Dinaithal - தினஇதழ்

பிரதமரின் கருத்துக்கு பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம்

பிரதமரின் கருத்துக்கு பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம்

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டிற்கு பேரழிவு உண்டாகும் என்று கூறினார்.

இந்நிலையில் பிரதமரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில்


குஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னரும் பிரதமர் இவ்வாறு கூறுவது துரதிஷ்டவசமானது. மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ந்துள்ளது என ஏற்கனவே கூறி உள்ள பிரதமர், தற்போது மோடி குறித்து கூறி உள்ளது கண்டனத்திற்குரியது.


தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நன்றாக செயல்பட்டது என்று கூறியது மிகவும் நகைப்புக்குரியது.

மேலும் தேசபாதுகாப்பு குறித்தும் ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு பிரதமர் மேம்போக்காகவே கருத்து கூறி உள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு, வெளிநாட்டு பிரச்னை ஆகியவற்றை பற்றி அவர் குறிப்பிடவில்லை எனக் கூறியுள்ளார்.

இது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது

நரேந்திர மோடி குறித்து மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராதாகிருஷ்ணன்,மன்மோகன் சிங்கின் கருத்து அவரது கருத்து அல்ல என்றார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் என்பது பிரதமருக்கு தெரியாதது அல்ல என்று கூறிய ராதாகிருஷ்ணன், தோற்கக் கூடிய காங்கிரசுக்கு தலைமை ஏற்க மன்மோகன் சிங் தயாராக இல்லை என்றார்.

இதனால் தான் மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை என்ற மன்மோகன் சிங்கின் முடிவு நாட்டுக்கு நன்மை பயக்கும் என பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?