Dinaithal

Switch to desktop

கதை - திரைவிமர்சனம்

உணர்வுகளை எழுத்துக்களாக மாற்ற, விபரிதமான செயல்களைச் செய்யும், சைக்கோதனம் வாய்ந்த ஒரு எழுத்தாளனின் கதை தான் இந்த 'கதை'.


'புக்கர் பிரைஸ்' வாங்கிய எழுத்தாளரான ஷான்குமார், வயலின் இசைக்கலைஞரான நிவேதிதாவைக் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். தன் காதல் திருமண வாழ்க்கையை புத்தகமாக எழுதும் ஷான்குமாருக்கும், நிவேதிதாவுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.


ஷான்குமார், தான் எழுதும் கதைகளின் பாத்திரமாக தன் மனைவியை மாற்றி அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை எழுத்துக்களாக கொண்டுவருகிறார். ஷான்குமாரின் இந்த விபரிதத்தினால் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிவேதிதா, தன் பள்ளி நண்பனிடம் உண்மைகளைச் சொல்ல, ஆறுதல் சொல்லிய நண்பன் நிவேதிதாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறான். இதை தன் கணவனிடம் சொல்கிறார் நிவேதிதா. ஆனால் ஷான்குமார், எழுதும் புதிய புத்தகத்திற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றியதே ஷான்குமார் தான் என்ற உண்மையை அரிந்து அதிர்ந்துப் போகிறார் நிவேதிதா.


தான் எழுதும் புத்தகத்தில் இடம் பெறும் பெண் கதாப்பாத்திரம் தற்கொலை செய்துக்கொள்வதால், நிவேதிதாவையும் தற்கொலை செய்துக்கொள் என்று வற்புறுத்துகிறார் ஷான்குமார். இந்த மரணப்போராட்டத்தில் மாட்டிக்கொல்லும் நிவேதிதாவின் நிலை என்ன என்பதே படத்தின் முடிவு.


மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன்களில் ஒரு வித்தியாசமான முறையைக் கொண்ட படம். தமிழ் சினிமாவில் சைக்கோ கலந்த கதாபாத்திரங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும். ஒரு எழுத்தாளனுக்கு அவன் எழுத்தின் மேள் உள்ள ஈடுபாடு, அவனையே எப்படி ஏப்பம் விடுகிறது என்பதை எடுத்துக்கூறும் படமாக இருக்கிறது 'கதை'.


படத்தின் முதல் பகுதியில் படத்தை நகர்த்திச் செல்வதற்காகவே அமைக்கப்பட்ட காதல் காட்சிகள். படத்தில் இடம்பெறும் புதுமுகங்களைப்போல காட்சிகள் புதிதாக ஏதும் இல்லை. இதற்கு முன் பார்த்த படங்களில் இடம்பெறும் காட்சிகள் தான். ஷான்குமார் ஒரு சைக்கோ தனம் வாய்ந்த எழுத்தாளன் என்பது மட்டும் இயக்குநர் மறைத்து வைத்திருந்த மர்மம். அந்த மர்மத்தை வைத்துக்கொண்டு படத்தை ஆரம்பத்தில் மந்தமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர்.


புதுமுகம் ஷான்குமார், சைக்கோ கதாப்பாத்திரத்தை கவனமாக கையாண்டுள்ளார். இறுதிக்காட்சியில் தன் மனைவியை தற்கொலை செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தும் காட்சிகளில் ஷான்குமார், தன் நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார். நாயகனுக்கு சளைக்காமல் நாயகி நிவேதிதாவும் நடித்திருக்கிறார். அழுகிற காட்சிகளைத்தவிர மற்றக்காட்சிகளில் இவரா நாயகி என்று ஆச்சரியப்படும் அளவில் தான் இருக்கிறார்.


கஞ்சா கருப்புவின் காமெடி செம கடி, இந்த கடி போதாது என்று நளினி - கிரேஸி குமார் ஜோடிகளை வேறு கடிக்க விட்டிருக்கிறார் இயக்குநர். ஷான்குமார், நிவேதிதா, அபினய் இவர்களைச் சுற்றியே படம் நகர்வதால், சொல்லும் படியான கதாபாத்திரங்கள் வேறு இல்லை. சின்னத்திரையில் நடிகராக வளம் வந்த அபிஷேக் இப்படத்தின் மூலம் இயக்குநராக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். முதல் படத்திலே கனமான கதையை தேர்ந்தெடுத்ததற்கு அபிஷேக்கை கண்டிப்பாக பாராட்டலாம்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 03 பிப்ரவரி 2010 06:21

படிப்புகள்: 108

ஜக்குபாய் - திரைவிமர்சனம்

கடத்தல் கும்பல் வளையத்துக்குள் சிக்கிய மகளை மீட்க போராடும் போலீஸ் அதிகாரிகதை...


நேர்மையான அதிரடி போலீஸ் அதிகாரி சரத்குமார். சர்வதேச போதை கடத்தல் கும்பல் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருப்பதை அறிந்து பிடிக்க போகிறார். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீஷா அக்கூட்டத்தில் வேலை பார்ப்பதை கண்டுபிடிக்கிறார். ஸ்ரீஷாவை காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது.


ஸ்ரீஷாவை வாழ்த்த வரும் கடத்தல் கும்பல் தலைவனை சரத்குமாரும், மாறுவேடத்தில் நிற்கும் போலீசும் துப்பாக்கி முனையில் வளைக்கிறது. அவன் ஸ்ரீஷா தந்தையை கொன்று தப்புகிறான். அதிர்ச்சியாகும் ஸ்ரீஷா சரத்குமாரை வெறுக்கிறார். தாலியை கழற்றி அவர் கையில் திணித்து விட்டு பிரிந்து போகிறார்.


தமிழகம் திரும்பும் சரத் இருபத்தியோரு வருடங்கள் வேறு திருமணம் செய்யாமல் ஸ்ரீஷா நினைவாகவே இருக்கிறார். ஒருநாள் ஸ்ரீஷா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. மீண்டும் ஆஸ்திரேலியா பறக்கிறார். அப்போது ஸ்ரீஷா மூலம் தனக்கு மகள் ஸ்ரேயா இருப்பது தெரிகிறது. ஸ்ரேயாவோ தந்தை மேல் வெறுப்பு காட்டி வளர்கிறார். தந்தை என்று சொல்லாமலேயே அவருக்கு பாதுகாவலராக இருக்கிறார்.


அப்போது ஸ்ரீஷா போதை கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட விவரம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. ஸ்ரேயாவையும் அந்த கும்பல் கடத்துகிறது. மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்..


குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் களத்தில் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் கே.எஸ்.ரவிக்குமார், மனைவியை பிரிந்த துக்கத்திலும், மகளிடம் காட்டும் பிரியத்திலும் வித்தியாசமான பரிணாமம் காட்டுகிறார். சரத்குமார் குழந்தை கடத்தல் கும்பலை மந்திரி விழாவில் இடியாய் தாக்கி அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம்.


மகள் ஸ்ரேயாவை பாசத்தோடு நெருங்குவதும் அவரோ தாயை மோசம் செய்த தந்தை மாட்டினால் கொல்வேன் என்று ஆவேசமாக பேசுவதை பார்த்து தந்தை என்பதை சொல்ல முடியாமல் தவிப்பதும் இதயத்தை தட்டிப்போகும் சீன்கள். பரபரப்பான ஷாப்பிங் காம்ப்ளக்சில் கடத்தல் கும்பலை ஸ்ரேயாவிடம் பேசிக்கொண்டே அவருக்கு தெரியாமல் ஒவ்வொருத்தராய் அடித்து வீழ்த்தும் ஆக்ஷன் கைதட்டல் ரகம்.


ஹெலிகாப்டரில் நடக்கும் கிளைமாக்ஸ் பாசமும், ஆக்ஷனும் பீறிடும் சாகசம்... மகளாக வரும் ஸ்ரேயா அழகு, குறும்பு வெகுளித்தனங்களில் ஸ்கோர்பண்ணுகிறார். தாயை இழந்த தவிப்பு. தந்தை மேல் வீசும் வெறுப்பு வில்லனை சபிக்கும் கோபம் என துறுதுறு வெனவருகிறார். வில்லன் பிடியில் சிக்கும்போது தந்தை யார் என்பதை அடையாளம் கண்டு பாசமிகுதியில் அழும்போது கண்கலங்க வைக்கிறார்.


கவுண்டமணி பழைய நக்கல் நையாண்டி தனத்தில் சிரிக்க வைக்கிறார். பிளாஸ்பேக் காட்சிகள் கோர்வையின்றி நகர்வது குழப்பமூட்டுகிறது. ஆஸ்திரேலியா சம்பவ சீன்களை இன்னும் விறுவிறுப்பாக தொகுத்து இருக்கலாம். ரப்பியன் இசையில் பாடல்கள் இனிமை. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு ஆஸ்திரேலிய அழகை அள்ளுகிறது.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 02 பிப்ரவரி 2010 06:56

படிப்புகள்: 112

தமிழ்ப்படம் - திரைவிமர்சனம்

ஒரு படம் முழுக்க முழுக்க தமிழ்படங்களை கிண்டலும், கேலியும் செய்து இதுவரை வந்ததில்லை .

தமிழ்ப்படங்களின் கதை என்ன? அதுதான் தமிழ்ப்படத்தின் கதையும்.

சினிமாபட்டி என்ற ஊரில் ஆண்பிள்ளைகளை கள்ளிப்பால் (P.R.S. கள்ளிப்பால்) ஊற்றிக் கொல்ல வேண்டுமென்பது நாட்டாமை தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை மீறினால் கிடைக்கும் தண்டனை அசத்தல் காமெடி.(படம் பாருங்கள்!) அந்த தண்டனையிலிருந்து பாட்டியால் தப்பித்து சென்னைக்கு வரும் ஹீரோ, சின்ன வயதில் மார்க்கெட்டில் மாமூல் வாங்கும் ஒரு கும்பலின் அக்கிரமத்தைப் பார்க்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. உடனேயே ????( சைக்கிள் பெடல்) பெரியவனாகி போய் அந்த அக்கிரமக்காரர்களை அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவர்கள் அதே மார்க்கெட்டில், அடித்தபடி இருக்கிறார்கள்.???

இப்படி படம் முழுக்க சிரிச்சு கைதட்டி பார்க்க முடியுமா! ? பார்க்க வைத்திருக்கிறார்கள். சீன்களைச் சொல்வதினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது..

ஹீரோ சென்னைக்கு வந்ததைக் காட்ட - சென்ட்ரல் ரயில் நிலையத்தைக் காட்டுகிறார்கள். அப்போது கேமரா முன் ஒரு ஆட்டோக்காரர் வந்து திட்டுகிறார் பாருங்கள்.(. ??? படம் பாருங்கள்).

நாயகியின் அப்பா, நாயகி மீது வைத்திருக்கும் அன்பைக் காட்ட - நாயகியின் புகைப்படத்தைக் கோணலாக மாட்டிய வேலைக்காரிக்கு ஒரு தண்டனை கொடுக்கிறார். என்ன தண்டனை என்பதையும் அதற்கு அந்த வேலைக்காரி காட்டும் எக்ஸ்ப்ரெஷனையும்...( படம் பாருங்கள்!).

படத்தில் வரும் சின்ன, சின்ன கேரக்டர்கள் கூட நச் என்று செய்திருக்கிறார்கள். குறிப்பாய் தேவாவாக வரும் மம்மூட்டி சாயல் ஆளும், அவர் தவறுதலாய் போய் மன்னிப்பு கேட்கும் ரமணாவும், படத்தை பாருங்கள் அட்டகாசம்.

ஒரே பாட்டில் ஒரு காபி எடுத்து வருவதற்குள் பணக்காரனாவது, அட்டகாசம்.

காவல்துறை ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறது. அங்கே டீ கொண்டு வருபவர்... ம்ம்ம்ம்.. (படத்தை பாருங்க!) அதேபோல அந்த மீட்டிங்கிலேயே ஒரு கருப்பு ஆடு இருப்பதை ஹீரோ கண்டுபிடித்து தோலுரிப்பதும் அருமை!

க்ளைமாக்ஸில் ஹீரோ மருத்துவமனையில் இருக்கிறார், ஹீரோயின் வில்லனால் சுடப்படுகிறார்.. ஹீரோ வந்து காப்பாற்றுவாரில்லையா? அப்படித்தான் இதிலும். ஆனால் அவர் வருவதற்கு நடுநடுவே ஒன்றைக் காட்டுகிறார்கள் பாருங்கள்...???

ஹீரோவின் வீடு - அட்டகாசம்.

அப்பாவைத் தேடிப்போகும் ஹீரோவின் குடும்பப்பாடலாய் ஒரு பாடலைப் போடுகிறார்கள். தியேட்டரில் ரசிகர்கள் சிரிப்பை நிறுத்த மறக்கின்றனர். (படத்தை பாருங்க!)

ஹீரோ ஒவ்வொருவரையும் கொல்ல போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் படு சுவாரஸ்யம்! (படத்தை பாருங்க!)

கஸ்தூரி - இவ்வளவு செக்ஸியாய் ஸ்லிம்மாய்.. Well Return கஸ்தூரி.

இசையில் கண்ணனின் ஒமகசீயா..பச்ச, குத்துவிளக்கு, பாடல் நன்றாக உள்ளது. பிண்ணனி இசையும் அருமை.ஓ மகஸீயாவில் பாடல் வரிக்கு சிவாவின் எக்ஸ்ப்ரஷனுக்கு தியேட்டர் அதிருகிறது.

அதேபோல அந்த டூயட் முடிந்தபின், தோளில் பையுடன் வீட்டுக்கு வரும் சிவாவை ‘எங்கடா ரெண்டு நாளா ஆளைக் காணோம் என்று பாட்டி கேட்க, ‘ஒரு டூயட்டுக்கு போயிருந்தேன் பாட்டி என்கிறார் பாருங்கள்.. அசத்தல்!

சிவாவைத்தவிர வேறு யாருமே இந்த கேரக்டருக்குப் பொருந்துவார்களா என்பது சந்தேகமே. ஹீரோக்களின் அலட்டலை தன் அலட்டாத நடிப்பில் காண்பித்து பின்னி எடுத்துவிட்டார்.

வசனம். கே. சந்துரு. எல்லாமே டைமிங் காமெடி வசனங்கள், மிகுந்த சிரத்தையோடு எழுதியிருக்கிறார். குறிப்பாக கிராமம் பற்றி சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள் அசத்தல் .

நீரவ் ஷா .. ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொரு சீனும் அசத்தல். ஓ மகசியா.. பாடல் இவ்வாண்டின் சிறந்த பாடல்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும் !.

முதல் படத்திலேயே வெற்றிக்கனியை பறித்து இருக்கிறார், டைரக்டர் சி.எஸ்.அமுதன். வாழ்த்துக்கள்

இந்த ஹீரோ என்ற வகைதொகையில்லாமல் எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தாலும் எதுவுமே புண்படும்வகையில் இல்லாமலிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

இதற்கு மேல் இந்த படத்தை விமர்சித்தால் முழுப்படத்தையும் சொல்லியது போல் ஆகிவிடும்.ஏனென்றால் முழுப்படமும் சூப்பர்.!!!

தமிழ்ப்படம் - இந்த ஆண்டின் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்....

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 01 பிப்ரவரி 2010 02:16

படிப்புகள்: 140

கோவா - திரைவிமர்சனம்

கோவா ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தயாரித்த முதல் படம். வெங்கட் பிரபு, ஹாட்ரிக் வெற்றிப்பெற நினைத்தப்படம். கதையே இல்லாத படம். (இதை நாங்க சொல்லல, வெங்கட் பிரபுவே சொன்னாரு) இத்தனை பெருமைகளையும் கொண்ட படம் 'கோவா'.


கட்டுப்பாடுடன் இருக்கும் கிராமத்தில் வாழும் மூன்று இளைஞர்கள். கிராமத்து பெரியவர் விஜயகுமாரின் மகனான வய்பவ், ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியான சந்திரசேகரின் மகனான ஜெய், ஊர் மக்கள் தெய்வக்குழந்தையாக கருதும் பிரேம்ஜி, ஆகிய மூவரும் கிராமத்து கட்டுப்பாட்டை அடிக்கடி மீறுகிறார்கள். இதற்கிடையில் கிராமத்தை விட்டு ஒரு வாரம் எங்கயாவது போய் விட வேண்டும் என்று நினைத்து. மதுரையில் உள்ள தங்களின் நண்பனிடம் போகிறார்கள்.


மதுரையில் உள்ள நண்பனுக்கும், வெளிநாட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த திருமணம் முடிந்ததும் "இனி நான் லண்டனில் தான் வாழப்போகிறேன்" என்று நண்பன்ச் சொல்ல, அதைக்கேட்ட மூவரும் நாமும் இதுபோல வெளிநாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக மூவரும் கோவா செல்கிறார்கள். கோவாவில் என்ன நடக்கிறது என்பதுதான் படமும் அதன் முடிவும்.


தமிழ்நாட்டு பண்ணைபுரத்தில் தொடங்கும் படம். சரவெடி வெடித்ததுப் போல் கலகலப்பாக போகிறது. ஆனால் கோவாவிற்கு நகரும் படமோ சில இடங்களில் ஊசிப்போன பட்டாசுப்போல நகர்கிறது. ஏற்கனவே வெளியான தமிழ் படங்களில் இடம்பெறும் சில காட்சிகளைப் பயன்படுத்தி 'கோவா' படத்தின் காட்சியை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். தனது இரண்டு படங்களிலும் கதை கருவை, கண்ணும் கருத்துமாக கையாண்ட வெங்கட் பிரபு, கோவாவில் அதை கோட்டை விட்டு விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது படத்தின் இரண்டாம் பகுதி.


பிரேம்ஜி எப்போதும் போல இந்த படத்திலும் தனது கைஜால ஸ்டைலைப் பயன்படுத்தியுள்ளார். வெளிநாட்டுப் பெண்ணை காதலிக்கும் இவர் நகைச்சுவையில் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் வெறுப்பு வருகிறது. ஜெய், பியா ஜோடிகளுக்கு ஒரு பாடல், கொஞ்சம் ஊடல், கொஞ்சம் காதல். அமெரிக்காவை ஆங்கிலத்தில் எழுத தெரியாத ஜெய் ,ஆங்கிலத்தில் பேசுவதும், கோவாவைப் பற்றி தன் நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பதும் என சிரிப்பு ஆரவாரம் செய்து கைதட்டல் பெறுகிறார்.


பணக்கார பெண்ணாக வரும் சினேகா, உடைகளில் புதுமை காட்டியுள்ளார். ஆண்களை அடக்கி ஆளும் மனம் படைத்த இவரிடம் மாட்டிக்கொள்ளும் வைபவ், படும்பாடு ஒரு புறம் இருக்க, சம்பத்-ஆகாஷ் அரவிந்த் ஜோடிகளின் எக்குதப்பான உறவு என தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் வெங்கட்.


சம்பத்தின் கதாபாத்திரம் ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நடிப்பிலும் பிண்ணி எடுத்துள்ளார் சம்பத். ஆனந்தராஜ், சண்முகசுந்தரம், சந்திரசேகர் என ஒரு பெரிய நடிகர்களின் பட்டாளத்தை வைத்துக்கொண்டு நையாண்டி செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.


சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்தை வேறு பரிமாணத்தில் காட்டியுள்ளது. இருளைக்கூட ஒளிரவைத்துள்ளது சக்தி சரவணின் கேமரா. யுவனின் இசையில் 'ஏலேலே பண்ணைபுரம்....', 'கோவா....', 'காதல் என்றால்..' ஆகிய பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும். யுவனிடம் இருந்து ரசிகர்கள் இன்னும் எதிர்ப்பார்க்கிறார்கள். (இளைய இசைஞானி என்று புதிய பட்டத்தை வேறு யுவனுக்கு கொடுத்திருக்கிறார்கள் 'கோவா' குழுவினர்.) ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த இந்த 'கோவா' பயணம் ஏமாற்றம் அளித்தாலும். ஒரு முறை சென்று வரலாம்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 07:00

படிப்புகள்: 233

குட்டி - விமர்சனம்

News நடிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா, ராதா ரவி, ஆர்த்தி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்
பிஆர்ஓ: நிகில்


குட்டியூண்டு காதல் கதை என்பது தெரிந்தோ என்னமோ குட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ்-தெலுங்கு-ஹிந்தி என சகல இந்திய மொழிகளிலும் அடித்து துவைத்து அரதப் பழசாகிப்போன வழக்கமான காதல் கதைதான் இந்தக் குட்டியின் கதையும்.


தனுஷுக்கு ஸ்ரேயா மேல் காதல். ஸ்ரேயாவோ சமீரை லவ்வுகிறார்... இந்தக்காதல் போட்டியில் வெல்வதில் வழக்கம் போல காமெடியும் ஆக்ஷனும் கலந்த மோதல். கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற 'பஸ் டிக்கெட் சைஸ்' கதை இந்த குட்டி. படத்துக்குப் படம் தனுஷுக்கு நடிப்புத்திறமை மட்டுமல்ல. வாயும்தான் கூடிப் போச்சு. விட்டால் அடுத்த படத்திலேயே கருத்து கந்தசாமியாகி காதில் ரத்தம் வரவைப்பார் போலிருக்கிறது.


ஆனாலும் க்ளைமாக்ஸில், 'எல்லாத்தையும் நான் விளையாட்டாவே எடுத்துக்குவேன்னு நினைச்சிட்டேல்ல. என்று கேட்டுவிட்டுத் தேம்பும் காட்சியில் பதிகிறார் மனதில். சில காட்சிகளில் தனுஷுக்கு சீனியர் மாதிரி தெரிந்தாலும் ஸ்ரேயா கூலாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.


எல்கேஜி பையன் மாதிரிதான் தெரிகிறார், படத்தின் இன்னொரு ஹீரோவான சமீர். ஆர்த்தியை கிட்டத்தட்ட பையனாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் ரொம்ப இயல்பாக நடித்துள்ளார். கல்லூரி மைதானத்தில் தனுஷுக்கும், ஸ்ரீநாத் அண்ட் கோவுக்கும் நடக்கிற காரசார காமெடி உரையாடலில் தியேட்டர் கலகலக்கிறது. கதை நடப்பது சென்னையா, கன்யாகுமரியா, காயல்பட்டணமா, தெலுங்கு தேசமா... ஏதாவது ஹில் ஸ்டேஷனா... மகா குழப்பம்.


ஒளிப்பதிவு இதம். குறிப்பாக தனுஷின் வீடு இருப்பதாகக் காட்டுமிடம்.. ரசனை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கெனவே கேட்ட மெட்டுகள்தான்... கொஞ்சம் ஃபிரஷ்ஷாக ஒலிக்கின்றன. எந்தக்காட்சியில் தனுஷ் வருவார்... ஸ்ரேயா அழுவார்... க்ளைமாக்ஸில் எந்த சீனில் தாலி கட்டுவது நிறுத்தப்படும் என படம் பார்ப்பவர்கள் பக்காவாக கணித்துச் சொல்ல முடிகிற அளவு மகா வீக்கான திரைக்கதை. ஆனாலும் வக்கிரம், வன்முறை, இரட்டை அர்த்தம், அனாவசிய குத்தாட்டம் என ரொம்ப கடுப்பேற்றாமல் விட்டுவிட்டதால், ஆபாசமில்லாமல் பார்க்க முடிகிறது.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2010 08:57

படிப்புகள்: 301

நாணயம் - விமர்சனம்

சென்னையில் பெரிய வங்கி நடத்துபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக வேலைக்கு சேருகிறார் பிரசன்னா. கொள்ளையர்கள் புக முடியாத பாதுகாப்பான வங்கி ஒன்றை உருவாக்குவது பிரசன்னா குறிக்கோள். ரொக்கப்பணம், நகைகள், தஸ்தாவேஜுகள், இரும்பு அறைக்குள் வைக்கப்பட்டு அதை பூமிக்கு அடியில் தண்ணீருக்குள் மறைத்து வைக்கும் நவீன தொழில் நுட்பத்தில் லாக்கரை வடிவமைக்கிறார். வங்கி குழு அதை ஏற்கிறது. பிரசன்னா மேல் நம்பிக்கை வைத்து எஸ்.பி.பி. அவ்வங்கியை கட்டுகிறார்.


அங்குள்ள பணத்தை கொள்ளையிட சிபிராஜ் கோஷ்டி திட்டமிடுகிறது. இவர் எஸ்.பி.பி.யால் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஜெயிலுக்கு போன பழைய வேலைக்காரர். கொள்ளையடிக்க பிரசன்னாவை பயன்படுத்த திட்டமிடுகின்றனர். விவாகரத்தான ராகிணியை பிரசன்னா விரும்புகிறார். முதல் கணவரை கொன்று பழியை பிரசன்னா மேல் போடுகின்றனர். தப்பவழியின்றி கொள்ளை கும்பலிடம் மாட்டுகிறார். பிரசன்னா உதவியுடன் கொள்ளை திட்டத்தை வகுக்கின்றனர். திட்டமிட்டபடி பூமிக்குள் துளை போட்டு வங்கிக்குள்ளும் நுழைகிறார்கள். வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா என்பது கிளைமாக்ஸ்.


வங்கியில் கடன் வாங்கி சொந்த தொழில் துவங்கும் லட்சிய இளைஞன் வேடத்தில் ஜொலிக்கிறார் பிரசன்னா. கனவு வங்கியை உருவாக்கி எண்ணங்கள் நிறைவேறும் சந்தோஷத்தில் இருக்கும் அவரை கொள்ளை கும்பல் சுற்றி வளைப்பது எதிர்பாராதது. விவாகரத்தான ராகிணியுடன் திடீர் காதல் கல்யாண பேச்சுக்கள் ஒட்டவில்லை.


தன்னால் பாதுகாப்பாக கட்டிய வங்கியை தன்னை வைத்தே கொள்ளையடிக்க துணியும் கொள்ளையர்களிடம் இருந்து விடுபட முடியாமல் தவிக்கையில் பரிதாபம் அள்ளுகிறார். கிளைமாக்சில் அதிரடி நடத்தி ஹீரோயிசத்தை நிமிர வைக்கிறார். வில்லன் அந்தஸ்துக்கு மாறியுள்ள சிபிராஜ் ஸ்கோர் பண்ணியுள்ளார் ராகிணி கணவனையும் சக கூட்டாளியையும் கொல்வதில் கொடூரம். நக்கல், நையாண்டியுடன் வில்லன் கெட்டப்பில் “பாஸ்.


ஆக்ஷன் சீன்களை விறுவிறுப்பாக தொகுத்துள்ளார் இயக்குனர் சக்தி எஸ். ராஜன். பிரசன்னா காதல், கடற்கரை கொலை, கொள்ளையர் ஆஜர், வங்கி கொள்ளை, சிபியின் பேச்சை அவருக்கு தெரியாமல் ரிக்கார்டு செய்யும் தந்திரம் பிறகு அவரிடமே மாட்டும். அவஸ்தை என சஸ்பென்ஸ் திரில்லரோடு சீன்கள் நகர்வது படத்தோடு ஒன்ற செய்கிறது.


ராகிணியின் முதல் திருமண விஷயத்தில் தெளிவில்லை. வைப்பாட்டிக்காக சொந்த வங்கியை கொள்ளையடிக்க உடன்படும் எஸ்பி.யின் செயலில் நம்பகத்தன்மை இல்லை. அவரது மறுபக்க வாழ்க்கை எதிர்பாராத அதிர்ச்சி. ராகிணி நல்லவராக வந்து வில்லியாக மிரட்டுகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு தமனின் பின்னணி இசை பெரிய பக்கபலம். ஜேம்ஸ் வசந்தன் பாடலில் நான் போகிறேன் மேலே பாடல் இனிமை.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 18 ஜனவரி 2010 06:02

படிப்புகள்: 159

'ஆயிரத்தில் ஒருவன்' - திரை விமர்சனம்

இயக்குநர் செல்வராகவன் தன் பாணியில் இருந்து விலகி, சரித்திர காலத்தை இப்போது உள்ள விஞ்ஞான காலத்துடன் இணைத்து உருவாக்கியுள்ள ஒரு பிரமாண்ட படம்.

சோழர், பாண்டியர் போரின்போது பாண்டியர் குலத்தெய்வத்தின் சிலையை கவர்ந்துச்செல்கிறார் சோழ மன்னர். வியட்நாம் அருகில் உள்ள 'மிட்ச்' தீவில் சோழன் இறுதி காலத்தில் பதுங்கியதாக தகவலை கண்டரியும் தொல்லியல்துறை போராசிரியர் பிரதாப் போத்தன், சோழர்கள் வாழ்ந்த இடத்தைத் தேடி அத்தீவுக்கு செல்கிறார். சென்றவர் திரும்பவில்லை.

பிரதாப் போத்தனை கண்டுபிடிக்க அரசு ஒரு குழுவை அமைக்கிறது. அதில் தொல்லியல்துறை அதிகாரியான ரீமா சென், பிரதாப் போத்தனின் மகள் ஆண்டிரியா, இராணுவ அதிகாரி அழகம் பெருமாள் ஆகியோர் செல்ல, இவர்களுக்கு எடுபிடி வேலைச்செய்ய கார்த்தியும் அவருடைய குழுவும் செல்கிறார்கள்.

இந்த பயணத்தில் பல ஆபத்தான சூழ்நிலைகளைச் சந்திக்கும் இந்த குழு, பல உயிர்களை இழந்தப்பிறகு சோழர்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு உள்ள பாதாளத்தில் சோழ மன்னனான பார்த்திபனும் சோழநாட்டு மக்களும், பெரும் பஞ்சத்தின் நடுவே கொடூரமான வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூரத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்டிரியா ஆகிய மூவரும் சிக்கிக்கொள்கிறார்கள். பிறகு இவர்களின் நிலை என்ன?, சோழர்கள் எப்படி இந்த கொடூர நிலைக்கு தள்ளப்பட்டனர். என்பதை தமிழ்த்திரைப்படங்களில் பார்க்காத கதைக்களத்தைக்கொண்டு சொல்லியிருக்கும் படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

தீவுக்குச்செல்லும் வழியில் கடலில் வரும் ஒருவையான நெருப்புப் போன்ற விலங்கு இரத்ததை உரிஞ்சுவது, முதல் மிரட்டல் என்றால் அதன் பிறகு வரும் ஆபத்துக்களான பாம்புகள், மக்களைத் தின்னும் காட்டு வாசிகள், மணல் பொதக்குழிகள் என ஒரு திகில் படத்தை பார்க்கமுடிகிறது.

கார்த்தி கலகலப்பான எம்.ஜி.ஆர். ரசிகராக அறிமுகமாகி கசக்கிப்போட்ட காகிதம் போல் ஆகிறார். ரீமா சென், ஆண்டிரியா ஆகிய இருவரிடமும் காதல் வசனம் பேசுவதும், ரீமா சென்னுடன் சண்டைப்போடுவதும் என ஒரே ஆராவாரம் செய்திருக்கிறார். அதே சமயம் படத்தின் இடைவேளைக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறார்.

பார்த்திபன் சோழ மன்னன் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றினாலும் அவருடையா காட்சிகளில் பெரிதும் தோய்வு ஏற்படுகிறது.

ரீமா சென், சோழ மன்னன் இருப்பிடத்திற்குச் சென்று தன்னை பாண்டியன் வாரிசு என அறிமுகப்படுத்துவது. பார்த்திபனுடன் வால் சண்டையிடுவது. என மிரட்டி இருக்கிறார். ஆண்டிரியா எந்த அலட்டலும் இல்லாமல் அசத்தி இருக்கிறார். மிடுக்கான இரானுவ அதிகாரியாக வரும் அழகம் பெருமாள் மனதில் நிற்கிறார்.

செல்வராகவனின் முயற்சிக்கும், உழைப்புக்கும் ஒரு சபாஷ் சொன்னாலும். கதை கையாண்ட விதத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சோழர்கள் வாழ்ந்த இடத்தை தேடிச்செல்லும் போது படத்தில் இருந்த விருவிருப்பு, சோழ மன்னனை கண்டரிந்ததும் காணாமல் போகிறது. படத்தின் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சோழ மன்னனின் பாதாளத்தில் நடப்பதால் ரசிகர்களுக்கு சிறிது அலுப்பு ஏற்படத்தான் செய்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் 'உன் மேல ஆசைதான்.....' என்றப்பாடலைத் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை ஓரளவு பராவயில்லை என்ற ரகம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவின் மூலம் காட்சிகள் பிரமாண்டமாகவும், மிரட்டலாகவும் உள்ளது. கனிணி வரைகலையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சோழர்களின் வாழ்க்கை காட்சிகளை சிறிது குறைத்திருக்கலாம். என்ன சொல்கிறோம் என்பதை காட்டிலும் அதை எப்படி சொல்கிறோம் என்று செல்வராகவன் யோசிக்க வில்லையோ, என்னவோ. படத்தின் கதைப்புரியாமல் ரசிகர்கள் புலம்புவதை திரையரங்குகளில் கேட்க முடிகிறது.

'ஆயிரத்தில் ஒருவன்' புரியாத ஒரு புதிர்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 16 ஜனவரி 2010 03:08

படிப்புகள்: 172

புகைப்படம் - திரைவிமர்சனம்

News கதைக்கு ஏற்ப, கல்லூரிக்கால நண்பர்களின் சோகம், சந்தோஷம், காதல் என ஒரு கல்லூரி வாழ்க்கையைக் கண்முன் நிற்க வைக்கிறது இந்தப் 'புகைப்படம்'


பள்ளி நண்பர்களான நந்தா, அம்ஜத் இருவரும் ஒரே கல்லூரியில் சேருகிறார்கள். இவர்களுக்கு முதல் நாளே யாமினியின் நட்பு கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து முரட்டு இளைஞனான சிவம் மற்றொரு நண்பராக, ஹரீஷ், கல்லூரி பேராசிரியரின் மகளான பிரியா, மூத்த மாணவியான மிருணாளினி என இவர்களுடைய நட்பின் வட்டம் விரிகிறது. எப்போதும் போல ஆட்டம், பாட்டம், ராகிங் எனப் போகிறது. இதற்கிடையில் அம்ஜத், பிரியா காதல் வயப்பட, தங்களின் நண்பர்களுக்குத் தெரியாமல் தங்களது காதலை வளர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் படிப்பு முடிந்து பிரிகிற நேரம் வருகையில் காதல் ஜோடிகள் தங்களது காதலைப்பற்றி தம் நண்பர்களிடம் தெரிவிக்கிறார்கள்.


அதே சமயம் ஹரீஷ், பிரியாவை ஒருதலையாகக் காதலிக்க, அம்ஜத் - பிரியா காதலிப்பதை அறிந்து தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் நண்பர்களுக்கிடையே என்ன விளைவு ஏற்பட்டது? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. மற்ற தமிழ்த்திரைப்படங்களில் கண்ட அதே கல்லூரி வாழ்க்கையைத்தான் இந்தப்படத்திலும் பார்க்க முடிகிறது என்றாலும் அதை ரசிக்கவும் முடிகிறது. படத்தின் முதல் பாதியில் மாணவர்கள் பேசிக்கொண்டு இருப்பதையே காண்பிப்பதால் படத்தில் சிறிது தொய்வு ஏற்படத்தான் செய்கிறது.


கல்லூரிப்பேராசிரியராக வரும் சண்முகசுந்தரம் இடம்பெறும் காட்சிகள், திரையரங்குகளில் சிரிப்பலையை உண்டாக்குகின்றன. படத்தில் நடித்த அத்தனை புதுமுகங்களும் மனத்தில் நிற்கும் வகையில் நடித்துள்ளனர். பாடல்கள் அத்தனையும் புரியும் வகையில் இருந்தாலும் ‘ஒரு குடையில் பயணம்...', 'இது கனவோ இது நிஜமோ.... பாடல்கள் மனத்திற்குள் நிற்கின்றன. விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, கொடைக்கானலின் மலைகளையும் தெருக்களையும் அழகாகப் படம் பிடித்துள்ளது.


படத்தில் இறுதிக்காட்சியின் நீளத்தை இயக்குநர் குறைத்திருக்கலாம். திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். அழுத்தமான இறுதிக்காட்சியுடன் களம் இறங்கியிருக்கும் இயக்குநர் ராஜேஷ்லிங்கம், செல்வராகவனின் இணை இயக்குநர் என்பதை நிலை நிறுத்தியுள்ளார்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 11 ஜனவரி 2010 08:02

படிப்புகள்: 119

நில் கவனி என்னை காதலி - விமர்சனம்

போலீஸ் அதிகாரி மகாதேவன் தாதாக்களை தனக்கு அடிமைகளாக வைத்து அவரை எதிர்க்கும் ஆஷிஷ் வித்தியார்த்தியை தீர்த்து கட்டுகிறார். ஆஷிஷ் மகன் கலாபவன் மணியாக வளர்ந்து ரவுடி போலீஸ் ஆகிறார். மகாதேவனை கொன்று பழி தீர்க்கிறார். அடியாட்கள் வைத்து தாதாவாக ஆட்டூழியமும் செய்கிறார்.


போலீஸ் அதிகாரியையே போட்டுத்தள்ளுகிற பிளாக், காவல்துறையில் இருந்தாலும் கொலைகள் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் லாரா (நமீதா) அப்பாவையும் போட்டுத்தள்ளிடுறான். இதை கண்முன்னே பார்க்கிற லாராவின் தங்கச்சி ஊனமாகிடுறா. பல கொலைகள், வெட்டுக் குத்துன்னு பண்ணிட்டிருக்கிற, பிளாக்கிடம் பாரில் டேன்ஸ் ஆடுற லாராவை தங்களிடம் ஒப்படைத்தால் பல லட்சஙகள் தருவதாக சொல்லிக்கொண்டு 3 பேர் வருகிறார்கள். அவர்களுக்காக, லாராவை கடத்தப் போகும் பிளாக்குக்கு லாராவை பிடித்துப்போகிறது. அவளை அடைந்தே தீரவேண்டும் என்று பிளாக் காய்நகர்த்த, அவளுக்கு இவன்தான் தன் அப்பாவை கொன்றவன் என்று தெரியவர அவனை வெறுக்கிறாள். அவனது தொந்தரவுகள் தொடந்து கொண்டே இருக்க, கடைசியில் அவனை திருமணம் செய்ய சரி என்கிறாள். அவள் சம்மதம் தந்துவிட்ட சந்தோஷத்தில் பிளாக் லாராவை அணைக்க, கத்தியால் அவனைக் குத்திவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள் லாரா.


தங்கையுடன் கேராளவுக்கு வரும் லாரா அங்கு வீடு வாடகைக்கு பிடித்து தங்குகிறாள். ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்கிறாள். அங்கு வரும் கணேஷ் என்பவன் அவளை அடைய முயற்சிக்க அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்து அவளை காப்பாற்றுகிறான் போட்டோகிராபர் அமீர் உஸ்மான். அவன் அவளை படம் பிடித்து ஒரு பத்திரிகையில் போட லாராவைத்தேடி வரும் பிளாக்கின் ஆட்கள் கண்ணில் அந்தப்பத்திரிக்கை பட்டுவிடுகிறது. கேரளா வந்து அவளை தேடுகிறார்கள். போட்டோகிராபர் அமீர் பாதுகாப்பில் அவள் இருப்பது தெரிந்து அவளை துரத்துகிறார்கள். இதற்கிடையில அமீர் உடனான நட்பு இருவருக்கும் காதலாக மலர்கிறது. செத்துவிட்டான் என இவ்வளவு நாளும் நினைத்திருந்த பிளாக் உயிருடன் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள் லாரா. பிளாக்கிடம் இருந்து லாராவை காப்பாற்றுவதற்காக அவளை அவனது ஏரியாவிற்கு கூட்டிவருகிறான் அமீர். இங்கும் வந்துவிடுகிற பிளாக் டீம் ஒரு உண்மையை போட்டு உடைக்கிறது.


போட்டோகிராபர் அமீர் லாராவை பல லட்சங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், அதிலிருந்து காப்பாற்றவே பிளாக் அவளை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் பிளாக் சொல்கிறான். அமீர் நல்லவன் இல்லை. அவன், பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்பவன் என்னும் உண்மை தெரியவர கடைசியில் பிளாக்குடன் சேர்கிறாள் லாரா.


லாராவாக நமீதா. நமீதா படமாச்சே பூமாதிரி இருக்கும் என்று நினைத்தால் படம் புயல் மாதிரி பக்கா ஆக்ஷன். பல படங்களில் இருந்து பிட்டு பிட்டா எடுத்து சேர்த்து வெச்சமாதிரி காட்சி அமைப்புகளும் திரைக்கதையும். இடைவேளை வரை என்ன... படம் முழுக்கவே... பிளாக் கேரக்டர் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர். டப்பு டிப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. யார் செத்தாலும் போலீஸ் மட்டும் வரகாணோம். போலீஸ் அதிகாரியை சுட்டு கொன்னாலும் கூட ஒரு போலீஸ் கூட பிளாக்கை தேடலை. ஏன் எதற்குன்னு தெரியாமலே சண்டை போடுறாங்க. ப்ளாக் கூடவே வருகிற, அலட்டல் இல்லாத அவரது சகா கௌரி கேரக்டர் சூப்பர். மத்தபடி லாப்டப்பும் கையுமா ஓடுற ரவுடி இவனுங்களாதான் இருப்பானுங்க போலிருக்கு. பத்து நிமிஷத்துக்கு ஒருதடவை ஒரு பாட்டை போட்டிட்டே இருக்காங்க. சொதப்பல் ரகம். கதை இல்லாம எதைப் போட்டா என்ன கருமம்... கருமம்... காட்சிகள் எல்லாமே சப்பென்று இருக்கின்றன.


பிளாக்கை குத்தியவுடன் இடைவேளை விடுவதால், ஒருவேளை படம் முடிஞ்சுது போல என்று எண்ணத்தோன்றுகிறது. பெருமாள் என்றொரு கேரக்டரும் இடையில் வருகிறது அவனும் பிளாக்கும் மோதிக் கொள்கிறார்கள். சண்டை காட்சிகளை அதிகநேரம் காட்டுவதால் வெறுப்படிக்கிறது (யாருப்பா அந்த எடிட்டர்?) போட்டோகிராபர் அமீர் கேரக்டரை எங்க இருந்து புடிச்சாங்களோ, அவருக்கு யாருங்க வாய்ஸ் கொடுத்தது. டயர்ல இருந்து வால்வ் பிடுங்கின மாதிரி ஒரு வாய்ஸ்... கொடுமைடா சாமி!


நமீதாவை ஜிம்மில் கலாய்க்கும் கணேஷ் கேரக்டரும் அருவை (எங்க இருந்துதான் புடிச்சங்களோ...) பாட்டெல்லாம் தெலுங்கு பாட்டு மாதிரி ஒரே சத்தமா இருக்கு. பிளாக் வரும்போதெல்லாம் அனகோண்டா மியூசிக்கா போட்டு பயமுறுத்துறாங்க. வேற மியூசிக்கே கிடைக்கால போலிருக்கு. மூணு நாலு பேரையே திருப்பித் திருப்பி காட்டுறதால ரொம்பவே போர் அடிக்குது. போட்டோகிராபர் அமீர் வந்த பிறகு படம் கொஞ்சம் சூடு பிடிக்கும்னு பார்த்தா... மறுபடியும் புஸ்ஸுனு ஆயிடுது... நமீதாவையே போட்டு விளம்பரம் பண்ணினதால இது நமீதா படம்னு பார்த்தா ப்ளாக்தான் படம்புள்ளாவரான். பேசாம படத்திற்கு பிளாக்ன்னே வெச்சிருக்கலாம்... கடைசிவரைக்கும் பிளாக் நல்லவனா கெட்டவனான்னு யாராலையும் கண்டே பிடிக்க முடியாது... அப்படி ஒரு கேரக்டர். நமீதா கால்ஷீட் கிடைச்சதால வேறு வழியில்லாம இந்த படத்தை எடுத்திருப்பங்க போலிருக்கு.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 11 ஜனவரி 2010 08:52

படிப்புகள்: 124

மோலிகாம் - திரைவிமர்சனம்

டென்மார்க் தயாரிப்பான மோலிகாம் படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த படத்தின் விமர்சனம்:-


பதினாறு வயது பள்ளி மாணவி மோலி. சாகோ என்ற இளைஞரும், அவரது சில நண்பர்களும் தன்னை கற்பழித்து விட்டார்கள் என்று போலீசில் புகார் கொடுக்கிறார்.


போலீஸ் அதிகாரி ஜென் வழக்கை விசாரிக்கிறார். ஆனால் சாகாவோ… மோலியின் அழைப்பின்பேரில் சென்றதாக கூறுகிறார். வாழ்க்கையையே படமாக எடுக்கும் பழக்கம் உடையவர். அந்த வகையில் சம்பவம் நடந்த தினத்தில் எடுக்கப்பட்ட ஸ்டில்களை விசாரணை அதிகாரி ஜென், கம்ப்யூட்டரில் பார்க்கிறார். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு மோலியை அழைத்து சென்று, நடந்த சம்பவத்தை மீண்டும் நடித்துக் காட்டச் சொல்கிறார் ஜென். அவர் நடித்து காட்டியதில் இருந்து, மோலியிடம், சாகாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதும், அவர் எதிர்பார்த்தபடி உடல்உறவு கொள்ள மோலி மறுத்து விட்டதும், ஒரு நிலையில் அது பலாத்காரம் ஆகியிருப்பதும் தெரியவருகிறது.


சம்பவத்தை மீண்டும் நடித்து காட்டச் செய்வது படத்தை செக்ஸியாக ஆக்கியிருக்கிறது. உணர்வுப்பூர்வமான கதையை உணர்ச்சிகளை தூண்டும் வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 18 டிசம்பர் 2009 02:19

படிப்புகள்: 112

அதே நேரம் அதே இடம் - விமர்சனம்

காதலித்து ஏமாற்றிய பெண்ணை பழி வாங்கும் இளைஞன் கதை…


நிழல்கள் ரவி மகன் ஜெய். படித்து வேலையின்றி சுற்றுகிறார். அவருக்கும் விஜயலட்சுமிக்கும் காதல் மலர்கிறது. தந்தைக்கு இவ்விஷயம் தெரிய வேலை செய்து சம்பாதித்து விட்டு திருமணம் செய்து கொள் என்கிறார். அவர் அறிவுரைப்படி ஆஸ்திரேலியாவில் கிடைத்த வேலையில் சேரப்போகிறார். ஒருவருடம் பிரிந்திருப்பது என்று காதலர்கள் முடிவு செய்கின்றனர்.


கைநிறைய சம்பாதித்து நாடு திரும்பும்போது ஜெய்க்கு அதிர்ச்சி. விஜயலட்சுமி பணக்கார மாப்பிள்ளை ராகுலை மணந்து குடித்தனம் நடத்துகிறார். விஜயலட்சுமியிடம் ஆவேசப்படுகிறார். ஆனால் அவரோ பணம் தான் முக்கியம் என்று சொல்லி ஜெய்யை உதாசீனம் செய்கிறார்.


உன்னை ஏமாற்றிய அவளை பழிவாங்கு என்று நண்பன் வெறியேற்றுகிறான். அதன்படி விஜயலட்சுமிக்கு தொல்லை கொடுக்கிறார். அதிலிருந்து தப்ப ஒருநாள் என்னை அனுபவித்துக்கொள் என்கிறார் விஜயலட்சுமி. ஜெய் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்…


ஜெய்-விஜயலட்சுமி காதல் வயப்படும் சீன்கள் கலகலப்பு. தோல்வியில் ஜெய் சோகம் காட்டுகிறார். விஜயலட்சுமி கணவனே ஜெய்க்கு நண்பனாக இருப்பதும், விஜயலட்சுமியை பழிவாங்க அவன் தூண்டுவதும் திருப்பங்கள். காதலித்து ஏமாற்றும் பெண்கள் மேல் வெறுப்பு காட்டும் ராகுல் தனது மனைவியின் கடந்த வாழ்வு தெரிந்தால் என்ன செய்வாரோ என்று பதட்டப்பட வைக்கிறார். விஜயலட்சுமியை ஜெய் பழி தீர்க்கும் கிளைமாக்ஸ் பரபரக்க வைக்கிறது. விஜயலட்சுமி காதலும், கவர்ச்சியும் காட்டுகிறார்.ஜீவா கோஷ்டி காமெடி ரகளை. பவன் சேகர் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது. பிரேம்ஜி அமரன் இசையில் பாடல்கள் இனிமை.


காதல் கிரைம் கதையை இளமையாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார் இயக்குனர் பிரபு.எம். திரைக்கதையை இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். பழி தீர்த்தல் காதல் புனிதத்தை அடிபட செய்கிறது.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 23 நவம்பர் 2009 02:03

படிப்புகள்: 109

பழசிராஜா - திரைவிமர்சனம்

கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம்.


இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர்.


பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரை துவக்குகிறார். வெள்ளையர் படைகளுக்கு உதவ வேறுபகுதிகளில் இருந்து நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் குவிகிறார்கள். உள்ளூர் எட்டப்பர்களும் வெள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர்.


இதனால் ஆங்கிலேயர் படைகளை எதிர்க்க முடியாமல் பழசிராஜா வீரர்கள் நிலைகுலைகின்றனர். பழசியின் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். சரணடையும்படி பழசிராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...


கையில் வாள், வீராவேச பேச்சு, அழுத்தமான நடையில் பழசிராஜா மன்னராக பளிச்சிடுகிறார் மம்முட்டி. மனைவியிடம் நேசம் காட்டுவது, வீர உரையாற்றி படைகளை திரட்டுவது, தளபதிகள் கொல்லப்பட்டதை கண்டு கண்கள் சிவப்பாகி கலங்குவது என உணர்வுகளை கொட்டுகிறார். கிளைமாக்சில் வீரமரணத்தை தழுவி நெஞ்சில் நிற்கிறார்.


எடச்சனகுங்கன் கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்துள்ளார். முறுக்கேறிய தேகம், லாவகமான வாள்வீச்சு, மன்னனை காக்க வெள்ளைய படையை எதிர்க்கும் வெறி என வரலாற்று தளபதியாய் இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.


எட்டப்பவேலை செய்யும் சுமனை வாள் சண்டையில் கொன்று பழிதீர்ப்பது கைதட்டல். பதவி போட்டியில் பழசிராஜா படை பிரியும்போது பழசிராஜா வளர்ப்பு தந்தை என பிளாஷ்பேக் கதை சொல்லி தளபதி பதவியை தூக்கி எறிந்து மனம்பூரா வியாபிக்கிறார். இறுதியில் வெள்ளைய படைகள் சுற்றி வளைத்ததும் உங்களிடம் சிக்கி தூக்கில் தொங்கமாட்டேன் என கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்து மாவீரனாய் பிரதிபலிக்கிறார்.


மலைவாழ் பெண்ணாக வரும் பத்மபிரியா எதிரிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். பழசிராஜா மனைவியாக வரும் கனிகா சோகத்தை பிழிகிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வந்து தூக்கியிடப்படும் மனோஜ் கே.விஜயன், மனதில் நிற்கிறார்.


இளையராஜா இசை, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகளில் நாடகத்தனம். வரலாற்று கதையை ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் ஹரிஹரன்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 23 நவம்பர் 2009 01:17

படிப்புகள்: 102

2012 ருத்ரம் - விமர்சனம்

News நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்


இயக்கம்: ரோலண்ட் எமிரிக்


தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்


உலகம் அழிய நேர்ந்தால்… என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப்படம் தமிழில் ‘ருத்ரம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.


கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக்காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது. பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.


இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்… என்று போகிறது கதை.


அட கதையை விடுங்க. இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட். நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அதல் சினிமாத்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.


எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.


உலகம் அழியும் காட்சியை உருவாக்கிய விதத்துக்காக இயக்குநருக்கும் அவரது கிராபிக்ஸ் டீமுக்கும் உலகம் முழுவதுமே ஆச்சரியம் கலந்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சினிமா தொழில் நுட்பத்தின் உச்சம் இந்தக்காட்சிகள். ஒரு அழிவைச் சொல்ல இத்தனை செலவும் உழைப்பும் தொழில் நுட்பமும் தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும்… இந்தப் படத்துக்காக செலவான தொகை ரூ. 1,400 கோடி என்கிறார்கள்.


படம் கொஞ்சம் நீளமே. ஆனால், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இரண்டரை மணி நேரமும் கழிகிறது. அசத்தல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 நவம்பர் 2009 02:41

படிப்புகள்: 101

கண்டேன் காதலை - திரை விமர்சனம்

Kanden Kadhalai இந்திப்படத்தின் தமிழ் ‌ரீமேக். ஜெயம் கொண்டான் இயக்குனர் ஆர்.கண்ணனின் இரண்டாவது படைப்பு.


தோல்வியின் சுமையால் சோகமே உருவாக தி‌ரியும் ஹீரோ. துறுதுறுவென அந்த‌க்கணத்தில் மட்டுமே வாழும் ஜாலி ஹீரோயின். எதிரெதிர் துருவங்களின் சந்திப்பும், அதில் உருவாகும் கெமிஸ்ட்‌ரியும், குழப்பமும், சுபமான முடிவும் கதை.


படத்தின் ஹீரோ என்று சந்தானத்தை சொல்லலாம். கதைப்படி இவர் தமன்னாவின் தாய் மாமன். ஒ‌ரி‌ஜினலில் துளியூண்டு வரும் இந்த கதாபாத்திரத்தை உறுத்தாமல் தட்டி படம் நெடுக நீட்டியதற்கு தனிப்பாராட்டு இயக்குனருக்கு. இவர் அடிக்கிற ஒவ்வொரு கமெண்டிலும் (உதாரணம், காக்கா பறக்கிற மாதி‌ரி மீசை) கவுண்டர் மணம். இவருக்கு கூட்டணி சிங்கமுத்து. கொட்டி முழக்கியிருக்கிறார்கள்.


ஜப் வி மெட்டின் வெற்றிக்கு முக்கிய காரணம் க‌ரீனா கபூ‌ரின் துறுதுறு நடிப்பு. தமன்னா அதில் தாண்டியிருப்பது பாதி கிணறு. டிடிஆ‌ரிடம் அவர் விடும் ரவுசு ஒருவிதம் என்றால், லாட்‌ஜ் மேனேஜர் மயில்சாமியின் பேச்சின் உள்ளர்த்தம் பு‌ரியாமல் அவருக்கு அப்பாவியாக பதில் சொல்லும் இடம் வெகுளித்தனத்தின் உச்சம். பல நேரம் லூஸோ என்று நினைக்கும்படி அவர் நடந்து கொள்வது உறுத்தல். எனக்கொரு கசின் இருக்கா என்று பரத்தை தேற்றுகிறாரே...


ஆ‌க்சன் படங்களில் நடித்த விளைவா தெ‌ரியவில்லை, சும்மா நிற்கும்போதும் ஒரு விறைப்பு பரத்திடம். சோக ஆசாமியாக்கி முதல் பாதியில் உலவவிட்டிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் அவர் ஜாலிக்கு திரும்பும்போது... ஸா‌ரி டூ லேட். இனிமையான இசை. குறிப்பாக மக்கா மக்கா... கொலவப்போடு கிராமத்து கிக். உறுத்தாத ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்யம். இரண்டாம் பாதியில் எடிட்ட‌ரின் கத்தி‌ரிக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம்.


ஒன்பது மாத உறக்கம் முடிந்து தமன்னாவின் வீட்டில் திடீரென அவரை தேடுவதும், வ‌ரிந்துகட்டி கல்யாண ஏற்பாட்டில் இறங்குவதும், ரசிகர்களுக்கு பாப்கார்ன் இடைவேளை. தமன்னாவின் காதலன் கதாபாத்திரம் சும்மா. அதனாலேயே காதலுக்காக தமன்னா உருகும் போது நம்மால் உச் கொட்ட முடியவில்லை.


தமன்னாவின் கதாபாத்திரம், சந்தானத்தின் சரவெடி... கண்டேன் காதலை ஒருமுறை பார்க்கலாம்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009 04:10

படிப்புகள்: 86

மூணார் - திரை விமர்சனம்

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் நிதிமா. அவருக்கும் வாடகை கார் நிறுவன அதிபர் பிரேம்குமாருக்கும் காதல் மலர்கிறது. நிதிமாவுக்கு பெற்றோர் நிர்ப்பந்தப்படுத்தி தம்பித்துரையை திருமணம் செய்து வைக்கின்றனர். காதல் விஷயத்தை கணவனிடம் சொல்லாமல் மறைக்கிறார்.


இருவரும் மூணாருக்கு தேனிலவு செல்கின்றனர். அங்கு பழைய காதலன் பிரேம் வந்து நிதிதமாவை வலுக்கட்டாயமாக இழுக்கிறார். அவர் கூட்டாளிகள் தம்பித்துரையை மலையில் இருந்து பள்ளத்தில் தூக்கி வீசுகின்றனர். பிறகு கொலை பழி தங்கள் மேல் விழாமல் இருக்க போலீசுக்கு பணம் கொடுத்து சரிகட்டுகின்றனர்.


தம்பித்துரையை பழங்குடியினர் குற்றுயிர் குலையுயிராய் தூக்கி போய் சாமியார் ஒருவரிடம் ஒப்படைத்து காப்பாற்றுகின்றனர். குணமானதும் தன்னை கொல்ல முயன்றவர்களை பழிக்குப் பழிவாங்குகிறார் தம்பித்துரை. அவரை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரி ரஞ்சித் புறப்படுகிறார். கண்டு பிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்...


மூணாறில் சில மாதங்களுக்கு முன் நடந்த நிஜகொலை சம்பவத்தை கருவாக வைத்து கதை பின்னப்பட்டு உள்ளது. மர்ம உருவம் தொடர்ந்து கொலைகள் செய்வது திகில்.. கொலையாளி பற்றி துப்பு துலக்க சி.பி.ஐ. அதிகாரி ரஞ்சித் ஆஜரானதும் விறுவிறுப்பு. விசாரணையில் நிதிமா கணவர் தான் கொலையாளி என தெரிவது திருப்பம்.

 

மூணார் பள்ளத்தாக்கு, சாமியார் மடம் என விசாரணை நீள்வது பரபரப்பு. தம்பித்துரை கொலையாளி வேடத்துக்கு பொருந்துகிறார். நிதிமா மனநோயாளியாக மருத்துவமனையில் பெரும் பகுதி வீணே கழிக்கிறார். அது நடிப்பு என தெரிவது திருப்பம். பிரேம் வில்ல காதலன்.


கே.ஆர்.விஜயா, ஆர்.சுந்தர்ராஜன், ரகசியா, ஓ.ஏ.கே. சுந்தர், வடிவுக்கரசி, வையாபுரி ஆகியோரும் உள்ளனர். படத்தை தம்பித்துரை இயக்கியுள்ளார்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009 04:37

படிப்புகள்: 120

ஆதவன் திரைவிமர்சனம்

கே.எஸ். ரவிகுமார், ஹாரிஸ்ஜெயராஜ் காம்பினேஷன், உதயநிதி ஸ்டாலின் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்க்க போனால், இதுவரை பார்த்த தமிழ் சினிமாக்களை கொண்டு உருவாக்கிய நகைச்சுவை கலந்த குடும்ப படம் என்று சொல்லலாம்.


நொய்டாவில் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க வருகின்ற நீதிபதியைக் கொல்லும் கும்பலின் கதை. நீதிபதியைக் கொல்லவேண்டியதற்கானகாரணத்தை இன்னும் கொஞ்சம் தத்துருபமாகச் சொல்லியிருக்கலாம்.


காசு கொடுத்தால் கொலை செய்யும் ஆதவன். அல்வா சாப்பிடுவது போல் கொலை செய்பவன். ஜட்ஜை கொலை செய்யும் முயற்சியில் ஃபெயிலியர் ஆகிவிட, அதனால் பணம் கொடுத்த ஆள் இவர்களை மிரட்ட, இன்னும் பத்து நாட்களில் அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று அவர்களின் வீட்டோடு இருக்க, வடிவேலுவை மிரட்டி உள்ளே போக, அதற்கு அப்புறம் என்ன நடக்கும் என்று பார்த்தால், பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அடுத்த காட்சி என்னவென்று. அவ்வள்வு அற்புதமான திரைக்கதை.


நீண்ட நாட்களுக்குப் பின்னர் வின்னர் கைப்புள்ள போல் நினைவில் நிற்க்கும் பனர்ஜி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சூர்யாவுடன் செய்யும் அலும்புகள் அதிலும் அவ்ரா பாலத்தில் இவர் செய்யும் கூத்துகள் சிரிப்பொலியிலும், ஆதித்யாவிலும் இனி அடிக்கடி ஒளிபரப்பாகும். துணைக்கு வேறு ஒருவரையும் வைத்திருக்காமல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதையுடனும் கதாநாயகனுடன் சேர்ந்து கலக்கி எடுத்திருக்கிறார். நயன்ந்தாரா வழக்கம் போல் சிட்டாக இருந்தாலும், முகத்தில் தான் கிழடு தட்டி இருக்கிறது. மற்றபடி படம் பூராவும் ஒரு மூன்று குடும்பம், அதன் குழந்தை குட்டிகள், குடும்பமாய் பாட்டு, என்று இருந்து கொண்டு வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.


கேஎஸ்.ரவிகுமார் திரைக்கதையுடன் வசனத்தையும் எழுதியிருக்கின்றார். ஏற்கனவே பார்த்த சில படங்களின் திரைக்கதை போல் இருந்ததாலும் அதிலும் சில காட்சிகள் வாரணம் ஆயிரம், அயன் போன்ற படங்களில் சூர்யாவே செய்தவை. அடுத்து வரும் வசனத்தையும் காட்சியையும் முன் கூட்டியே சொல்லுகின்ற அளவுக்கு ஒன்றுமில்லை. அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என இலகுவாக ஊகிக்கூடிய காட்சிகள். போரடிக்காமல் திரைக்கதையை ரவிகுமார் அமைத்திருந்தாலும் இறுதிக் காட்சியில் தடுமாறி சொதப்போ சொதப்பு எனச் சொதப்பிவிட்டார். ஒருவேளை தீபாவளிக்கு வெளியிடவேண்டும் என்ற அவசரத்தில் தடுமாறிவிட்டாரோ தெரியவில்லை.


தசவாதாரத்தில் காட்டிய பிரமாண்டம் இப்படத்தில் இல்லாவிட்டாலும் பல இடங்களில் லாஜிக் மீறி குருவியில் விஜய் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்க்குப் பாய்வது போல் சூர்யாவையும் பாயவிடுகின்றார். இறுதிக்காட்சியில் சொதப்பியது மிகப்பெரிய பலவீனம். முன்பாதிவரை ரவிகுமார் படம் என நினைக்கவைத்தவர் பின்பாதியில் லாஜிக் இல்லாமல் மாஜிக் காட்டியிருக்கின்றார்.


கணேசின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகு. கொல்கத்தாவை அழகாகப் படம் பிடித்திருக்கின்றார். அவ்ரா பாலமும் அதனைச் சூழந்த நீர்நிலைக் காட்சிகளும் குளிர்மை.


ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை வானொலிகள் மூலம் கேட்டாலும், பின்னணி இசையில் அவ்வளவாக சோபிக்கவில்லை. முதல் சண்டையில் தகரக் கடைக்குள் யானைகள் புகுந்தது போல் அவ்வளவு சத்தம். நல்ல இனிமையான பின்னணி கொடுக்க காதல் காட்சிகள் இல்லையென்பதும் இன்னொரு குறை.

டான் மேக்ஸின் படத்தொகுப்பு படத்திற்க்கு இன்னொரு பலம். சில பார்த்த காட்சிகள் தான் என்றாலும் போராடிக்காமல் தொகுத்திருக்கின்றார்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009 01:04

படிப்புகள்: 161

ஈரம் - விமர்சனம்

நடிப்பு: ஆதி, சிந்துமேனன், நந்தா, சரண்யா மோகன்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா

இசை: எஸ் தமன்

இயக்கம்: அறிவழகன்

தயாரிப்பு: எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர்

பிஆர்ஓ: நிகில் முருகன்

மிரட்டலான படம் என்று இந்தப் படத்தைச் சொல்ல முடியாது. பல ஆங்கிலப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த விஷயங்கள்தான். ஆனால் நம்பகமான கதைப் பின்னணி மற்றும் நல்ல உருவாக்கம் மூலம் ஈரம் நம்மையும் நனைத்துவிடுகிறது.

சிந்து மேனனின் கல்லூரித் தோழர் ஆதி. நட்பு கவிதையான சில சந்திப்புகளுக்குப் பின் காதலாகிறது. அடுத்து கல்யாணத்துக்குப் போகும்போது சிந்துவின் தந்தை ஆதியின் வேலையைக் காட்டி (போலீஸ்) பெண்  தர மறுக்க, நந்தாவுக்கு கழுத்தை நீட்டுகிறார் சிந்து.

சந்தேகப் பேர்வழியான நந்தாவிடம் சீரழிகிறது சிந்துவின் வாழ்க்கை. அக்கம்பக்கத்து மனிதர்களும் அவரவர் சொந்த லாபங்களுக்காக சிந்துவைப் பற்றிய தங்கள் கற்பனைகளை நந்தாவிடம் போட்டுக் கொடுக்க, ஒரு நாள் சைக்கோத்தனத்தின் உச்சத்துக்குப் போய் கொன்றே விடுகிறார் நந்தா.

இந்தக் கொலைக்குப் பின், பழிவாங்கலை ஆரம்பிக்கிறது சிந்துவின் ஆவி. அதற்கு தண்ணீரை மீடியமாகத் தேர்ந்தெடுக்கிறது. அடுத்தடுத்து நிகழும் நூதன மரணங்கள் சின்னப் பசங்களை நிஜமாகவே டென்ஷனாக்கும் சமாச்சாரம்.

ஆரம்பக் காட்சிகள் மனதுக்குள் பெரும் ஆச்சரியக் குறிகளை எழுப்பும் அளவு திறமையாக, இறுக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண் சமையலறைக் குழாயைத் திறக்கிறார். தண்ணீர் வரவில்லை. சலிப்புடன் மிக்சியைப் போடுகிறார். மின்சாரம் இல்லை. அப்போது போன் ஒலிக்கிறது. போய் எடுத்துப் பேசுகிறார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தண்ணீர் வருகிறது. ஸிங்க் நிரம்பி, ஒரு கரண்டி நுனி வழியாக சமையலறையில் வியாபித்து ஹால்வரை பரவுகிறது.

சில நொடிகளில் மின்சாரமும் வந்துவிடுகிறது. தண்ணீர், மின்கம்பி அறுந்திருக்கும் ஒரு பகுதிக்கும் அந்தப் பெண்மணி பேசிக்கொண்டிருக்கும் இடத்துக்கும் பரவுகிறது. தண்ணீர் விரைந்து அந்தப் பெண்ணின் குதிகாலை முத்தமிட… ஆ…! அடுத்த நொடி மரணப் படுக்கையில் பிணமாக அந்தப் பெண்!

தியேட்டர் பாத்ரூமில் 'அருவமாக' ஆனால் தண்ணீரில் கால் தடங்கள் பதிய ஆவி நடந்து போகும் காட்சி நிஜமாகவே மிரட்டல் . ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஆவி ஆராய்ச்சி மையம் என்றெல்லாம் இழுக்கும்போது சற்று சோர்வு தட்டிவிடுகிறது.

சிந்துமேனனின் ஆவி தங்கை வடிவில் வந்திருப்பதை முதல்முறையாக ஆதி உணரும் அந்தக் காட்சி மனதைச் சில்லிட வைக்கிறது.

படம் முழுக்க ஈரம் ஒரு காரெக்டராகவே பயணிக்கிறது. அதை இயல்பாக காட்ட முயற்சித்திருப்பது ஒரு த்ரில்லர் கவிதை.

ஆதி... தமிழுக்கு அட்டகாசமான புதிய நாயகன் கிடைத்துள்ளார். வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொணடால் சூர்யாவையே ஓரம்கட்டிவிடும் அசாத்திய திறமைசாலி இளைஞராகத் தெரிகிறார்.

வசன உச்சரிப்பிலும் அத்தனை நேர்த்தி. தென்னிந்திய சினிமாவில் பெரிய உயரங்களைத் தொடப் போகும் இளைஞர் என்பதற்கான அத்தனை அறிகுறியும் தெரிகிறது.

பக்கா திருச்சி  மிடில்கிளாஸ் பெண் வேடத்தில் அச்சாகப் பொருந்துகிறார் சிந்துமேனன். நந்தா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, அதில் விஷம் கலந்திருப்பதை அறிந்ததும் சோர்வு, ஆற்றாமை, உயிரைப்பிரியும் வலி அனைத்தையும் ஒரே ப்ரேமில் அவர் காட்டியிருக்கும் விதம் முதல் தரம்.

நந்தாவிடமிருந்து மிகமிக இயல்பான வில்லத்தனம் வெளிப்பட்டுள்ளது. சைக்கோ வில்லத்தனத்தை ரகுவரனுக்குப் பிறகு இத்தனை சிறப்பாகக் காட்டியிருப்பவர் நந்தாதான்!

தங்கை வேடத்தில் வரும் சரண்யா மோகனிடம் பளிச் நடிப்பு..

தமனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. ஆனால் பின்னணி இசை கைகொடுத்துள்ளது. மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு இயக்குநருக்கு பெரும் பலம்.

 

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2009 02:13

படிப்புகள்: 116

உன்னை போல் ஒருவன் - விமர்சனம்

நடிப்பு: கமல்ஹாஸன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராம், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜா
ஒளிப்பதிவு: மனோஜ் சோனி
இசை : ஸ்ருதிஹாஸன்
எடிட்டிங்: ராமேஷ்வர் பகவத்
கலை: தோட்டா தரணி
இயக்கம்: சக்ரி டோலட்டி
தயாரிப்பு: கமல்ஹாஸன், சந்திரஹாஸன், ரோனி ஸ்க்ரூவாலா
மக்கள் தொடர்பு: நிகில்

குத்துப் பாட்டு, வெட்டி அரட்டை, அசட்டுத்தனமான காதல் வழிசல், க்ளைமாக்சுக்கு முன்பு ஒரு தாறுமாறான ரொமான்டிக் பாட்டு… என்று இல்லாமல். 4 மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்களை, அதுவும் சில கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி வரும் கதையை மிக அருமையாக செதுக்கி உள்ளனர்.

“தீவிரவாதத்தின் விளைவுகள் உடனடியாக மக்களைத் தாக்குகின்றன… ஆனால் அந்தத் தீவிரவாதத்தைத் தந்தவர்களுக்கோ தண்டனைகள் தாமதமாக, வலிக்காமல் வழங்கப்படுகின்றன… தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே…” என்ற ஒரு தனிமனிதனின் கோபம்தான் ‘உன்னைப்போல் ஒருவன்’

ஒரு நாள்  போலீஸ் கமிஷனருக்கு(மோகன்லால்) ஒரு போன் அழைப்பு வருகிறது, பேசும் நபர் வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு சாதாரண வெகுசன மனிதன்(கமல்ஹாசன்), நகரத்தில் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும் குண்டுகள் இன்னும் சில மணி நேரத்தில் வெடிக்க போவதாகவும் அது நடக்கமால் இருக்க சிறையில் உள்ள தீவிரவாதிகளை வெளியே விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
முதலில் இந்த போன் காலை அலட்சியமாக கருதினாலும், இரண்டாவதாக வரும் கால் police headquarters எதிரே குண்டுகள் வெடிக்க போவதாக மிரட்டுகிறது. இதன் பிறகு படம் சும்மா ஜெட் வேகத்தில் நகருகிறது. இந்த வேகம் படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம்

வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சி வசனம், சூப்பர்ப்.. ஆங்கில, ஹிந்தி வசனங்களின் ஆளுமை ஆங்காங்கே தலைகாட்டினாலும் இயல்பாகவே இருக்கிறது.

நடிப்பு என்று வரும் போது படத்தில் நடித்த, கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் பரத் ரெட்டி, அபியும் நானும் கணேஷ், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், எல்லோருமே தங்கள் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல என்பதால் எதை எப்படி சொல்லி பாராட்டுவது என்றெ தெரியவில்லை. பல இடங்களில் சின்ன சின்ன உடல் மொழிகளீன் மூலம் அவரின் விருப்பு, வெறுப்புகளை வெளிபடுத்துவதும், க்ளைமாக்ஸ் காட்சியில் தான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் விளக்கும் காட்சியில் அவரின் செய்கைக்கான ஞாயத்தை சொல்லும் இடம் ஆஹா.. ஸ்பெல்பவுண்ட் என்றால் அது மிகையில்லை.. சமூகத்தின் மேல் உள்ள கோபம், ஆத்திரம், இயலாமை, துக்கம், அழுகை, பின்பு அதை மென்று விழுங்கி மீண்டும் ஆளுமையான குரலில் பேசும் அந்த காட்சி அற்புதம். பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதும், ஹாட்ஸ் ஆப் கமல்.

அதே போல் மோகன்லால், மிகவும் சப்டூயூட் ஆக்டிங்.. இவரும் தன்னுடய உணர்வுகளை மிக அழகாய் தன் உடல் மொழியிலேயே வெளிபடுத்துகிறார். சில இடங்களில் அவரை மடக்கும் சீப் செக்கரட்டரி லஷ்மியை எதிர்க்கும் நேரத்தில் காட்டும் கண்ட்ரோல்ட் அரகன்ஸ் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். தன் கீழே வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகளிடம் ஆர்டர் போடும் போதும், காட்டும் அதிகாரம், பின்பு அவர்களிடம் காட்டும் பரிவை கூட தன்னுடய் குரல் மாடுலேஷனில் வெளிப்படுத்தும் அழகு அருமை.

அதே போல் போலீஸ் ஆபீசராய் வரும் டூயூட்டி பவுண்ட் பரத் ரெட்டியும், அதிரடி போலீஸ் காரனாய் வரும் கணேஷும், சரியாய் பொருந்தியிருக்கிறார்கள்.

முதல்மைச்சரின் வீட்டுக்கு, நம்முடய முதலமைச்சரின் வீட்டையும், குரலுக்கு அவரது குரலை போலவே மிமிக்ரி குரலை உபயோகித்து இருப்பது க்மலின் தைரியத்தையே காட்டுகிறது.

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு அருமை. அதிலும், ரெட் ஒன்னின் 4கே துல்லியம் படத்தில் எலலா இடஙக்ளில் தெரிகிறது. படத்தின் மூடுக்கேற்ற ஒளிப்பதிவு.

ஸ்ருதிஹாசனின் பிண்ணனி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஆப்டாக அமைந்திருக்கிறது. படத்தில் பாடல்கள் கிடையாது ஆங்காங்கே சின்ன, சின்ன இடங்களில் பிண்ணனி இசையில் ஆர்.ஆராக உபயோகபடுத்தியிருக்கிறார். எங்கெங்கே பிண்ணனி இசை தேவையில்லை என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கும் ஸ்ருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

படத்தில் கமல், மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்களால லார்ஜர் தென் லைப் கேரக்டர்களிலேயே பார்த்து பழகி போன மக்களுக்கு இவர்களின் நடிப்பு அப்படியே தோன்றும். ஆனால் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அதையெல்லாம் மறக்கடிக்கும் திரைக்கதையுடன் நாமும் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது.. ஆங்காங்கே.. சின்ன, சின்ன இடங்களில் அதையெல்லாம் பார்த்தால் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று காத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009 01:07

படிப்புகள்: 136

மதுரை சம்பவம்

தாதாக்களுக்கும் என்கவுண்டர் பெண் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதலே கதை.
 
இறைச்சி கடை நடத்தும் தாதா ராதாரவி. போதை பொருள் கடத்தல், கள்ளச்சாராயம் என சம்பாதிக்கும் அவன் ஏழைகளுக்கும் வாரி வழங்குகிறார். மகன் ஹரிகுமாரும் மருமகனும் அவருக்கு உதவியாய் இருக்கின்றனர்.
 
ராதாரவிக்கும் காதல் தண்டபாணிக்கும் தொழில் போட்டி வருகிறது. தண்டபாணியின் கள்ளச்சாராய வியாபாரத்தை ஹரிகுமார் அழிக்கிறார். எம்.பி.யாகும் அவர் ராதாரவி குடும்பத்தை அழிக்க போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து திட்டமிடுகிறார் அரசுக்கும் அறிக்கை அனுப்புகிறார்.
 
இதையடுத்து என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுயா அவ்வூருக்கு வரவழைக்கப்படுகிறார். ஹரிகுமாருக்கும் அனுயாவுக்கும் மோதல் ஏற்பட்டு காதலாகிறது. ரவுடி தொழிலை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். இன்னொரு புறம் ராதாரவியும் அவர் மருமகனும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். ஹரிகுமாரையும் தீர்த்துகட்ட திட்டம் நடக்கிறது. கொலையாளி யார்? ஹரிகுமார் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்...
 
அதிரடி ஆக்ஷனில் காதலை புகுத்தி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் யுரேகா. இறைச்சி கூடத்தில் கட்ட பஞ்சாயத்து கொலைகள், கடத்தல் பிசினஸ் என்பது வித்தியாசமான களம். ராதாரவி கேரக்டருக்கு கச்சிதமாய் பொருந்துகிறார். இளம் பெண்ணை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளிக்கு அளிக்கும் தண்டனை திக்... ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவே இந்த சமூக விரோத செயல்கள் என அவர் நியாயம் கற்பிப்பது சினிமாத்தனம்.
 
ஹரிகுமார் அதிரடி நாயகனாக பொளந்து கட்டுகிறார் எதிரியின் சாராய உறலை எரித்து அடியாட்களை துவம்சம் செய்யும் ஆரம்பமே அட்டகாசம்... போலீஸ் அதிகாரி அனுயா மேல் காதல் வயப்பட்டு அவரை முத்தமிடுவது “கிளுகிளுப்பு” காதலி முன்னால் அடங்கிப்போவது அவர் சொல்படி தந்தையை போலீசில் சரணடைய வைப்பது அழுத்தமானவை. கிளைமாக்சில் போலீஸ் காதலிதான் தந்தை, அத்தான் இருவரையும் கொன்றவர் என தெரிந்து அதிர்வதும்... ஆவேசமாகி சுட்டுக்கொல்வதும் உதறல் திருப்பங்கள்.
 
அனுயா அழகும் கடுகடுப்புமான போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஹரிகுமார் குடும்பத்துடன் நட்பாக பழகும் அவர் ரவுடிகளை ஏவி ராதாரவி மருமகனை கொல்வதும்.. ராதாரவியை வேனில் இருந்து இறக்கி சுட்டுத்தள்ளுவதும் பயங்கரம்.
 
கார்த்திகாவுக்கு வேலை இல்லை. காதல் தண்டபாணி ஆவேசமாக வந்து அநியாயமாய் சாகிறார். ஆனந்த்பாபுவின் அடியாள் பாத்திரம் வலுவானது. பொன்னம்பலம் காமெடியான குரூர வில்லன். பழைய தாதா கதையென்றாலும் காட்சியமைப்பின் வித்தியாசம் ஒன்ற செய்கிறது. ஜான் பீட்டர் இசை, சுகுமார் ஒளிப்பதிவு பலம்.

 

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 14 செப்டம்பர் 2009 00:22

படிப்புகள்: 101

நினைத்தாலே இனிக்கும்

நட்பு, காதல், பகை, கொண்டாட்டம் அனைத்தும் கலந்த கேம்பஸ் வாழ்க்கை, நினைத்தாலே இனிக்கும். ஒரே கல்லூ‌ரியில் படித்தவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே கல்லூரியில் ஒன்று சேர்கிறார்கள்.

நெகிழ்வான இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கொலை முயற்சி நடக்கிறது. அந்த கொலை முயற்சி எட்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலையை சொல்கிறது. அந்த கொலை யாருக்கும் தெ‌ரியாத ஒரு காதலை வெளிப்படுத்துகிறது.

படிக்க சுவாரஸியமாக தெ‌ரியும் இந்த‌க் கதை மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட் படத்திலிருந்து எடுத்தது. கிளாஸ்மேட் படத்தின் தமிழ் ‌‌ரீமேக், நினைத்தாலே இனிக்கும்.

ஒரு ‌ரீமேக்கை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தப் படத்தை சொல்லலாம். மலையாளத்தில் திட்டமிட்டு செதுக்கிய கதாபாத்திரங்களின் குணாம்சங்களை தமிழ்ப்படுத்துகிறேன் என்று சிதைத்திருக்கிறார் இயக்குனர். கந்தலாக்கப்பட்டிருக்கின்றன காட்சிகளும்.

பாடல்களின் வ‌ரிகளை‌ப் பு‌ரிந்து அதனை யாரேனும் ஹம் செய்தால் அவருக்கு இசையரசர் பட்டம் தரலாம். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. ஆனால் மற்ற காட்சிகளில்? காட்சிகள் நடப்பது காலையா, மதியமா, மாலையா இல்லை இரவா என்பதை பி‌ரித்தறிய முடியாதபடி கிரேடிங்கில் ஒரே கலரை தீய்த்திருக்கிறார்கள்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் கதாபாத்திரங்களின் தோற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை. எட்டு நாள் கழித்து சந்திப்பதுபோல் இருக்கிறார்கள் அனைவரும்.

ப்‌ரியாமணி பிருத்விராஜை எதிர்த்து தேர்தலில் நிற்பதற்கு சொல்லும் காரணத்தில் வலுவில்லை. கார்த்திக் குமார் கிளைமாக்ஸில் திருந்துவது பக்கா சினிமாத்தனம். ஷக்தி அமுல்பேபி. அவரது மரணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில், நினைத்தாலே இனிக்கும்… நினைத்தாலே கசக்கும் அனுபவம்.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2009 04:58

படிப்புகள்: 100