Dinaithal - தினஇதழ்

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 உறுப்பினர்களில், 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 உறுப்பினர்களில், 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 உறுப்பினர்களில், 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

16 -வது மக்களவையில் தான் அதிக பெண் உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 61 பேர் பெண்கள். கலைக்கப்பட்ட 15-வது மக்களவையில் 58 பெண்கள் உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது அமைக்கப்பட உள்ள 16-ஆவது மக்களவையில், அதிகபட்சமாக அதிமுக சார்பில் 4 பெண்கள் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய மக்களவை உறுப்பினர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 6 கோடியிலிருந்து 14 கோடியாக அதிகரித்துள்ளது.

543 உறுப்பினர்களில், 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

இந்த மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது 54-ஆக இருக்கிறது. பா ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி மிக அதிக வயதுடையவராகவும்,

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரரின் மகன் அபிஷேக் பானர்ஜி மிக இளையவராகவும் உள்ளார். இவருக்கு வயது 26. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்களில் 75 % பேர் பட்டதாரிகள்.









 


 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us