Dinaithal - தினஇதழ்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி பாதியில் ரத்து

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி பாதியில் ரத்து

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் தொடர்ந்து ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்துவரும் அவர், சனிக்கிழமை மற்றும் அமைச்சர்கள் வார நாட்களிலும் மக்களின் குறைகளை கேட்டறிவார் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி முதல் மக்கள் சபை கூட்டத்தில் தற்போது மக்கள் குறைகளை முதல்வர் கெஜ்ரிவால் நேரடியாக சந்தித்து கேட்டறிந்து வருகிறார். டெல்லி தலைமைச் செயலகத்தின் வெளியே நடைபெற்று வரும் இந்த மக்கள் சபைக் கூட்டத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதையொட்டி தலைமைச் செயலகத்திற்கு செல்லும் சாலையில் பாதசாரிகள் மட்டும் செல்ல அனுமதிக்கபட்டனர்.


சட்டப்பேரவை எதிரே குறைகளை தெரிவிக்க ஏராளமானோர் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு கருதி, அவரது ஆதரவாளர்கல் கெஜ்ரிவாலை உள்ளே அழைத்துச் சென்றனர்.

பின்னர் தலைமைச் செயலகத்தின் மாடிக்கு வந்த கெஜ்ரிவால், அங்கிருந்தபடியே பொதுமக்களை பார்த்து பேசினார். அப்போது நிர்வாக குறைபாடு காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிட்டதாகவும், இதற்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.மேலும் 5 அல்லது 6 நாட்களுக்கு மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறாது என்று அவர் தெரிவித்தார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?