Dinaithal - தினஇதழ்

காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி

புதுடெல்லியில் இன்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு மூத்த தலைவர்களை சந்தித்தார்.ஆனால் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. பிரியங்கா காந்தி கூட்டத்தின் கடைசி 5 நிமிடங்களில் மட்டுமே கலந்து கொண்டார். மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜனார்தன் திவேதி,ஜெய்ராம் ரமேஷ், மேலும் பல காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தியின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் இறுதி செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் 4மாநில தேர்தல் தோல்வியை தொடரந்து சில அமைச்சர்களை கட்சி பணிக்கு அனுப்ப ஆலோசனை மேற்கொள்ளபட்டது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்காபோட்டியிடப்போவதில்லை என்ற போதிலும், பிரசாரத்திற்கு தலைமை ஏற்பார் என்று கூறப்படுகிறது. மேலும் சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும் ரேபரலி, அமேதி தொகுதிகளில் பிரியங்கா கூடுதல் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?