Dinaithal - தினஇதழ்

தேவையில்லாத விஷயங்களை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை மு.க.அழகிரி குறித்து மு.கஸ்டாலின்

தேவையில்லாத விஷயங்களை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை மு.க.அழகிரி குறித்து மு.கஸ்டாலின்

தேவையில்லாத விஷயங்களை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை மு.க.அழகிரி குறித்து மு.கஸ்டாலின்

திமுக திருச்சி மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த திமுக பொருளாளர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

திருச்சியில் நடக்க உள்ள தி.மு.க. மாநாடு பெரிய திருப்புமுனையை ஏற்படும். இந்த மாநாட்டில் கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். தொண்டர்கள் தங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மாநாட்டு திடலில் திமுக தலைவர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 90 அடி உயரத்திற்கு கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்


மேலும் மதுரையில் தி.மு.க. அமைப்புகள் கலைக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும் எடுத்த முடிவு. அதையே நான் வழிமொழிகிறேன் என்றார்.

மதுரையில் கட்சி கலைக்கப்பட்டது குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை என்றும் அழகிரி கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,

நான் தேவையில்லாத விஷயங்களை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை. தேவையற்ற விஷயங்களை பார்ப்பதுமில்லை படிப்பதுமில்லை என்றார்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர வாய்ப்பு இருக்கிறதா கேட்டதற்கு,

சில கட்சிகள் ஏற்கனவே எங்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிறது. மேலும் இந்த மாநாட்டிற்கு பிறகு சில கட்சிகள் எங்களோடு கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறேன். எங்களோடு கூட்டணி சேருவது பற்றி விஜயகாந்த் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?