Dinaithal - தினஇதழ்

மருத்துவ கல்லூரி மாணவியை கடத்தி நடுக்காட்டில் பலாத்காரம் ;கர்நாடகாவில் பெரும் பரபரப்பு

rape-newசாலையில் ஓரம்  நடந்து சென்று கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவியை மர்ம கும்பல் ஒன்று ஆட்டோவில் வந்து  கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியை ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தூக்கில் போடும்படி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில்,  கர்நாடகாவில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 22. இவர் உடுப்பியை அடுத்த மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

தனது தோழிகளுடன் சேர்ந்து இதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியுள்ளார்.நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும், நூலகத்துக்கு சென்று பாட குறிப்புகளை சாந்தினி எடுத்தார். பின்னர், இரவு 11.30 மணிக்கு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை வழி மறித்தனர். கூச்சலிட முயன்ற சாந்தினியின் வாயை துணியால் ஒருவன் மூடினான்.மற்றவர்கள் அவரை ஆட்டோவில் தூக்கி போட்டு கொண்டு மணிப்பால் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அவரை பலமுறை பலாத்காரம் செய்தனர். இதனால், சாந்தினி மயக்கமடைந்தார். பயந்துபோன அவர்கள், சாந்தினியை ஆட்டோவில் கொண்டு வந்து மருத்துவ கல்லூரி வாசலில் வீசிவிட்டு சென்றனர்.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சாந்தினியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆட்டோவில் வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கர்நாடகாவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?