Dinaithal - தினஇதழ்

2ஜி ஊழல் வழக்கில் 1800 கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார்: ஆ.ராசா அதிரடி

2ஜி ஊழல் வழக்கில் 1800 கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார்: ஆ.ராசா அதிரடி

2ஜி ஊழல் வழக்கில் 1800 கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார்: ஆ.ராசா அதிரடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான 1,800 கேள்விகளையும் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 4 ஆயிரம் பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மேலும் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராசா,

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த 21ஆம் தேதியே தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்திருக்க வேண்டியது. அப்போதே நான் தயாராக இருந்தேன். தற்போது 1800 கேள்விகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

மேலும் இதை தவிர இந்த வழக்கு குறித்த அனைத்து விவரங்களையும் எனது அறிக்கை மூலமாக பத்திரிகைகள் வாயிலாக அனைவருக்கும் தெளிவாக கூறிவிட்டேன் என்றார்.

English summary

i am ready to answer 1800 questions by cbi : a rasa

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?