் குழாய்களின் சோதனை பணிகள் ஆகியவை முடிந்து உள்ளன. அதாவது நீர்தேக்கத் தொட்டியில் ஏற்றி பின்னர் அதை சுத்திகரிப்பு செய்து அதன் பிறகு குழாய்கள் மூலம் கொண்டு சென்று அந்த நீரை கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள குழாய்களில் விடுவது தொடர்பான சோதனை ஓட்டம் நடந்து முடிந்து உள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் இந்த திட்டத்துக்கு பதிக்கப்பட்டு உள்ள குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.

பொது சம நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து இயல்பு நீர் திறக்கப்பட்டு தொகுப்பு இரண்டின் கீழ் தர்மபுரி நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் நெசவாளர் காலனியில் புததிதாக கட்டப்பட்டு உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தொகுப்பு மூன்றின் கீழ் மொரப்பூர் பிரிவு சாலையில் இருந்து குழாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளன. தொகுப்பு ஐந்தின் கீழ் பெண்ணாகரம் மடம் கிராமத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவு வரையில் வெளிப்போக்கிகுழாய்கள் மூலம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு உள்ளது.

இதே முறையில் திட்டத்தின் அனைத்து தொகுப்புகளிலும் அமைக்கப்பட்டு உள்ள பிரதான குழாய்கள், கிளை குழாய்கள். பிரிவு பிரதான குழாய்கள், சுத்தப் படுத்தப்பட்டு தண்ணீர் வெளி யேற்றப்பட்டு உள்ளது. மேலும் ஓகேனக்கல்லில் உள்ள நீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் இருந்து பொது சமநிலை நீர்தேக்கத்தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளத. 4 தொகுப்புகளின் கீழ் குழாய் பதித்தல். கட்டுமான பணிகள், மின் எந்திரங்கள் நிறுவும் பணிகள் ஆகியவை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. வருகிற 29-ந் தேதி இந்த திட்டத்தின் பயனை மக்களுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் முறை மூலம் இந்த குடிநீர் வினியோக திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக 29-ந் தேதி முதல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 16பேரூராட்சி பகுதிகளுக்கு ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதன்படி இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் தொடக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, பழனியப்பன் மற்றும் கலெக்டர் லில்லி, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 25 மே 2013 07:29

படிப்புகள்: 2