Dinaithal - தினஇதழ்

தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை சி.ஏ.ஜி. தணிக்கை செய்யலாம்

தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை சி.ஏ.ஜி. தணிக்கை செய்யலாம்

தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை சி.ஏ.ஜி. தணிக்கை செய்யலாம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அத்துடன், இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகளை மத்திய தணிக்கைக் குழு ஆய்வு செய்ய முடிவு செய்தது. இதற்காக அந்த நிறுவனங்களின் வருவாய் குறித்த தகவல்களை சி.ஏ.ஜி. கேட்டிருந்தது.

இதையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுப்ரீம் கோட்டில் முறையிட்டன. ஆனால், இந்த வழக்கை மீண்டும் ஐகோர்ட்டுக்கு பரிந்துரை செய்தது சுப்ரீம் கோர்ட்.

அதன்படி ஐகோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மனுதாரர்களின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசுடன் வருவாய் பகிர்வு அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மத்திய தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு உட்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?