Dinaithal - தினஇதழ்

மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள்

மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள்


மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள்

நாட்டின் 16-வது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், சுமார் 34 % பேர், அதாவது மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14-வது மக்களவையில் இந்த எண்ணிக்கை 24 % ஆகவும், 15-வது மக்களவையில் 30 % ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு, மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த தகவல்கள் படி,

16-வது மக்களவைத் தேர்வான 543 உறுப்பினர்களில், 186 பேர் மீது குற்றவழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவில் மட்டும் 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்.பி.க்களில், 8 பேர் மீதும், அதிமுக.வைச் சேர்ந்த 37 எம்.பி.க்களில், 6 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்வான 4 உறுப்பினர்கள் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.

இதனால் குற்றவழக்குகள் கொண்ட எம்.பி.க்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் அக்கட்சி 100 %மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கடுத்தபடியாக, சிவசேனா கட்சி 83%  2-வது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 80%  மூன்றாவது இடத்திலும் உள்ளன.

English summary

16th loksabha has total 186 mp's out of 543 with crime background

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?