Dinaithal - தினஇதழ்

பா.ஜ., ஆட்சிக்கு வரும் -தேசியவாத காங்., தலைவர் பவார் பேட்டி

பா.ஜ., ஆட்சிக்கு வரும் -தேசியவாத காங்., தலைவர் பவார் பேட்டி

பா.ஜ., ஆட்சிக்கு வரும் -தேசியவாத காங் தலைவர் பவார் பேட்டி

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில்பா.ஜ 3 மாநிலங்களில் தனித்து ஆட்சியையும், டெல்லி யில் அதிக இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதுகுறித்து தேசியவாத காங் தலைவரும் மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் கூறியதாவது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில், பா.ஜ ஆட்சியில், ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளன . இதனால், அந்த மாநிலங்களில், மீண்டும் பா.ஜ., தான், ஆட்சிக்கு வரும் என முன் கூட்டியே தெரியும்.

ஆனால் ராஜஸ்தான், டில்லி மாநிலங்களில் ஆட்சி நடத்திய காங்கிரஸ், திட்டங்களை சரியாக நிறைவேற்றவில்லை. இதனால் தான், அங்கு, அந்த
கட்சி ஆட்சியை பறிகொடுத்து உள்ளது.

மேலும் கட்சிப் பணிகளில் அதிக நேரத்தை செலவிடுவதற்காக லோக்சபா தேர்தலில், இனி, போட்டியிடுவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என பரபரப்பு ஏற்படுத்தினார்.


ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, இன்னும் முடிவு எடுக்கவில்லை எனவும். சமீபத்தில் நடந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது.

தேர்தல் முடிவுகள் தோல்விகாண காரணத்தை, அந்த கட்சியினர் கண்டறிய வேண்டும். அதை விடுத்து தேர்தல் முடிவுகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. உறுதியான முடிவுகளை எடுக்க கூடிய தலைவர்களைத் தான் மக்கள் விரும்புகின்றனர்.என சரத் பவார் தெரிவித்தார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?