Dinaithal - தினஇதழ்

இலக்கை தாண்டி விண்ணப்பங்கள் விற்பனை அதிமுக லோக்சபா தேர்தல் வருமானம் 11 கோடி

இலக்கை தாண்டி விண்ணப்பங்கள் விற்பனை அதிமுக லோக்சபா  தேர்தல்  வருமானம் 11 கோடி

இலக்கை தாண்டி விண்ணப்பங்கள் விற்பனை அதிமுக லோக்சபா தேர்தல் வருமானம் 11 கோடி

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனு வாங்கும் பணி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இம்மாதம், 19ம் தேதி துவங்கியது.விண்ணப்ப கட்டணமாக, 25,000 ரூபாய் கொடுப்போருக்கு மட்டும், விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. தொகுதிக்கு, 100 விண்ணப்பம் வீதம், 4,000 விண்ணப்பம் விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததுஅ.தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, 4,500 பேர் மனு கொடுத்துள்ளனர். விண்ணப்பப் படிவம் விற்பனை மூலம், 11 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி, பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது.

விண்ணப்ப விற்பனை மூலம், 11.25 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இலக்கை தாண்டி, விருப்ப மனு விண்ணப்பங்கள் விற்பனையானது, கட்சி நிர்வாகிகளிடம், பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?