Dinaithal - தினஇதழ்

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ் ஆதரவுடன் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கத் தயாராகவுள்ள நிலையில், முந்தைய 15 ஆண்டில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து புதிய அரசு விசாரணை நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி கூறியதாவது:

"ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதில் மாற்றம் ஏதுமில்லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 13-ஆம் தேதியே துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராகப் போராடுவது எந்தவொரு முதல்வருக்கும் கடமையாகும். இருப்பினும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்' என்றார்.
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனுமான சந்தீப் தீட்சித் கூறியதாவது:

"ஆம் ஆத்மியும், காங்கிரஸூம் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்வதாகக் கூறுவதை ஏற்க முடியாது. தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு கனவுத் திட்டங்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் அக் கட்சிக்கு 28 இடங்களில் வெற்றி பெற வாக்களித்துள்ளனர். அத் திட்டங்கள் நிறைவேறினால் தில்லி பிரதேசத்துக்கு நல்லது என்றே காங்கிரஸூம் கருதுகிறது, என்றார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?