Dinaithal - தினஇதழ்

பிரதமருக்கு எதிராக இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு : கூடங்குளத்தில் 3, 4வது உலைக்கு ஒப்பந்தம்

பிரதமருக்கு எதிராக இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு : கூடங்குளத்தில் 3, 4வது உலைக்கு ஒப்பந்தம்

பிரதமருக்கு எதிராக இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு : கூடங்குளத்தில் 3, 4வது உலைக்கு ஒப்பந்தம்

 

இது தொடர்பாக, அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறியது:

கூடங்குளத்தில் 3 மற்றும் 4ஆவது அணு உலையை நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் மன்மோகன் சி்ங், ரஷ்யா செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழக, கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமலும், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள அணுஉலைகளில் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அணு உலையில் உற்பத்திக்கான தேதியை பலமுறை அறிவித்தும், அறிவித்தபடி உற்பத்தியே தொடங்கவில்லை.

கூடங்குளம் அணு உலைத் திட்டமே தோல்வியில் உள்ள நிலையில் 3ஆவது மற்றும் 4ஆவது உலைகளுக்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரஷ்யாவுக்கு வரும் 20ஆம் தேதி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு கூடங்குளம் அணு உலை திட்டம் தொடர்பாக அடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். பிரதமரின் இந்த முடிவுக்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?