Dinaithal - தினஇதழ்

அழகிரி ஆதரவாளர்களுக்கு கலைஞர் எச்சரிக்கை

அழகிரி ஆதரவாளர்களுக்கு  கலைஞர் எச்சரிக்கை

அழகிரி ஆதரவாளர்களுக்கு கலைஞர் எச்சரிக்கை

மதுரையில் தி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி எம்.பி.யின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிர்வாகிகள் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

சுவரொட்டியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கலைஞர் அரங்கத்தில் ஜனவரி 30–ல் நடைபெற இருப்பதாகவும், கழகம் வளர இனி ஒரு விதி செய்வோம் என்ற வாசகங்களுடன் பொதுக்குழு கூட்டத்தில் மு.க.அழகிரியும் அமர்ந்திருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கலைஞர் எச்சரிக்கை விடுத்து வெளியிட்ட அறிக்கை :-


"இனி ஒரு விதி செய்வோம்" என்ற தலைப்போடு மதுரை தோழர்கள் அன்பரசு, இளங்கோவன், கீரிப்பட்டி செந்தில் ஆகியோருடைய பெயரில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கலைஞர் அரங்கத்தில், ஜனவரி 30, 2014 என்ற தேதியில் நடைபெறுவதாக போலி வண்ணச் சுவரொட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, என் பார்வைக்கும், பொதுச் செயலாளர் பேராசிரியர் பார்வைக்கும் வந்தது.

தி.மு.க. பொதுக்குழு ஜனவரி 30, கலைஞர் அரங்கத்தில் நடைபெறுவதாக அந்தச் சுவரொட்டியில் விளம்பரப்படுத்தியிருப்பதையும், அந்தச் சுவரொட்டியை ஒட்டி வேறுபல கருத்துக் கள் விஷமத்தனமாக அச்சிடப்பட்டு மதுரை மாநகரில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விஷமத்தனமான செயலை கழகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்பதற் காகவே செய்திருக்கிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

ஏனென்றால் 15.12.2013 அன்று நடந்த பொதுக் குழுவில் கலந்து கொள்ளாத மு.க.அழகிரியின் படமும், சுவரொட்டி விளம்பரத்தில் இணைக்கப் பட்டிருப்பது விஷமத்தனமானதும், விஷக் கருத்தை தி.மு.கழகத்தின் மீது பரப்புவதற்கு சிலர் செய்த திட்டமிட்ட சதி என்றும், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி வளர்ந்து வரும் இந்தக் கழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேரம் பார்த்து நஞ்சு கலக்கும் செயல் என்றும் நான் கருதுவதாலும்

இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டவர்கள் கழகத்தை உயிராகக் கருதும் என் போன்றவர்களின் மனத்தையும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் மனத் தையும் புண்படுத்துவதாலும், உடனடியாக அவர்களின் விரும்பத்தகாத இச்செயலுக்கு மன்னிப்புக் கேட்டு அதனை வெளிப்படை யாகத் தெரிவிக்காவிட்டால் அவர்கள் கழகத்திலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படு வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என செய்தி குறிப்பு வெளியிடபட்டுவுள்ளது

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?