Dinaithal - தினஇதழ்

கூட்டணி அரசை வழிநடத்து விதம் காங்கிரஸ் அதிர்ச்சி-கெஜ்ரிவால் அதிரடி

கூட்டணி அரசை வழிநடத்து விதம் காங்கிரஸ் அதிர்ச்சி-கெஜ்ரிவால் அதிரடி

கூட்டணி அரசை வழிநடத்து விதம் காங்கிரஸ் அதிர்ச்சி-கெஜ்ரிவால் அதிரடி

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூட்டணி அரசை வழிநடத்துவது எளிதான வேலை இல்லை எனவும்  தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதில் அதிக கவனம் கொள்ள வேண்டும். மேலும் கூட்டணி அரசை எவ்வாறு சுமூகமாகவும், சிறப்பாகவும் நடத்த வேண்டும் என்பதில் மன்மோகன் சிங்கை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனஆம் ஆத்மி கட்சிக்கு அறிவுரை கூறினார். .

சாலையோர மக்கள் புகார்

டில்லியில் நேற்று பொது மக்கள் பலர் முதல்வர் கெஜ்ரிவாலை அவரது வீட்டிற்கு சென்று பார்த்து குறைகளையும் தங்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கூறினர். இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசு தங்களை புறக்கணித்து விட்டதாக தெரிவித்தனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களின் குற்றச்சாட்டுக்களும், ஆட்சி பொறுப்பேற்ற முதல் கெஜ்ரிவால் செய்த அதிரடியாக மாற்றங்களும் காங்கிரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஷிண்டேவின் பேச்சு காங்கிரசின் அச்சத்தை வெளிபடுத்திவுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவை எந்நேமும் விலக்கி கொள்ள வாய்ப்பு இருப்பதும், ஆதரவை காரணமாக வைத்து கெஜ்ரிவால் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதும் தெளிவாகி உள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?