Dinaithal - தினஇதழ்

விரைவில் கவிழும் ஆம் ஆத்மி அரசு -பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்

விரைவில் கவிழும் ஆம் ஆத்மி அரசு -பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்

விரைவில் கவிழும் ஆம் ஆத்மி அரசு -பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டு பேசியதாவது.


ஊழல் இல்லாத அரசியலை பற்றி பேசும் ஆம் ஆத்மி கட்சி, ஊழலில் திகைத்துப்போன காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தவறானது.. மேலும் இந்த கூட்டணி இரு கட்சிகளின் முரண்பாடுகளாலேயே கவிழ்ந்து விடும் சூழல் விரைவில் ஏற்படும் . எனவே இடைத்தேர்தலுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஷீலா தீட்சித் அரசில் நடைபெற்ற ஊழல்கள் ஆம் ஆத்மி கட்சி விசாரிக்கும்போது தான் இரு கட்சிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் டெல்லி பொது மக்களுக்கு தெரியவரும்.மேலும் ஆம் ஆத்மி அரசானது தவறு செய்தவர்களை கட்சி பாகுபாடு இன்றி விரைவில் தண்டிக்க வேண்டும்.டெல்லிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத்தர வேண்டும் என உரையாற்றினார்.

மெட்ரோ ரெயிலில் பயணம்

பதவி ஏற்பு விழாவுக்கு கெஜ்ரிவால் மெட்ரோ ரெயிலில் செல்வதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும். அவர் நீண்ட காலமாகவே துவாரகாவில் படித்து வரும் அவருடைய பிள்ளைகளை மெட்ரோ ரெயிலில் சென்று தான் பார்த்து வருகிறார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?