Dinaithal - தினஇதழ்

தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு இளங்கோவன் பேட்டி

தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு இளங்கோவன்  பேட்டி

பஜாக போல் நடளுமன்றதிற்கான பிரசாரத்தின் முன் ஏற்பாடக கிராமம் தோறும் காங்கிரஸ் இல்லந்தோறும் கை சின்னம் என்ற காங்கிரசின் கட்சி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

சென்னையில் இன்று எம்.எம்.டி.ஏ. காலனி, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஞானதேசிகன் காங்கிரஸ் கொடியேற்றி வைத்தார்.

இதில் காங்கிரசின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:–

காங்கிரசை யாரும் தனிப்படுத்திவிட முடியாது. எனவே தான் முன்பை விட அதிகமாக காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு கூட்டம் வருகிறது. காங்கிரசை ஒழிப்போம் என்ற மோடியைப் பற்றிய பல விஷயங்கள் இப்போதுதான் வெளியே வந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 6 பேர் பிரதமர் வேடம் போட்டு கண்ணாடி முன் பார்த்துக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள். காங்கிரசை பொருத்தவரை தனித்தே தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. கூட்டணி பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மாநில தலைவர் ஞானதேசிகன் பேசுகையில் அகில இந்திய அளவில் மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியது மேலிடத்தின் பொறுப்பு. தமிழகத்தில் கூட்டணி பற்றியே யோசித்துக்கொண்டு இருந்ததால் காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்தது. இப்போது நமது கடமை கட்சியை வலுப்படுத்துவதுதான். எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினால் அது தமிழ் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்றார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?